வத்திக்குச்சி (திரைப்படம்)வத்திக்குச்சி (vathikuchi) என்பது 2013 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்திய தமிழ் அதிரடி திரைப்படம் ஆகும். புதுமுக இயக்குநராக கின்ஸ்லி எழுதி இயக்கியிள்ளார். பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோவுடன் இணைந்து ஏ. ஆர். முருகதாஸ் தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தில் ஏ. ஆர். முருகதாசின் தம்பி திலீபன் கதா நாயகனாக நடித்துள்ளார். கதா நாயகியாக அஞ்சலி பாத்திரமேற்றுள்ளார்.[1] ஜெய பிரகாஷ், சம்பத் ராஜ், மற்றும் ஜெகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கிப்ரான் இசையமைத்துள்ளார். 2013 ஆம் ஆண்டி மார்ச்சில் வெளியிடப்பட்ட இந்தப்படம் விமர்சகர்களிடம் இருந்து நேர்மறையான விமர்சனங்களை பெற்றது. வசூலிலும் சிறப்பாக செயற்பட்டது.[2]
நடிகர்கள்திலீபன் - சக்தி அஞ்சலி - லீனா சம்பத் ராஜ் - பென்னி ஜெய பிரகாஷ் - கங்காரியா ஜெகன் - வனராஜ் சரண்யா பொன்வண்ணன் - சக்தியின் தாய் பட்டிமன்றம் ராஜா - சக்தியின் தந்தை ஶ்ரீரஞ்சினி - லீனாவின் தாய் வட்சன் சக்கரவர்த்தி - பிரவின் அகில் குமார் - கோலிச்சா சதீஸ் கதைச்சுருக்கம்சென்னையின் புறநகர் பகுதியில் வசிக்கும் ஷேர் ஆட்டோ டிரைவர் சக்தி (திலீபன்) அதே குடியிருப்பில் வசிக்கும் ஆங்கிலம் பயிலும் லீனா (அஞ்சலி) நேசிக்கிறார். சக்தி தன் ஷேர் ஆட்டோவில் அடிக்கடி பயணிக்கும் அஞ்சலியிடம் தன் நேசத்தை சொல்லிவிட அஞ்சலியோ மனதில் ஆசையிருந்தாலும் அதை வெளிப்படையாக காட்டிக் கொள்ளாமல் இருக்கிறார். இந் நிலையில் சக்தி பிறருக்கு உதவி செய்வதால் சிக்கல்களைச் எதிர்கொள்கிறார். உள்ளூர் ரவுடி பென்னி (சம்பத்) தலைமையிலான கூலிப்படையும் அவர்களுக்கு பண உதவி செய்யும் நகைக்கடை அதிபர் கங்காரியா (ஜெயபிரகாஷ்) மற்றும் வனராஜ் மற்றும் வனராஜின் நண்பர்கள் ஆகியோர் சக்தியை பழிவாங்க துடிக்கிறார்கள். அத்தனை எதிரிகளிடமும் இருந்து சக்தி தப்புவாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை தயாரிப்பு2012 ஆம் ஆண்டு சனவரியில் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் முருகதாஸின் சகோதரர் திலீபன் நாயகனாக சினிமாத் துறையில் அறிமுகமாகிறார் என்று அறிவிக்கப்பட்டது.[3] முருகதாஸ் தனது முதல் இயக்குனரான தீனாவின் வத்திக்குச்சி பத்திக்காதுடா... என்ற பாடலை குறிக்கும் வகையில் திரைப்படத்தின் தலைப்பை தெரிவு செய்தார்.[4] எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் இளம் தாதியாக நடித்து பாராட்டுக்களைப் பெற்ற அஞ்சலி தயாரிப்பாளர் ஏ.ஆர் முருகதாசுடனான இரண்டாவது படத்திற்காக கையெழுத்திட்டார். வாகை சூட வா திரைப்படத்தில் எம். கிப்ரானின் இசையினால் ஈர்க்கப்பட்ட முருகதாஸ் மற்றும் கின்ஸ்லின் இருவரும் வத்திக்குச்சி திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக கிப்ரானை தெரிவு செய்தனர்.[5] வெளியீடுஇந்த திரைப்படம் 2013 ஆம் ஆண்டு மார்ச்சு 13 அன்று திரைக்கு வந்தது. திரைப்படத்தின் செயற்கை கோள் உரிமைகள் ஸ்டார் விஜய்க்கு விற்கப்பட்டன.[6] ஒலிப்பதிவுபடத்திற்கு கிப்ரான் இசையமைத்துள்ளார். 2013 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் திகதி வெளியிடப்பட்டது. நா. முத்துக்குமார், பா விஜய், சபீர், அறிவுமதி, யுகபாரதி, கிப்ரான் ஆகியோர் பாடல்வரிகளை எழுதியுள்ளனர்.[7] விமர்சனம்வத்திக்குச்சி விமர்சகர்களிடையே நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இன்.காம் மற்றும் டிக்வியூ.காம் இனைச் சேர்ந்த விமர்சகர்கள் ஐந்திற்கு மூன்று மதிப்பீட்டை வழங்கினார். மேலும் பிகன்வுட்டின் விமர்சனம் ஐந்தில் இரண்டரை மதிப்பீட்டை வழங்கியது.[8][9] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia