புதியா பகுதியிலுள்ள கோயில்இந்துகள் பரவியுள்ள சதவீதம்தாக்கேஸ்வரி கோயில்
வங்காள தேசத்தில்இந்து சமயம் இரண்டவது பெரிய சமயம் ஆகும். உலகில் அதிக இந்துகள் வசிக்கும் இடத்தில் வங்காளதேசம் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. முதலிரண்டு இடங்களில் இந்தியாவும்நேபாளமும் உள்ளன. வங்காளதேசத்தின் மொத்த மக்கட்தொகையில் 14% பேர் இந்துகள் ஆவார்.[1][சான்று தேவை] பிரிவினைக்கு முன் இந்தியாவோடு வங்காளதேசம் இருந்த காரணத்தினால் இங்குள்ள இந்துகளின் சமய மற்றும் பழக்க வழங்கங்கள் இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநில இந்துகளின் பழக்கவழக்கங்களை ஒத்திருக்கும். டாக்காவில் அமைந்துள்ள தாக்கேஸ்வரி கோயில் புகழ் பெற்றது.
இந்து சமய மக்கள்தொகை பரம்பல்
டாக்கா பல்கலைக் கழக வளாகத்தில் சரசுவதி தேவியின் சிலை
வங்காள தேசத்தின் கலை, கல்வி, இலக்கியம் மற்றும் விளையாட்டு ஆகியவற்றில் இந்துக்களின் பங்களிப்புகள் அவர்களின் எண்ணிக்கைக்கு மிக அதிகமாகும்.
அரசியலில் இந்துக்கள் அவாமி லீக், வங்காள தேச பொதுவுடமைக் கட்சி மற்றும் ஜாதிய சமாஜ்தாந்திரிக் தளம் போன்ற அரசியல் கட்சிகளை தொடர்ந்து ஆதரிக்கின்றனர். ஆனால் இசுலாமிய அடிப்படைவாத அரசியல் கட்சிகளிடமிருந்து இந்துக்கள் விலகியே உள்ளனர்.[2]
இந்துக்கள் தங்களது நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை காத்துக் கொள்வதற்கு வங்காள தேச இந்து நல அறக்கட்டளை செயல்படுகிறது.
1990 ஆண்டு முதல் இந்துகளுக்கு எதிராக நிகழ்ந்த தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான இந்துக்கள் இந்தியாவிற்கு அகதிகளாக குடியேறினர். [3]
1941ல் வங்காளதேச மொத்த மக்கள் தொகையில், இந்துக்கள் 28% ஆக இருந்தனர். 1947ல் இந்தியப் பிரிவினையின் போது, இலட்சக்கணக்கான இந்துக்கள் இந்தியாவிற்கு குடிபெயர்ந்ததால், 1951ல் இந்து மக்கள் தொகை 22.05% ஆக வீழ்ச்சியுற்றது.
1971ல் நடைபெற்ற வங்காளதேச விடுதலைப் போரில், இந்துகளுக்கு எதிராக, பாகிஸ்தானிய இராணுவத்தினர் நடத்திய இனப்படுகொலையின் போது, இருபது இலட்சம் இந்துக்கள், வங்காள தேசத்தை விட்டு, இந்தியாவிற்கு அகதிகளாக திரும்பினர். 1974 வங்காள தேச மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்து மக்கள் தொகை 13.5%ஆக வீழ்ச்சியடைந்தது.
வங்காள தேச விடுதலைக்குப் பிறகும், இந்துக்களை இந்தியாவின் கைக்கூலிகள் என்றும் அரசின் மீது நம்பிக்கையற்ற குடிமக்கள் என்றே முத்திரைக் குத்தப்படுகின்றனர். [4]
பியூ ஆய்வு நிறுவனத்தின் (Pew Research Organisation) அறிக்கையின்படி, 2050ல் வங்காள தேச மக்கள்தொகையில், இந்துக்கள் 7% ஆகவும்; இசுலாமிய மக்கள்தொகை 92% ஆக இருக்கும் என கணித்துள்ளனர்.
Blood, Archer K. (2005). The cruel birth of Bangladesh: Memoirs of an American diplomat. Dhaka: University Press.
Benkin, Richard L. (2014). A quiet case of ethnic cleansing: The murder of Bangladesh's Hindus. New Delhi: Akshaya Prakashan.
Dastidar, S. G. (2008). Empire's last casualty: Indian subcontinent's vanishing Hindu and other minorities. Kolkata: Firma KLM.
Kamra, A. J. (2000). The prolonged partition and its pogroms: Testimonies on violence against Hindus in East Bengal 1946-64.
Taslima Nasrin (2014). Lajja. Gurgaon, Haryana, India : Penguin Books India Pvt. Ltd, 2014.
Rosser, Yvette Claire. (2004) Indoctrinating Minds: Politics of Education in Bangladesh, New Delhi: Rupa & Co. பன்னாட்டுத் தரப்புத்தக எண்8129104318.
Mukherji, S. (2000). Subjects, citizens, and refugees: Tragedy in the Chittagong Hill Tracts, 1947-1998. New Delhi: Indian Centre for the Study of Forced Migration.
Sarkar, Bidyut (1993). Bangladesh 1992 : This is our home : Sample Document of the Plight of our Hindu, Buddhist, Christian and Tribal Minorities in our Islamized Homeland : Pogroms 1987-1992. Bangladesh Minority Hindu, Buddhist, Christian, (and Tribal) Unity Council of North America.