This star, with one point broken, symbolises the featured candidates on Wikipedia.அனைத்து முக்கிய தலைப்புக்களிலும் சிறப்புக் கட்டுரைகளை உருவாக்குவது தமிழ் விக்கிபீடியாவின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்று ஆகும். சிறப்புக் கட்டுரைகள் தமிழ் விக்கிபீடியாவின் ஆக்க முறைக்கும் தரத்திற்கும் நல்ல எடுத்து காட்டாக அமைகின்றன. சிறப்புக் கட்டுரைகள் என்றால் என்ன என்பதையும், முழுப் பட்டியலையும் சிறப்புக் கட்டுரைகள் பக்கம் சென்று பார்க்கலாம்.
பொதுவாகச் சிறப்புக் கட்டுரைகள் இரு வழிகளில் உருவாக்கப்படுகின்றன. முதலாவது ஒரு குறுங்கட்டுரை, கூட்டு முயற்சியின் ஊடாக விரிவாக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுச் சிறப்பு கட்டுரைத் தரத்தினை அடைகின்றது. (நன்கு வளர்ச்சியடைந்த கட்டுரைகளை சிறப்புக் கட்டுரையாக்கப்படக் கூடியவை என்ற பட்டியலின் கீழ் சமுதாய வாசலில் இணைப்பதன் மூலம் பிற பயனர்களின் கவனத்தை ஈர்த்து அக்கட்டுரைகள் சிறப்பு கட்டுரையாவதை விரைவாக்கலாம்.) இரண்டாவது பிரதான ஆக்கர் இடும் நன்கு செழுமைப்படுத்தப்பட்ட கட்டுரையைப் பிற பயனர்கள் மேலும் மேம்படுத்திச் சிறப்புக் கட்டுரைத் தரத்தினை அடையச்செய்யலாம்.
வளர்ச்சியடைந்த மேம்படுத்தப்பட்ட கட்டுரைகளை அடையாளம் கண்டு அவற்றைத் தகுந்த முறையில் காட்சிப்படுத்துவது அக்கட்டுரை பரந்த வாசிப்பைப் பெற அல்லது பலனை அளிக்க ஒரு முக்கிய செயல்பாடாகும். அச்செயல்பாட்டை நெறிப்படுத்த இந்த பக்கம் உதவும். குறிப்பாக ஒரு கட்டுரையைத் தமிழ் விக்கிபீடியாவில் சிறப்பு கட்டுரையாக நியமிக்க எடுக்கப்படவேண்டிய செயல்முறைகளை விளக்கவும் செயல்படுத்தவுமே இப்பக்கம் ஆகும்.
நீங்கள் கட்டுரை ஒன்றை நியமிக்கும் பட்சத்தில், அக்கட்டுரை நோக்கி எழுப்பப்படும் ஆட்சேபனைகளுக்குத் தகுந்த முறையில் பதிலளிக்க முயல்வீர்கள் என்று நாம் எதிர்பார்க்கின்றோம். பரிந்துரைக்கும் கட்டுரையின் பிரதான ஆக்கராக நீங்கள் இருக்கும் இடத்து நியமனக் குறிப்பில் அதை தெரிவுபடுத்தல் நன்று.
Place ===[[name of nominated article]]=== at the top.
அதற்குக் கீழே, அந்தக்கட்டுரையை முன்மொழிவதற்கான உங்கள் காரணத்தைப் பதியுங்கள்.
இறுதியாக, place {{விக்கிபீடியா:சிறப்புக் கட்டுரைகள் முன்மொழிவு/முன்மொழியும் கட்டுரையின் தலைப்பு}} at the top of the list of nominees on this page.
வழிமொழிவது, எதிர்ப்பது, கருத்து தெரிவிப்பது
கட்டுரையைப் பற்றி முடிவுகளைத் தெரிவிப்பதற்குத் தயவுசெய்து கட்டுரையை முழுமையாக வாசியுங்கள். கட்டுரையின் பேச்சுப் பக்கங்களிலும் கட்டுரையைப் பற்றிய, கட்டுரையின் பொருள் பற்றிய மேலதிக தகவல்கள் கிடைக்கலாம்.
நியமம் நோக்கி உங்கள் முடிவுகளை தெரிவிக்க, நியமம் 'தொகு' தத்தலை சுட்டுங்கள் (கட்டுரையின் பொது பேச்சு 'தொகு' தத்தலை அல்லாமல், நியமன 'தொகு' தத்தலை சுட்டுவதே அக்கட்டுரைக்குரிய நியமன பேச்சு பக்கத்திற்கு உங்களை இட்டு செல்லும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.)
நீங்கள் அக்கட்டுரை சிறப்பு கட்டுரையாவதற்குறிய தரமுடையது என்று கருதினால், "ஆதரவு" என்று ஆதரவைத் தெரிவித்து உங்கள் காரணங்களையும் தரலாம்.
If you oppose a nomination, write "Object" followed by the reason for your objection. Each objection must provide a specific rationale that can be addressed. If nothing can be done in principle to "fix" the source of the objection, the objection may be ignored. This includes objections to an article's suitability for the Wikipedia Main Page, unless such suitability can be fixed (featured articles, despite being featured, may be marked so as not to be showcased on the Main Page).
To withdraw an objection, strike it out (with <s>...</s>) rather than removing it.
Consensus must be reached in order to be promoted to featured article status. If enough time passes without objections being resolved, nominations will be removed from the candidates list and archived.
தொடர்ந்து கணினி சார் கட்டுரைகள் எழுதி வரும் உமாபதியின் முயற்சியில் comprehensive ஆக அமைந்த நல்ல கட்டுரை. சிறப்புக் கட்டுரை ஆக்கலாம். இன்னும், மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் தரலாம்.--Ravidreams11:25, 18 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]
ஆதரவு நல்ல முற்காட்டுக் கட்டுரை. நிறைய வெளி மேற்கோள்கள் தரப்பட்டுள்ளன. பல பரிமானங்களில் ஜிமெயில் பற்றி அலசியுள்ளார். (எனது பேச்சுப் பக்க வேண்டுகோளையும் நிறைவேற்றியுள்ளார்.) பாராட்டுக்கள் உமாபதி. -- Sundar\பேச்சு06:42, 15 மே 2007 (UTC)[பதிலளி]
ருக்மினி அவர்களின் வாழ்க்கையை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது இக்கட்டுரை. கட்டுரையின் நீளத்தை கருதாவிட்டால், சிறப்புக்கட்டுரை ஆக்கப் பரிந்துரைக்கிறேன்--Ravidreams11:28, 18 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]
நல்ல கட்டுரை, ஆனால் தமிழ் என்ற தலைப்பில் சேர்க்கப்படவேண்டிய தகவல்கள் பல உள்ளன. ஆகையால் முழுமை பெறவில்லை என்று நினைக்கின்றேன். கட்டமைப்பும் மேம்படுத்தப்படலாம். --Natkeeran17:44, 18 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]
நற்கீரன், கட்டுரை ஏற்கனவே நீளமாக உள்ளது. மேற்படி தகவல்களை துணைத்தலைப்புகளில் சேர்ப்பது தான் பொருத்தமாக இருக்கும். அதற்கான ஆலோசனைகளை தாருங்கள். எந்த விதத்தில் தற்போதைய உள்ளடக்கம், கட்டமைப்பை மாற்றலாம் என்றும் தெரியப்படுத்துங்கள்--Ravidreams10:57, 19 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]
சிறந்த முயற்சியின் அடிப்படையிலுள்ள கட்டுரை. ஆய்த எழுத்து என்ற துணைத்தலைப்பிலுள்ள கேடயப்படம் இருப்பது பொருத்தமாகப் படவில்லை. கேடயத் தோற்றத்திலிருந்தா, முப்பாற்புள்ளிகள் தோன்றியது? இம்முற்பாற் புள்ளி , ஆரம்பத்தில் இ என்பதனைக் குறிக்கவே பயன்படுத்தப்பட்டது.கி.பி.5க்கு பிறகே தற்போதுள்ள இ என்ற குறியீடு தோன்றியது எனலாம்.த* உழவன் 06:13, 24 ஆகஸ்ட் 2009 (UTC)
8.எண்கள் என்பதிலுள்ள எண்களுக்கான அட்டவணையில், எட்டு என்ற எண்ணில், அ- என்று இருப்பது தவறு. அ-வில் வரும் சுழி இல்லாது இருக்க வேண்டும்.காண்கஅதனை உருவாக்க வேண்டும். பழைய நூல்களில் அதற்கான குறியீடு காணின் அதனைக் காட்டவும். அதற்குரிய கணினி எழுத்துருவை உருவாக்க முனைகிறேன்.பயனர்:தகவலுழவன்/கையொப்பம்
"இங்கே" என்னும் சொல் இலங்கை மற்றும் யாழ்பாணத்தில் "இங்கை" என பயன்படுத்துவதாக குரிப்பிட்டிருந்தீர்கள்,ஆனால் அச்சொல் இலங்கையிலோ அல்லது யாழ்பாணத்திலோ அவ்வாரு உச்சரிக்கப் படுவதில்லை.
மாறாக "இங்கே" எனும் சொல் யாழ்பாணத்தில் நேரடியாக "இங்க" என்றும்,
சூழ்நிளைகளுற்கேற்ப- இஞ்ச,இந்த. இவ்வாரு அழைக்கப்படுகின்றது.
அய்யாவழி கட்டுரை நல்ல கட்டுரைதான். எனினும் அதில் சில குறைபாடுகள் உண்டு. அவற்றை விரைவில் முன்வைக்கின்றேன். அக்கட்டுரையை சிறப்பு கட்டுரை ஆக்க முன்மொழிவதன் மூலம் பிறருடைய கவனத்தையும் இக்கட்டுரை மீது வரவழைத்து, மேம்படுத்தி சிறப்பு கட்டுரையாக்கலாம் என்று நம்புகின்றேன். --Natkeeran 05:41, 9 ஜூன் 2006 (UTC)
சிறப்புக் கட்டுரையாக்கப்படுவதற்கு நல்ல வாய்ப்புள்ள கட்டுரை. தகுதிகளில் இனி, வெளிமேற்கோள்களைக் கட்டாயமாக்கலாம் என்று கருதுகிறேன். வைகுண்ட ராஜா இங்கே தந்துள்ள மேற்கோள்களை இங்கே தேவையான இடங்களில் தந்தோமானால் நன்று. -- Sundar\பேச்சு 07:11, 9 ஜூன் 2006 (UTC)
இக்கட்டுரை முழுக்க ஒரே பயனரால் எழுதப்பட்டிருப்பதாலும். இதில் உள்ள தகவல்களை உறுதி செய்ய நடுநிலையான வெளியிணைப்புகள், ஆதாரங்கள் எதுவும் இல்லாததாலும், கட்டுரையின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய வாய்ப்பில்லை. தவிர, கட்டுரையில் எண்ணற்ற எழுத்துப் பிழைகள், கருத்து முரண்பாடுகள் உள்ளன. மேற்கண்ட குறைகளை போக்க வைகுண்ட ராஜா முயலலாம். அதுவரை, இக்கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக ஆக்குவதில் எனக்கு உடன்பாடில்லை. --ரவி 08:39, 9 ஜூன் 2006 (UTC)
பயனர் ரவி எடுத்துரைத்த குறைபாடுகள் இக்கட்டுரையில் இருப்பதை ஒப்புக்கொள்கிறேன், நிவிர்த்தி செய்ய முயற்சிக்கிறேன்.
மேலும் எனது கருத்துக்களை ஏற்றுக்கொள்வீர்களானால் ஒன்றைக் கூற முயல்கிறேன். சிறப்புக் கட்டுரைகளாக தேர்ந்தெடுக்கப்படுபவைகளுக்கு மேலும் ஒரு விதிமுறையை அமலாக்கினால் நன்று என்று நினைக்கிறேன். அதாவது, சிறப்பு கட்டுரையாக்க கோரப்படுபவை, சிவப்பு இணைப்புகள் (Red Links) அற்றவைகளாக இருக்க வேண்டும். ஏனெனில் ஒரு கட்டுரையை முழுமையாக ஒருவருக்கு புரியவைப்பதில் அக்கட்டிரையின் உள்ளிணைப்புகளுக்கு பெரும்பாலும் முக்கிய பங்கு உண்டு. அவ்வகையில் சிறப்புக் கட்டுரை இன்னும் முக்கியத்துவம் பெறுகின்றன. ஏனெனில் தமிழ் விக்கிபீடியாவின் 2,901 (தற்போதய நிலவரம்)கட்டுரைகளில் சிறந்த கட்டுரை ஒரு நபருக்கு அது தொடர்புடைய விடயங்களை சிறந்த முறையில் கற்பிக்க (Should be best informative)வேண்டும் - வைகுண்ட ராஜா 22:40, 11 ஜூன் 2006 (UTC)
வைகுண்ட ராஜா, சிறப்புக் கட்டுரையில் சிகப்பு இணைப்புகள் இல்லாமல் இருப்பது மிகவும் விரும்பத்தக்க ஒன்று தான். அய்யாவழி போன்ற, பல பயனர்களுக்கு புதிதாக இருக்கும் கருத்துக்களை விளக்கும் கட்டுரைகளில், இது மிகவும் இன்றியமையாததாகும். எனினும், தற்பொழுது விக்கிபீடியாவுக்கான பங்களிப்பளர்கள் மிகவும் குறைவாக இருப்பதனால், இத்தேவையை சிறப்புக் கட்டுரைக்கான தகுதிகளில் ஒன்றாக கொள்வதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. நீண்ட கால நோக்கில், உங்கள் ஆலோசனை முற்றிலும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. எனினும், எல்லா கட்டுரைகளிலும், குறிப்பாக சிறப்புக் கட்டுரைகளிலாவது சிகப்பு இணைப்புகளை நீக்க பங்களிப்பாளர்களை வேண்டிக்கொள்வோம்--ரவி 08:35, 16 ஜூன் 2006 (UTC)
நாடுகள் திட்டத்தில் உள்ள மிகச்சிறந்த கட்டுரைகளில் ஒன்று இக்கட்டுரை. நல்ல நடையில், செறிவான கருத்துக்களுடன், அழகான படங்களுடன் உள்ளது. முன் எடுத்துக்காட்டாக இருக்கத் தகுதி பெற்றுள்ளது இக்கட்டுரை.. இக்கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக அறிவிக்க முன்மொழிகிறேன்.--செல்வா 16:16, 24 ஆகஸ்ட் 2008 (UTC)
உங்கள் கருத்துக்களை நான் வழிமொழிகிறேன். மயூரநாதன் 16:34, 24 ஆகஸ்ட் 2008 (UTC)
வழிமொழிகிறேன். நல்ல முழுமையான கட்டுரை. மேற்கோள்களும் தரப்பட்டுள்ளன. சில புணர்ச்சிப்பிழைகள் உள்ளன, திருத்த வேண்டும். (எ.கா. பருவகாற்று)-- சுந்தர்\பேச்சு 16:50, 24 ஆகஸ்ட் 2008 (UTC)
ஆதரவு. உரை திருத்திய பிறகு சிறப்புக் கட்டுரையாக அறிவிக்கலாம். செல்வா, சிறப்புக்கட்டுரை முன்மொழிவுகளை மீண்டும் நினைவூட்டியதற்கு நன்றி. சிறப்புக் கட்டுரைகள் குறித்துப் பேசி ஓராண்டுக்கு மேல் இருக்கும் என்று நினைக்கிறேன் :( இனி, நாம் கூடுதல் சிறப்புக் கட்டுரைகள் உருவாக்குவது, அடையாளம் காண்பதில் கவனம் செலுத்த வேண்டும்--ரவி 17:09, 24 ஆகஸ்ட் 2008 (UTC)
இக் கட்டுரை சிறப்பான செய்துகளுடன், சிறந்த நடையில், நல்ல படங்களுடன் அமைந்துள்ள, சிறந்த கட்டுரைகளுக்கு எடுத்த்க்காட்டாக அமைந்துள்ளது. எனவே இதனை சிறப்புக் கட்டுரையாக அறிவிக்கப் பரிந்துரைக்கிறேன்.--செல்வா 17:05, 24 ஆகஸ்ட் 2008 (UTC)
மொழிநடைக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு இக்கட்டுரை. கட்டாயம் வழிமொழிகிறேன். -- சுந்தர்\பேச்சு 17:12, 24 ஆகஸ்ட் 2008 (UTC)
நானே முன்மொழிந்திருந்தாலும், சில திருத்தங்கள் செய்ய வேண்டியுள்ளன என்பதனை அறிவேன். சில சொற்றொடர்கள் ஆங்கிலத்திலேயே உள்ளன. இன்னும் ஒரு சில சிவப்பு இணைப்புகளையாவது நீல (நீளும்) இணைப்புகளாக்க மாற்ற வேண்டும். விரைவில் நிறைவேற்றி சிறப்புக்கட்டுரையாக்குவோம். --செல்வா 17:49, 24 ஆகஸ்ட் 2008 (UTC)
வலுவான மேற்கோள்கள், அழகு தமிழ் நடை, தமிழ் அறிவுலகில் அதிகம் எழுதப்படாத தலைப்பு, தன்னளவில் முழுமை வாய்ந்த கட்டுரை என்று பல சிறப்புகள் கூற இயலும். இதனைச் சிறப்புக் கட்டுரையாக்கப் பரிந்துரைக்கிறேன்.--ரவி 06:52, 31 ஜூலை 2009 (UTC)
ஆஸ்திரேலியா நாடு பற்றிய கட்டுரை இப்போது முழுமை பெற்றுள்ளது. அந்நாடு பற்றிய ஓரளவு முழுமையான தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இக்கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக அறிவிக்கக் கோருகிறேன். இல்லாவிடில் மேலும் எப்பகுதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் எஅத் தெரிவித்தால் மேம்படுத்தலாம்.--Kanags\பேச்சு 12:22, 4 ஆகஸ்ட் 2009 (UTC)
இக்கட்டுரையில் உள்ள சிகப்பு இணைப்புகள் சரிசெய்த பின் இதை சிறப்பு கட்டுரையாக அறிவிக்க என் முழு ஆதரவு --கார்த்திக் 12:58, 4 ஆகஸ்ட் 2009 (UTC)
ஆதரவு கட்டாயம் இதனைச் சிறப்புக் கட்டுரையாக அறிவிக்கலாம். மிக நன்றாக எழுதப்பட்டுள்ள கட்டுரை. இன்னும் எங்கெங்கு மேம்படுத்தலாம் என்பதை இன்று இரவு (கனடா நேரம்) நாளைக்குள் தெரிவிக்கின்றேன். தலைப்பை ஆசுத்திரேலியா என்றோ ஆத்திரேலியா என்றோ மாற்றினால் நல்லது என்று நினைக்கிறேன் (உள்ளே ஆஸ்திரேலியா என்றும் முதல் வரியில் குறிக்கலாம்). பிற கருத்துகளைப் பின்னர் எழுதுகிறேன். ஆனால் சிறப்புக்கட்டுரையாக அறிவிக்க இவை தடையாக இருக்க வேண்டாம். --செல்வா 13:12, 4 ஆகஸ்ட் 2009 (UTC)
ஆதரவு - ஆத்திரேலியா எனது பரிந்துரை. --சிவக்குமார்\பேச்சு 18:52, 4 ஆகஸ்ட் 2009 (UTC)
இக்கட்டுரை பல துறைகளைச் சார்ந்த தகவல்களைக் கொண்டுள்ளது. இத்துறைகளைச் சேர்ந்த பிற தமிழ் விக்கி கட்டுரைகளுக்கு இணைப்பு உள்ளதால் படிப்பவர்களை ஈர்க்கக்கூடும். தேவையான அளவுக்குப் படங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. பிற விக்கிப்பீடியாக்களில் இல்லாத தகவல்களும், தமிழ் இலக்கிய எடுத்துக் காட்டுகளும் உள்ளன. ஓரளவு சான்றுகளும் தரப்பட்டுள்ளன. பொதுவாக மெய்யியல், இலக்கியம் போன்றவற்றில் ஆழமான கட்டுரைகளைக் கொண்டிருக்கும் இடாயிச்சு மொழி விக்கியிலும் இல்லாத அளவு தகவல்களை இக்கட்டுரை பெற்றிருப்பது சிறப்பு. இக்கட்டுரையை மேம்படுத்தி சிறப்புக் கட்டுரையாக்கச் செய்ய வேண்டிய மாற்றங்களை எதிர்நோக்குகிறேன். -- சுந்தர்\பேச்சு 11:16, 2 ஆகஸ்ட் 2009 (UTC)
அடிப்படை உளவியல், மெய்யியல் கருத்தான மாந்தவுருவகத்தைப் பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதுவதற்கு முன்னதாக வேறு எங்கும் தமிழில் எழுதப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. இக்கட்டுரையைச் சிறப்புக் கட்டுரையாக அறிவிக்க வேண்டுவதற்கான காரணங்கள்:
அடிப்படைக் கருப்பொருள்
விக்கிக்கு வெளியே தமிழில் எழுதப்படாத தலைப்பு
பிற மொழி விக்கிக்கள் பலவற்றைக் காட்டிலும் தமிழ் விக்கியில் இக்கட்டுரை நன்கு வளர்ந்துள்ளது
இது போன்ற கருத்துக்களில் வழக்கமாக எழுதும் கட்டுரைகள் பெரும்பாலும் ஆங்கில விக்கியைத் தழுவியிருக்கும் நிலை உள்ளது. ஆனால் இக்கட்டுரையில் வேறெந்த விக்கியிலும் இல்லாத எடுத்துக்காட்டுகளும் (குறிப்பாகத் தமிழ்ச்சூழலில் இலக்கியத்தில் இருந்து பெற்றவை) விவரங்களும் உள்ளன.
பொருத்தமான, படிப்போரின் ஆர்வத்தைத் தூண்டும், பல தரப்பட்ட படங்கள் உள்ளன.
en:Template:FAOL என்ற வார்ப்புருவை ஒத்த ஆங்கில விக்கிக் கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் இடுவதன் மூலம் பலரது கவனத்தை ஈர்க்க முடியும். நம் தளத்தைப் பற்றிய மதிப்பும் உயரும். அதே போல en:Template:Link_FA வார்ப்புருவை கட்டுரையில் இடுவதன் மூலம் அனைத்து மொழி விக்கிக் கட்டுரையிலும் தமிழ்க் கட்டுரைக்கான இணைப்புக்கருகே விண்மீன் குறியும் காட்டப்படும்.
இலக்கியம், வரலாறு, உளவியல், மொழி எனப் பல துறைகளில் இருந்தும் தகவல்கள் காட்டப்பட்டுள்ளதால் படிப்பவர்களுக்கு ஆர்வமூட்டவும் மேலும் பல கட்டுரைகளைப் படிக்கத் தூண்டவும் கூடும்.
இருந்தும் இக்கட்டுரையில் வேறு மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்றால் அவற்றையும் செய்வோம். நாம் இணைந்து உரையை எளிமைப்படுத்தினால் நல்லது. -- சுந்தர்\பேச்சு11:48, 27 மே 2010 (UTC)[பதிலளி]
ஏழாம் எண்ணிட்ட கருத்து அனைத்து சிறப்புக் கட்டுரைகளுக்குமே பொருந்தும் என்பதால் அடித்துள்ளேன். தவிர, கட்டுரையை எளிமைப்படுத்துவதோடு சில சொந்த ஆய்வுகளைக் களைய வேண்டும். ஆகு பெயர்கள் அனைத்தும் மாந்தவுருவகங்களா என்பதைச் சரி பார்க்க வேண்டும். நான் கட்டுரையில் தந்துள்ள எடுத்துக்காட்டு தவறு போலத் தோன்றுகிறது. கடைசி உட்தலைப்பை மாற்ற வேண்டும், எதிரான கருத்துகளோடு பயன்களும் தரப்பட்டுள்ளன. வேறு மாற்றங்கள் தேவை என்றாலும் பரிந்துரைக்க வேண்டுகிறேன். -- சுந்தர்\பேச்சு04:41, 28 மே 2010 (UTC)[பதிலளி]
அண்மையில் மேலும் சில சான்றுகளைச் சேர்த்துள்ளேன். இதைச் சிறப்புக்கட்டுரை நிலைக்கு வளர்த்தெடுக்க வேறு என்னென்ன செய்யலாம் என்று கருத்துத் தெரிவித்தால் நன்று. -- சுந்தர்\பேச்சு09:02, 7 மே 2011 (UTC)[பதிலளி]
இருபதாம் நூற்றாண்டின் முதற்பாதியில் முதன்மையான கட்சியாக விளங்கி திராவிடக் கொள்கைகள் உறுதிபெற அடித்தளமாக அமைந்திருந்த நீதிக்கட்சி குறித்த கட்டுரை முழுமையாகவும் தகுந்த புறச்சான்றுகளுடன் நடுநிலையாக எழுதப்பட்டுள்ளது. அங்கங்கே சில எழுத்துப்பிழைகளும் இலக்கணப்பிழைகளும் உள்ளன. இதனை சிறப்புக் கட்டுரையாக நியமனம் செய்கிறேன். குறைகள் இருப்பின் அவற்றை களைய முயலலாம்.--மணியன்08:44, 23 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]
ஆதரவு
நடுநிலைமை
எதிர்ப்பு
கருத்துக்கள்
சங்ககாலத் தமிழக நாணயவியல்
சங்ககாலத் தமிழக நாணயவியல் கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக அறிவிக்க கோரி பரிந்துரைக்கிறேன். தமிழ் விக்கியில் அவசியம் இருக்க வேண்டிய கட்டுரை. உள்ளடக்கமும் முழுமையாக சிறப்பாக இருக்கின்றது. கட்டுரை வடிவமும் சரியாக உள்ளது. ஆமோதித்தால் ஆதரவு அளியுங்கள். தயக்கங்கள் குறைகள் இருப்பின் அறியத்தாருங்கள். நிவர்த்தி செய்யலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 07:31, 18 மார்ச் 2012 (UTC)[பதிலளி]
மூலக் கட்டுரையை (பெரும்பாலும்) எழுதியவன் என்பதால் கருத்துகளை மட்டும் இடுகிறேன். வாக்களிக்கவில்லை. :-)
சிலர் வட இந்திய மன்னர்களை பின்பற்றியே தமிழக மன்னர்கள் காசுகளை அச்சடித்து வந்தனர் என்று கூறி வந்த பொழுது சில தமிழக ஆராய்ச்சியாளர்கள் தங்களின் விடாமுயற்சி மூலம் பல ஆராய்ச்சிகளை செய்து வெளியிட்ட சில திருப்புமுனை ஆய்வுகளை கொண்டுள்ள கட்டுரை. அதிலும் முக்கியமாக சங்ககால வரலாற்றை உண்மையாக்கிய பெருவழுதி நாணயம், தமிழக முத்திரைக் காசுகள் போன்றவை இவற்றில் அடங்கியுள்ளமையும் முக்கிய அம்சங்கள். முதற்பக்க கட்டுரையாகவும் கூட்டுமுயற்சி கட்டுரையாகவும் ஆகியுள்ளதால் இதில் சர்ச்சைகள் வருவதற்கு வாய்ப்பில்லை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 07:31, 18 மார்ச் 2012 (UTC)[பதிலளி]
தென்காசிப் பாண்டியர்கள்
தென்காசியில் தான் பாண்டியர்கள் கடைசியாக இருந்தார்கள் என்பதே நிறைய நபர்களுக்கு தெரிவதில்லை. அதுவே இதற்கு மிகப்பெரூம் பலம்.
இது சிறப்புக்கட்டுரை ஆனால் தன் ஊரைப்பற்றிய வரலாறு எழுத வேண்டும் என்ற ஆர்வம் பார்பவர்க்கு வர வாய்ப்புளது. சம்புவரையர் கட்டுரை பற்றிய தகவல்கள் இல்லை. இதை சிறப்புக்கட்டுரையானால் சம்புவரையர் கட்டுரையை வேறு எவராவது இதைப் போன்று விரிவு படுத்த மாதிரியாக அமையும். தன் ஊர் அரச்ர்கள் கட்டிய கோயில்கள் பற்றி அறிய ஆர்வம் கூடும்.
முற்கால பாண்டியர்களின் வரலாற்றை அறிய உதவும் சான்றுகள் இவை. மிக முக்கியமான கட்டுரை. மற்றும் முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தியிருப்பதால் சிக்கலில்லை.
ஆதரவு
நடுநிலைமை
எதிர்ப்பு
கருத்துக்கள்
பாண்டியர் துறைமுகங்கள்
தமிழர்களின் முற்கால மற்றும் பிற்காலத் துறைமுகங்கள், அவை தொடர்பான அகநாடுகள், துறைமுகங்கள் அமைந்த ஆறுகள், வணிகர் சமூகங்கள் (அரேபியரும் உள்ளனர்), ஏற்றுமதி இறக்குமதி பொருட்கள் என பல தகவல்களை கொண்ட கட்டுரை.
தமிழகத்தில் மாந்தரினத் தோற்றம் பரவல் பற்றி விளக்கும் கட்டுரை. தமிழ் விக்கியில் அவசியம் இருக்க வேண்டிய கட்டுரை. முதற்பக்க கட்டுரை ஆனதால் சிக்கலில்லை.
ஆதரவு
நடுநிலைமை
எதிர்ப்பு
கருத்துக்கள்
தமிழர்
தமிழர் கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக அறிவிக்க கோரி பரிந்துரைக்கிறேன். உள்ளடக்கமும் முழுமையாக சிறப்பாக இருக்கின்றது. கட்டுரை வடிவமும் சரியாக உள்ளது. ஆமோதித்தால் ஆதரவு அளியுங்கள். தயக்கங்கள் குறைகள் இருப்பின் அறியத்தாருங்கள். நிவர்த்தி செய்யலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:18, 3 சூலை 2012 (UTC)[பதிலளி]
அக்கட்டுரையையைப் பார்த்ததில் அது பல்வேறு கட்டுரைகளை இணைத்த பெருங்கட்டுரை எனத்தோன்றுகிறது. உதாரணம் ஒரு பத்திக்கான தொடர்களின் மேற்கோள்கள் அந்த மூலக்கட்டுரையில் இருக்கும். அதனால் ஒவ்வொரு பத்திக்கும் மேற்கோள் சேர்க்க வேண்டுமா என்று குழப்பம் உள்ளது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:04, 6 சூலை 2012 (UTC)[பதிலளி]
நாடக நடிகனாக இருந்து திரையில் நடித்து தமிழகத்தின் மூன்று முறை தொடர்ந்து முதலமைச்சாரக இருந்தவர். இவரது தாக்கம் அரசியல், திரைப்படத்துறை என இரண்டிலும் இன்றுவரை இருந்து கொண்டே இருக்கிறது. இக்கட்டுரையில் இல்லறம், திரைவாழ்வு, அரசியல் வாழ்வு என நிறைவாக எழுதப்பட்டுள்ளதாக நினைக்கிறேன். அத்துடன் போதிய படங்களும், வார்ப்புருக்களும் இணைக்கப்பட்டுள்ளது. சிறப்புக் கட்டுரையாக்க முயற்சிக்கலாம். குறைகள் ஏதும் இருப்பின் சுட்டிக்காட்டினால் பங்களிக்க தயாராக உள்ளேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:13, 9 சூலை 2013 (UTC)[பதிலளி]
பிலிப்பீன்சு கட்டுரை சிகரம் திட்டத்தினூடாகச் சிறப்புக் கட்டுரைத் தகுதிகளைப் பூர்த்தி செய்யும் வகையில் முழுமையாக விரிவாக்கப்பட்டுள்ளது. இக்கட்டுரையைச் சிறப்புக் கட்டுரையாக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட பராமரிப்புப் பணிகளை இப்பக்கத்தில் காணலாம். இக்கட்டுரை ஆங்கிலக் கட்டுரைக்கு (Philippines) நிகரான வகையில் சகல விடயங்களையும் உள்ளடக்கி எழுதப்பட்டுள்ளதுடன் சிறந்த கட்டுரைகளுக்கு எடுத்துக்காட்டாகவும் அமைந்துள்ளது. இக்கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக நியமிப்பதற்கு முன்மொழிகின்றேன்.--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}}10:55, 4 பெப்ரவரி 2015 (UTC)[பதிலளி]
ஸ்ரீகர்சன், மிகவும் பாராட்டத்தக்க முயற்சி !! வாழ்த்துகள் !! நீண்ட காலத்திற்குப் பின்னர் சிறப்புக் கட்டுரையாக அறிவித்திட முறையாக முன்மொழிவு செய்யப்பட்டுள்ளதால் இது எதிர்வரும் கட்டுரைகளுக்கு முன்னோடியாக அமையவுள்ளது. இக்காரணத்தால் சில மேம்பாடுகளைப் பரிந்துரைக்கிறேன்:
சிவப்பு இணைப்புகள் இல்லாதபோதும் கட்டுரை முழுமையாகச் சென்றடைய சில இணைப்புகள் இல்லாதுள்ளது: மூன்று முதன்மைத் தீவுகள், பிலிப்பீன்சின் பிராந்தியங்கள், சில நபர்கள். இவையும் அடையாளம் காணப்பட்டு அவற்றிற்கு குறுங்கட்டுரைகளாவது எழுதப்பட வேண்டும்.
ஆங்கில விக்கி போல (A Class -> GA -> FA) முதல்தரம் -> நல்ல கட்டுரை -> சிறப்புக் கட்டுரை எனத் தரப்படுத்தினால் இதனை நல்ல கட்டுரை என்று தற்போது தேர்ந்தெடுக்கலாம் என்பது எனது கருத்து. தமிழ் விக்கியின் தற்போதைய சிறப்புக் கட்டுரைகளின் தரம் கருதி இதனை சிறப்புக் கட்டுரையாக அறிவித்து அவ்வப்போது மேம்பாடுகளைச் செய்து வரவும் உடன்படுகின்றேன். --மணியன் (பேச்சு) 04:40, 6 பெப்ரவரி 2015 (UTC)[பதிலளி]
உங்கள் ஊக்குவிப்பிற்கு நன்றி மணியன் அவர்களே! பூங்கோதை அவர்களும் அன்டன் அவர்கள், கனக்ஸ் அவர்கள், நந்தகுமார் அவர்கள் உள்ளிட்ட பிற பயனர்களும் ஆரம்பத்தில் உரை திருத்தங்களை மேற்கொண்டிருந்தனர் பின்னர் குறும்பன் அவர்களும் ஸ்ரீஹீரனும் உரை திருத்தத்தினை முழுக் கட்டுரையிலும் மேற்கொண்டனர். சொற்பிழை, இலக்கணப்பிழைகள் இருப்பின் நீங்கள் கூறியது போல் மீண்டும் அவற்றைச் சரிபார்த்தல் சிறப்பானதே. முழுக் கட்டுரையையும் மொழிபெயர்க்கும் போது தவறுகள் நிகழ்வது சகஜமானது. அதனால் தான் பல பயனர்களின் பேச்சுப்பக்கத்திலும் நான் உரை திருத்த உதவி கோரியிருந்ததுடன் ஒரு மாதத்திற்கு மேலாகக் காத்திருந்து சிறப்புக் கட்டுரையாக்க முன்மொழிந்தேன். ஆரம்பத்தில் பிலிப்பீன்சு கட்டுரையுடன் தொடர்புபட்ட பல முக்கிய கட்டுரைகள் இருக்கவில்லை. பின்னர் உங்களதும், ஸ்ரீஹீரனதும் பிற பயனர்களதும் உதவியுடன் நான்/நீங்கள் கட்டுரைக்கு முக்கியமானவை எனக் கருதிய 25 இற்கும் மேற்பட்ட கட்டுரைகள் உருவாக்கப்பட்டன. மேலும் கட்டுரைகள் உருவாக்கப்பட வேண்டும் எனக் கருதினால் அக்கட்டுரைகளை அவற்றுக்குரிய ஆங்கில இணைப்புடன் இப்பக்கத்தில் இட்டு உதவுங்கள்.
தமிழ் விக்கியின் தற்போதைய நிலைப்படி ஆங்கில விக்கியில் FA, GA தரத்திலுள்ள கட்டுரைகள் தமிழில் ஆங்கிலத்திற்கு நிகராக எழுதப்படின்/மொழிபெயர்க்கப்படின் அவற்றுக்கு சிறப்புக் கட்டுரைத் தகுதி வழங்கலாம் என்பது என் சொந்தக் கருத்து. ஏற்கனவே உள்ள சிறப்புக் கட்டுரைகளையும் மீளாய்வு செய்ய வேண்டும். மீளாய்வு செய்து அவை சிறப்புக் கட்டுரைத் தகுதிகளை இழந்துள்ளன என்பதைக் கண்டறிந்தால் அவற்றை முன்னாள் சிறப்புக் கட்டுரைகள் (en:Wikipedia:Former featured articles) அல்லது நல்ல கட்டுரை எனத் தகுதி மாற்றம் செய்யலாம். பிற பயனர்களின் கருத்துக்களையும் வரவேற்கின்றேன்.--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}}12:24, 6 பெப்ரவரி 2015 (UTC)[பதிலளி]
ஸ்ரீகர்சன், உங்களுடன் சேர்ந்து நானும் இத்திட்டத்தில் பயணித்ததால் இதனை சிறப்புக் கட்டுரையாக்குவதில் எனக்கும் ஆவலுண்டு :) இருப்பினும் இன்னும் மேம்படுத்தலாமே என்ற எண்ணத்தையே முன்வைத்தேன். /தமிழில் ஆங்கிலத்திற்கு நிகராக எழுதப்படின்/மொழிபெயர்க்கப்படின் / இது உள்ளடக்கத்திற்குத் தான் பொருந்தும் - உரைகள், படிமங்கள்,மேற்கோள்கள் - ஆனால் தமிழ் நடை, இலக்கணம் ஆகியவற்றை ஆய்வுசெய்து சிறப்புக் கட்டுரை ஆக்க வேண்டும். ஆங்கிலத்தில் இதற்காக பலர் முன்வருகிறார்கள். நமது சூழலில் ஒரு சிலரே இதற்கான மனவிழைவைப் பெற்றுள்ளனர்.
உள்ளிணைப்புகளைப் பொறுத்தவரை கட்டுரையைப் படிப்பவருக்கு தெரியாத இடங்கள், நபர்களுக்கும் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படும் கருத்துக்களுக்கும் நிச்சயமாக இணைப்புகள் ஏற்படுத்த வேண்டும். பிலிப்பைன்சு பெயர் வைக்கப்பட்ட அரசருக்கே கட்டுரை இல்லாதிருத்தல் நல்லதல்ல. நான் அடுத்த ஒரு வாரத்திற்கு வெளியூர் செல்லவிருப்பதால் வேண்டிய இணைப்பைகளை பட்டியலிட முடியவில்லை. இணைய வசதி கிடைத்தால் இயன்றவரை உதவுகின்றேன். நான் குறிப்பிட்டது போல தற்போதைய நிலையில் சிறப்புக் கட்டுரை வழங்க எனக்கு எதிர்ப்பு எதுவும் இல்லை.--மணியன் (பேச்சு) 15:38, 7 பெப்ரவரி 2015 (UTC)[பதிலளி]
தங்கள் பதிலுக்கு நன்றி மணியன் அவர்களே! ஆங்கில விக்கியில் இங்கு உள்ளது போல அனைத்துத் தகுதிகளையும் பிலிப்பீன்சு கட்டுரை பூர்த்தி செய்யினும் well-written: its prose is engaging, even brilliant, and of a professional standard; என்பதை அழுத்தமாகக் கருத்திற்கொள்ள வெண்டும் என்ற உங்கள் எண்ணத்துடன் முழுமையாக உடன்படுகின்றேன். அண்மைக்காலமாகச் சில முக்கிய கட்டுரைகளை உருவாக்கித்தந்தமைக்கு நன்றி. தேவைப்படும் மேலதிக கட்டுரைகளை இங்கு பட்டியலிடுகின்றேன். நேரம் கிடைக்கும் போது நீங்களோ அல்லது சக விக்கிப்பீடியர்களோ உருவாக்கி உதவுங்கள்.--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}}05:53, 8 பெப்ரவரி 2015 (UTC)[பதிலளி]
கருத்து 2
தமிழ் விக்கிப்பீடியாவின் தற்போதைய நிலையில் மிகவும் இறுக்கமான வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டியதில்லை என்பது ஒரு பொதுவான கருத்து. இக்கட்டுரை சிறப்புக் கட்டுரைக்கான தகுதிகளைப் பெரிதும் கொண்டுள்ளது. இதனைச் சிறப்புக் கட்டுரையாக அங்கீகரிக்கலாம். மேலும், ஏற்கனவேயுள்ள சிறப்புக் கட்டுரைகளை மீள்பரிசீலனை செய்வது தற்போது அவசியமானதொன்றாகத் தோன்றவில்லை. --சிவகோசரன் (பேச்சு) 16:00, 6 பெப்ரவரி 2015 (UTC)[பதிலளி]
என் கருத்துப்படி ஏற்கனவேயுள்ள சிறப்புக் கட்டுரைகளை மீள்பரிசீலனை செய்வது அவசியமானது. ஆங்கில விக்கியில் உள்ளவாறு en:Wikipedia:Featured article review போன்றதொரு சிறப்புக் கட்டுரை மீள்பரிசீலனை நடைமுறையைத் தமிழிலும் அறிமுகப்படுத்துவது பயனுள்ளதாக அமையும். இச்சிறப்புக் கட்டுரைகளும் 2006 ஆம் ஆண்டில் சிறப்புக் கட்டுரைகளாக நியமிக்கப்பட்டிருப்பதால் இக்கட்டுரைகளில் பெரும்பாலானவை சிறப்புக் கட்டுரைக்கான தகுதியை இழக்கும் தறுவாயிலுள்ளன. இதற்கு எடுத்துக்காட்டாகப் பெரும்பாலான சிறப்புக் கட்டுரைகளில் போதியளவு சான்றுகள் இல்லாமையைக் குறிப்பிடலாம். இது முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டிய விடயமாகும்.--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}}12:58, 7 பெப்ரவரி 2015 (UTC)[பதிலளி]
விருப்பம்சிவகோசரன், முந்தைய காலகட்டத்தில் இத்தனை முனைப்பான பயனர்கள் இருந்ததில்லை; அப்போது பல அடிப்படைக் கட்டுரைகளை விரைவாக ஆக்க வேண்டிய தேவை இருந்தது. தற்போது தமிழ் விக்கி ஒரு நிலைத்த நிலையை அடைந்துள்ளதால் நமது வழிமுறைகளை இறுக்கிக் கொள்ள வேண்டியது நல்லது. போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்பது மன அமைதிக்கு வழியாகும்; ஆனால் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் வழியாகாது. மனநிறைவு கொள்ளாமையே சிறந்த ஆக்கங்களுக்கு அடிப்படை. இஃதேபோல பழைய சிறப்புக் கட்டுரைகளையும் மீளாய்வு செய்தல் அவசியமாகும். --மணியன் (பேச்சு) 15:38, 7 பெப்ரவரி 2015 (UTC)[பதிலளி]
2006 வாக்கில் முதற்பக்கத்தில் கட்டுரைகள் தேவை என்பதே பார்க்கப்பட்டது. சிறப்புக் கட்டுரை தகுதி பற்றிய இறுக்கமோ உரையாடலோ இல்லை. இதன் போதாமைகளை உணர்ந்தே, முதற்பக்கக் கட்டுரைகள் என்ற முறை கொண்டு வரப்பட்டது. எனவே, தற்போது சிறப்புக் கட்டுரை நிலையில் உள்ள அனைத்துக் கட்டுரைகளையும் மீளாய்வு செய்ய வேண்டும். விக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைத் தகுதிகள் வரையறையை இற்றை செய்ய வேண்டும் (இணையான ஆங்கில விக்கி பக்கம்). பல ஆண்டுகள் கழித்து மீண்டும் சிறப்புக் கட்டுரைகள் தெரிவைத் தொடங்குகிறோம் என்பதால் நல்ல முன்மாதிரியை நிறுவ வேண்டும். ஏன் எனில், இதன் அடிப்படையில் அடுத்து பல கட்டுரைகளை அலச வேண்டி இருக்கும். பிலிப்பீன்சு கட்டுரைக்குப் பின் அசுரத்தனமான உழைப்பு உள்ளது. இவ்வளவு பெரிய கட்டுரையில் இத்தனை நீள இணைப்புகளைக் காண மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. எனினும், மணியன் சொன்ன மாதிரி இன்னும் கொஞ்சம் மெனக்கடலாம். இன்னும் கொஞ்சம் பொறுமை காக்கலாம். தமிழ் விக்கிப்பீடியாவில் மற்ற பல இடங்களில் போதிய இளக்கம் காட்டப்படுகிறது. சிறப்புக் கட்டுரை என்பது உயர் தகுதி என்பதால் அதில் இறுக்கம் காட்டுவதில் தவறு இல்லை. என்னுடைய பங்களிப்பையும் தந்து விட்டு ஆதரவு வாக்கிடுகிறேன். இக்கட்டுரைக்காக உழைத்த அனைவருக்கும் உளமார்ந்த நன்றி.--இரவி (பேச்சு) 16:17, 7 பெப்ரவரி 2015 (UTC)[பதிலளி]
விருப்பம்இரவி அவர்களே! தங்கள் கருத்துக்களுக்கும் உங்களுடைய பங்களிப்பை வழங்க முன்வந்தமைக்கும் நன்றி. சிறப்புக் கட்டுரைத் தகுதிகளில் இறுக்கம் காட்டுவது ஆரோக்கியமானதொன்றாகும். தொடர்ந்தும் பிலிப்பீன்சைப் பலப்படுத்துவோம்.--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}}06:20, 8 பெப்ரவரி 2015 (UTC)[பதிலளி]
கருத்து 4
மணியன், இரவி ஆகியோரின் கருத்துக்களுடன் உடன்படுகிறேன். அக்கருத்துக்களை ஆக்கபூர்வமாகக் கருதி ஏற்றுக் கொள்ளும் உங்கள் மனநிலைக்குப் பாராட்டுக்கள். தரம் என்பது அங்கு ஒன்றும் இங்கு ஒன்றுமாக இருக்கக் கூடாது. அங்கு இருப்பதைவிட இன்னும் அதிகமாக இங்கு தரம் இருக்கும் என்றால் த.விக்குத்தான் பெருமை. அதேவேளை, இந்தளவிற்கு கட்டுரையினை வளர்த்த உங்கள் முயற்சி வீணாகக் கூடாது. மேலும், ஏற்கெனவே இருக்கும் கட்டுரைகளில் எல்லாம் இக்கட்டுரை சிறப்பானது என்பது என் கருத்து. சிறப்புக் கட்டுரைக்காக நம்மிடம் முறையான அளவுகோல் இல்லை. அதற்கான கருவிகளும் இல்லை. ஆ.வியில் சிறப்புக் கட்டுரைக்காக கருவிகள் இவை.
எனவே இக்கருவிகளின் வேலையை நாம் செய்ய வேண்டும். அத்தோடு விரைவான சில குறிப்புகள்:
வரைபடங்கள் (3 உள்ளன?) தமிழாக்கத்துடன் இருக்க வேண்டும்.
மேற்கோள்களில் உள்ள ஆங்கில சிவப்பு இணைப்புகள் நீக்கப்படுவது சிறப்பு. சில மேற்கோள்கள் வெற்று இணைப்புகளாகவுள்ளன (எ.கா: <ref>100 Events That Shaped The Philippines (Adarna Book Services Inc. 1999 Published by National Centennial Commission) Page 72 "The Founding of the Sulu Sultanate"</ref>).
குறுங்கட்டுரைகளாவது இவற்றுக்குத் தேவை - 19 மொழிகள், தேசிய இனங்கள், நிர்வாகப் பிரிவுகள் (பிலிப்பைன்சின் 17 பிராந்தியங்கள் 81 மாகாணங்கள் - வார்ப்புருவில் சிவப்பு இணைப்புக்களாகவுள்ளன), சமயங்களுக்கு இணைப்பு / குறுங்கட்டுரைகள்
இவற்றை உடன் கருத்திற் கொள்வோம். மணியன் குறிப்பிட்ட கருத்துகளில் முக்கிய கவனம் செலுத்துங்கள். ஒரு கட்டத்தை தாண்டி அடுத்த கட்டத்திற்குச் செல்வது இலகு. சிகரம் தொட்டுவிடும் தூரந்தான்! --AntonTalk07:34, 8 பெப்ரவரி 2015 (UTC)[பதிலளி]
தங்கள் கருத்துகளுக்கு நன்றி அன்டன் அவர்களே! நான் ஆங்கில விக்கியில் பங்களிப்பது அரிதென்றாலும் பல சிறப்புக் கட்டுரை முன்மொழிவு உரையாடல்களை வாசித்திருக்கின்றேன். அங்கு முன்வைப்பது போன்ற சிறு சிறு தவறுகளையும் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. இவ்வாறு சிறப்புக் கட்டுரைக்கான கருவிகள் இருப்பது எனக்கு இப்போது தான் தெரியும். வரைபடங்களைத் தமிழாக்க சிபி அவர்களிடம் கேட்டுப் பார்க்கலாம். அல்லது நீங்களே முடியுமென்றால் கட்டுரையிலுள்ள இணையான தமிழ் சொற்களைப் பயன்படுத்தித் தமிழாக்கம் செய்து உதவுங்கள். இவ்வளவு கட்டுரைகளையும் விரைவில் உருவாக்க முடியுமா என்று தெரியவில்லை. மணியன் அவர்களும் தமிழ்க்குரிசில் அண்ணாவும் கவனித்து உதவுங்கள்.--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}}10:07, 10 பெப்ரவரி 2015 (UTC)[பதிலளி]
கொல்கத்தா பற்றிய கட்டுரை சென்னை பற்றிய கட்டுரையைப் போல சிறப்பாக உள்ளது. படங்களும் தக்க இடத்தில் செருகப் பெற்று, சிறந்த மொழிவளத்துடன், அனைத் தகவல்களும் உள்ளடக்கி விரிவாக்கப்பட்டுள்ளது. இதை மேலும் சிறிதே விரிவாக்கி மேற்கோள்களை உள்ளடக்கினால் சிறந்த கட்டுரையாக இருக்கும் என்று நம்புகிறேன். --தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:35, 26 சூன் 2012 (UTC)[பதிலளி]
உருசியா, சீனா மற்றும் ஈரான் ஆகிய பெரிய நாடுகள், மற்றும் பல்வேறு நாடுகளின் வரலாற்றின் மீது செங்கிஸ் கான் ஏற்படுத்திய தாக்கம் அதிகம். முடிந்தவரை தகவல்களையும், படங்களையும் சேர்த்து விரிவாக்கியுள்ளேன். இதனைச் சிறப்புக் கட்டுரையாக அறிவிக்கக் கோருகிறேன்.--Mereraj (பேச்சு) 07:51, 6 சூன் 2021 (UTC)[பதிலளி]
இந்தக் கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக அறிவிக்க வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன். சிறப்புக் கட்டுரைக்கான தகுதி இந்தக் கட்டுரை பெற்றிருப்பதாக கருதுகிறேன். நன்றி! --உமாசங்கர் (பேச்சு) 09:32, 28 மார்ச் 2018 (UTC)[பதிலளி]
மங்கோலிய ஆட்சியால் ஏற்பட்ட நன்மைகளைப் பற்றி இக்கட்டுரை விளக்குகிறது. முடிந்தவரை தகவல்களையும், படங்களையும் சேர்த்து விரிவாக்கியுள்ளேன். இக்கட்டுரையைச் சிறப்புக் கட்டுரையாக அறிவிக்கக் கேட்டுக் கொள்கிறேன்.--Mereraj (பேச்சு) 07:57, 6 சூன் 2021 (UTC)[பதிலளி]
14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தைமூரைப் பற்றிய கட்டுரை. தகவல்கள் மற்றும் படங்கள் சேர்த்து இக்கட்டுரை விரிவாக்கப்பட்டுள்ளது. இக்கட்டுரையைச் சிறப்புக் கட்டுரையாக அறிவிக்கக் கோருகிறேன்.--Mereraj (பேச்சு) 08:01, 6 சூன் 2021 (UTC)[பதிலளி]
இந்தியாவை ஆண்ட பேரரசுகளில் முகலாயப் பேரரசு ஒரு முக்கியமான பேரரசு ஆகும். இப்பேரரசு இந்தியாவின் பெரும்பகுதிகளை ஆண்டது. தகவல்கள் மற்றும் படங்கள் சேர்த்து இக்கட்டுரை விரிவாக்கப்பட்டுள்ளது. இத்தலைப்பின் முக்கியத்துவம் கருதி இதைச் சிறப்புக் கட்டுரையாக அறிவிக்கக் கேட்டுக் கொள்கிறேன்.--Mereraj (பேச்சு) 08:04, 6 சூன் 2021 (UTC)[பதிலளி]