ராஜஸ்ரீ (நடிகை)
ராஜஸ்ரீ (பிறப்பு: ஏப்ரல் 29, 1977) என்பவர் ஓர் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ்த் திரைப்படங்கள், பாலிவுட், கன்னடத் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகள் ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார். பாரதிராஜாவின் 1994 ஆம் ஆண்டு தமிழ்த் திரைப்படமான கருத்தம்மா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார். அதன் பின்னர் இவர் அறுபதுக்கும் மேற்பட்ட படங்களில் பலவிதமான வேடங்களில் நடித்தார்.[5] தொழில்ராஜஸ்ரீ தமிழ் திரையுலகுக்கு பாரதிராஜாவின் கருத்தம்மா மூலம் அறிமுகமானார். தனது அற்புதமான நடிப்பிற்காக விருதுகளை வென்ற அவர், சேது, நந்தா, ரன், மனசெல்லாம், வேட்டையாடு விளையாடு ஆகிய படங்களில் நடித்தார். ராஜஸ்ரீ தெலுங்கு மற்றும் தமிழில் 57 படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். வெள்ளித் திரை தவிர, சின்னத் திரையில் ஆலயம், அகல் விளக்கு, மந்திர வாசல், சிவமயம் ஆகியவ தொடர்களில் நடித்துள்ளார்.[5] தனிப்பட்ட வாழ்க்கைராஜஸ்ரீயின் சகோதரியான பாபியும் சில படங்களில் நடித்துள்ளார்.[6] "உடற்பயிற்சி கூட" உரிமையாளரான அன்சாரி ராஜா என்ற முசுலீமை ராஜஸ்ரீ திருமணம் செய்து கொண்டார். இந்து - முஸ்லிம் மதத்தின்படி நடந்த திருமணத்தில் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்ட ஒரு வழக்கமான திருமணமாக இது இருந்தது. ஆனால், ஒரு மாதமே ஒன்றாக வாழ்ந்த இந்த தம்பதியர் பின்னர் பிரிந்தனர். 2010 இல், விஜயவாடாவில் நடந்த ஒரு ரகசிய விழாவில் கணினி பொறியாளர் புஜங்கர் ராவ் என்பவரை மணந்தார். பிரபலமான கனக துர்கா கோவிலில் இந்த திருமணம் நடைபெற்றது, இதில் ஒரு சில குடும்பத்தினரும், தம்பதியரின் நண்பர்களும் கலந்து கொண்டனர். ஐதராபாத்தைச் சேர்ந்த புஜங்கர் ராவ் ராஜஸ்ரீயின் உறவினர் ஆவார். இதன்பிறகு நடிப்பிலிருந்து விடைபெறுவதாக நடிகை கூறினார். திரைப்படவியல்
தொடர்கள்
குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia