வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு
பரவலாக நேட்டோ (NATO) என அறியப்படும் வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு (North Atlantic Treaty Organization) என்பது, 1949 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் நாள் வட அத்திலாந்திய ஒப்பந்தம் கையெழுத்தானதன் மூலம் உருவான ஒரு இராணுவக் கூட்டணி ஆகும். இதன் தலைமையகம் பெல்ஜியத்தின் தலைநகரமான பிரசல்சில் உள்ளது. வெளியார் தாக்குதலுக்கு எதிராக பரஸ்பர பாதுகாப்பு உதவி வழங்குவதற்கு இதிலுள்ள உறுப்பு நாடுகள் ஒவ்வொன்றும் இணங்கியதன் மூலம் இவ்வமைப்பு ஒரு கூட்டுப் பாதுகாப்பு முறையைக் கொண்டுள்ளது. இதன் முதல் சில ஆண்டுகள் இது ஒரு அரசியல் கூட்டணியாகவே செயல்பட்டது. ஆனாலும், கொரியப் போர் இதன் உறுப்பு நாடுகளுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து இரண்டு ஐக்கிய அமெரிக்கத் தளபதிகளின் கீழ் ஒன்றிணைந்த படைக் கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது. இக் கூட்டணியின் முதல் செயலாளர் நாயகமான லார்ட் இஸ்மே என்பவரின் புகழ் பெற்ற கூற்றின்படி, இவ்வமைப்பின் நோக்கம், ரஷ்யர்களை வெளியிலும், அமெரிக்கர்களை உள்ளேயும், ஜேர்மானியர்களைக் கீழேயும் வைத்திருப்பதாகும். பனிப்போர்க் காலம் முழுவதும், ஐக்கிய அமெரிக்காவினதும், ஐரோப்பிய நாடுகளினதும் தொடர்புகளின் பலம் குறித்த ஐயம் நிலவி வந்ததுடன், சோவியத் ஒன்றியத்தின் தாக்குதலுக்கு எதிராக "நாட்டோ" கூட்டணியினர் வழங்கக்கூடிய பாதுகாப்புக் குறித்த கவலைகளும் இருந்தன. இது பிரான்சின் அணுவாயுதத் திட்டத்தின் உருவாக்கத்துக்கும், 1966 இல் பிரான்ஸ் நாட்டோவின் இராணுவக் கட்டமைப்பிலிருந்து விலகுவதற்கும் வழிகோலியது.
பங்குபற்றும் நாடுகள்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia