வர்சா அடல்ஜா
வர்சா மகேந்திர அடல்ஜா (Varsha Mahendra Adalja) குசராத்தின் புகழ்பெற்ற பெண்ணியக் கவிஞர். தனது அன்சார் எனும் புதினத்திற்காக 1995 ஆம் ஆண்டின் சாகித்திய அகாடமி விருதினைப் பெற்றவர். இவர் புதினங்கள் மட்டுமின்றி நாடகங்கள், மேடை நாடகங்கள் மற்றும் வானொலி நாடகங்களையும் இயற்றியுள்ளார். ஆரம்ப வாழ்க்கைஇவர் 10 ஏப்ரல் 1940 அன்று பம்பாயில் (இப்போது மும்பை ) குசராத்தி புதின ஆசிரியர் குன்வந்த்ராய் ஆச்சார்யா மற்றும் நிலாபென் ஆகியோருக்குப் பிறந்தார். 1960 ஆம் ஆண்டில் மும்பை பல்கலைக்கழகத்தின் வாயிலாக குசராத்தி மற்றும் சமசுகிருதத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[1] அதன் பின் 1962 இல் சமூகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[1][2] புது தில்லியில் உள்ள தேசிய நாடகப்பள்ளியில் அரசின் உதவித்தொகையுடன் நாடகம் பயின்றார். 1961 முதல் 1964 வரை மும்பை அனைத்திந்திய வானொலியில் செய்தி தொடர்பாளராக இருந்தார். 1965 இல் மகேந்திர அடல்ஜா என்பாரைத் திருமணம் செய்துகொண்டார். 1966 இல் தன் எழுத்துப் பணியைத் தொடங்கினார். இவர் சகோதரி இலா அரப் மேத்தாவும் கூட ஒரு புதின ஆசிரியர். இலக்கியப் பணிகள்வர்ஷா, 1973 – 1976 வரை சுதா என்ற பெண்கள் வார இதழின் ஆசிரியராக தனது இலக்கிய வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் 1989 – 90 வரை மற்றொரு பெண்கள் இதழான குசராத்தி ஃபெமினாவில் பணியாற்றினார். இவர் 1978 ஆம் ஆண்டு முதல் குசராத்தி சாகித்ய அமைப்பில் நிர்வாக அலுவலகத்தை வைத்துள்ளார்.[2][3][4] இவர் தொழுநோயாளிகளின் காலனிகள், சிறை வாழ்க்கை மற்றும் ஆதிவாசிகள் மத்தியில் பணியாற்றினார்.[5] விருதுகள்அன்சார் என்ற தனது புதினத்திற்காக சாகித்ய அகாதமி விருது (1995) பெற்றார்.[6] சோவியத் லேண்ட் நேரு விருது (1976), குசராத்தி சாகித்ய அகாடமி விருது (1977, 1979, 1980), குசராத்தி சாகித்ய பரிசத் விருது (1972, 1975) மற்றும் கே.எம் முன்ஷி விருது (1997) ஆகியவற்றையும் பெற்றார். 2005 இல் ரஞ்சித்ராம் சுவர்ண சந்திரக் பெற்றார். கதை எழுதியதற்காக நந்தசங்கர் மேத்தா சந்திரக், சரோஜ் பதக் பரிசு மற்றும் ராம்நாராயண் பதக் சிறுகதை பரிசு பெற்றுள்ளார்.[2][4] சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia