லியுதேத்தியம்(III) நைட்ரேட்டு (Lutetium(III) nitrate) என்பது Lu(NO3)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். லியுதேத்தியமும்நைட்ரிக் அமிலமும் சேர்ந்து இவ்வுப்பு உருவாகிறது. லியுதேத்தியம்(III) நைட்ரேட்டு நிறமற்ற படிகங்களாகும்.[1]தண்ணீரில் இது கரையும். நச்சுத்தன்மை கொண்ட இச்சேர்மம்[2] படிக நீரேற்றுகளாகவும் உருவாகிறது.
எத்தில் அசிட்டேட்டில் கரைக்கப்பட்ட [[நைதரசனீரொட்சைடு|நைட்ரசன் ஈராக்சைடை 77 பாகை செல்சியசு வெப்பநிலையில் லியுதேத்தியம் தனிமத்துடன் சேர்த்து வினைபுரியச் செய்தால் நீரற்ற லியுதேத்தியம்(III) நைட்ரேட்டு கிடைக்கும்:
Lu + 3N2O4 --> Lu(NO3)3 + 3NO
இயற்பியல் பண்புகள்
லியுதேத்தியம்(III) நைட்ரேட்டு நிறமற்ற நீருறிஞ்சும் படிகங்களாகக் காணப்படுகிறது.
Lu(NO3)3•nH2O என்ற பொது வாய்பாட்டில் சேர்மத்தின் படிக நீரேற்றுகளாக உருவாகிறது. இங்குள்ள n = 3, 4, 5, 6 என்ற மதிப்புகளை கொண்டதாகும்.[3]
வேதிப் பண்புகள்
நீரேற்றப்பட்ட லியுதேத்தியம்(III) நைட்ரேட்டு வெப்பத்தால் சிதைந்து LuONO3 சேர்மத்தை உருவாக்குகிறது. மேலும் சூடாக்கும்போது இது லியுதேத்தியம் ஆக்சைடாக சிதைகிறது.[4]
அம்மோனியம் புளோரைடுடன் சேர்ந்து அம்மோனியம் அறுபுளோரோலியுதேனேட்டு சேர்மத்தை கொடுக்கிறது.
Lu(NO3)3 + 6 NH4F --> (NH4)3[LuF6] + 3NH4NO3
பயன்கள்
லியுதேத்தியம்(III) நைட்ரேட்டு உலோக லியுதேத்தியம் தயாரிக்கவும் ஒரு வினையாக்கியாகவும் பயன்படுத்தப்படுகிறது.
சீரொளி படிகங்களின் உற்பத்திக்கான பொருட்களின் ஓர் அங்கமாகவும் லியுதேத்தியம்(III) நைட்ரேட்டு திகழ்கிறது.
↑Melnikov, P.; Arkhangelsky, I. V.; Nascimento, V. A.; de Oliveira, L. C. S.; Guimaraes, W. R.; Zanoni, L. Z. (February 2018). "Thermal decomposition of lutetium nitrate trihydrate Lu(NO3)3·3H2O". Journal of Thermal Analysis and Calorimetry131 (2): 1269–1276. doi:10.1007/s10973-017-6644-2.