கால்கா-சிம்லா தொடர்வண்டிப்பாதை
கால்கா-சிம்லா தொடர்வண்டிப்பாதை (Kalka–Shimla Railway) 2 அடி (762 மிமீ) அங்குலம் அளவுள்ள குற்றகலப் பாதையாகும். இது மலைவழித் தொடர்வண்டிப்பாதையாகும். கால்கா எனும் இடத்திலிருந்து 96 கிலோமீட்டர் தொலைவுள்ள சிம்லா எனும் நகருக்குச் செல்கிறது. இயற்கைக் காட்சிகளை உள்ளடக்கியது இது செல்லும் வழி. வரலாறுசிம்லாவானது கடல்மட்டத்திலிருந்து 7116 அடி (2169மீ) உயரத்தில் அமைந்துள்ள நகரம். 1830 -ல் சிம்லா ஆங்கிலேயரின் முக்கிய இடமாக மாறியிருந்தது. 1864-ல் இது ஆங்கிலேயர்களின் கோடை வாழிடமாக இருந்தது. மலைப்பகுதியின் பிற கிராமங்களோடு தொடர்புகொள்ளவே இத் தொடர்வண்டிப்பாதை அமைக்கப்பட்டது. 1903 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் தியதி, 96.54 கிலோமீட்டர் தூரமுள்ள இத்தொடர்வண்டிப்பாதை அதிகாரபூர்வமாகப் போக்குவரத்துக்கு தொடங்கப்பட்டது. ஆவணப்படம்பிபிசி தொலைக்காட்சி இத்தொடர்வண்டியைப் பற்றிய ஆவணப்படத்தை தயாரித்தது. இத் தொடர்வண்டிப்பாதை யுனெஸ்கோ அமைப்பால் ஜூலை 8, 2008 இல் இந்தியாவிலுள்ள உலகப்பாரம்பரியம்மிக்க களங்களில் ஒன்றாக அறிவித்தது[1]. தொடர்வண்டிகள்
செல்லும் வழி
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia