வடகிழக்கு எல்லைப்புறத் தொடருந்து மண்டலம் (இந்தியா)
வடகிழக்கு எல்லைப்புறத் தொடருந்து மண்டலம் (Northeast Frontier Railway (N.F.Railway)) இந்திய இரயில்வேயின் 17 மண்டலங்களுள் ஒன்றாகும்.[1]. இது வடகிழக்கு எல்லைப்புற பிரதேசம், மேற்குவங்காளம் மற்றும் பீகார் மாநிலத்தின் சில பகுதிகளிலும் தொடருந்து சேவையை கண்காணிக்கிறது. இதன் தலைமையகம் மாலிகாவுன், கவுகாத்தி அசாம் மாநிலத்தில் உள்ளது, குவகாத்தி தொடருந்து நிலையத்திற்கு பிறகு காமக்யா தொடருந்து நிலையம் அசாமின் இரண்டாவது பெரிய தொடருந்து நிலையமாக திகழ்கிறது. ![]() ![]() இது ஐந்து கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது: வரலாறு1881 ஆம் ஆண்டில், [வட கிழக்கு எல்லைப்புறம், அசாமில்] அசாம் ரயில்வே மற்றும் டிரேடிங் கம்பெனி இணைந்து 65கி.மீ. நீள மீட்டர் கேஜ் இரயில் பாதையை திப்ருகார் மற்றும் மார்க்ஹெரிடா இடையே அமைத்தது. இப்பாதைக் கட்டப்பட்டதன் முக்கிய நோக்கம் தேயிலை மற்றும் நிலக்கரி போன்றவற்றைப் பிற இடங்களுக்கு எடுத்துச் செல்வதாகும். பின்னர் இந்த நிறுவனம் "திப்ரு சதியா" என்ற பெயரில் அசாமின் முதல் பயணிகள் ரயில் சேவையை தொடங்கியது. 14 ஏப்ரல் 1952ல், அசாம் இரயில்வே மற்றும் அவுத், திர்கட் இரயில்வே நிறுவனங்களை இணைத்து வடகிழக்கு தொடருந்து மண்டலம் (இந்தியா) தொடங்கப்பட்டது. பின்னர் இந்த மண்டலம் 15 ஜனவரி 1958ல் வடகிழக்கு எல்லைப்புற மாநிலங்களில் தொடருந்து இணைப்புகளை மேம்படுத்துவதற்காகவும், மேம்பட்ட சேவையை வழங்கவும் வடகிழக்கு தொடருந்து மண்டலம் (இந்தியா) மற்றும் வடகிழக்கு எல்லைப்புறத் தொடருந்து மண்டலம் (இந்தியா) என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. 1964ல் திரிபுராவில் தொடருந்து சேவை தொடங்கப்பட்டது.[2] டார்ஜீலிங்இமாலயன் தொடருந்துடார்ஜீலிங் இமாலயன் இரயில்வே(DHR) புதிய ஜல்பைகுரி(சிலிகுரி) நகரத்திலிருந்து டார்ஜீலிங்கை நோக்கி இமயமலை மீது 6850 அடி (2,090 மீ) மேலேறுகிறது; ஜல்பைகுரி-சுக்னா தொடருந்து பாதை பெரும்பாலும் கிடைமட்டமாகவே உள்ளது, பின்னர் சுக்னாவிலிருந்து தொடருந்து இமயமலையின் மீது செங்குத்தாக ஏறத்தொடங்குகிறது, பின்னர் அது எவ்வித தடையுமின்றி கும்(இந்தியாவின் அதிஉயரத்திலுள்ள தொடருந்து நிலையம், 7,407 அடி 2.258 மீ) வரைத் தொடர்ந்து பின் டார்ஜீலிங்கை நோக்கி பயணத்தொலைவில் கடைசி 5 மைல் (8.0 கி.மீ.) கிழ்நோக்கி இறங்குகிறது.[3] சுதந்திரம் அடைந்த பிறகு, முதலில் DHR அசாம் ரயில்வேயோடு இணைக்கப்பட்டு, பின்னர் அசாம் வங்காளம் இடையே தொடருந்து இணைப்பை நிர்மாணிப்பதற்கும் மற்றும் கிஷான்கஞ்ச் வரை மீட்டர் கேஜ் விரிவாக்கமும் ஏற்படுத்த தற்காலிகமாக மூடப்பட்டது. இதன் மற்றொரு விரிவாக்க இணைப்பான காலிம்பாங் வரையுள்ள தொடருந்து பாதை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. டார்ஜீலிங் இமாலயன் இரயில்வே மீண்டும் 1952ல் திறக்கப்பட்டு வடகிழக்கு தொடருந்து மண்டலத்தோடு இணைக்கப்பட்டது, பின்னர் 1958 ஆம் ஆண்டு வடகிழக்கு எல்லைப்புறத் தொடருந்து மண்டலத்தோடு இணைக்கப்பட்டது. டார்ஜீலிங் இமாலயன் தொடருந்து (DHR) பின்வரும் காரணங்களுக்காக உலகம் முழுவதும் புகழ் அடைந்துள்ளது:
டார்ஜீலிங் இமாலயன் தொடருந்து (DHR) காலவரிசை:
![]() மேற்கோள்கள்
வெளிப்புற இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia