விக்கிப்பீடியா:செப்டம்பர் 30, 2012 விக்கி மாரத்தான்விக்கி மாரத்தான் என்பது ஒரு குறிப்பிட்ட நாள் முழுதும் அனைத்து விக்கிப் பயனர்களும் ஒன்று கூடி உழைப்பதன் மூலம் விக்கித் திட்டங்களை மேம்படுத்தும் எண்ணமாகும். முதல் முறையாக, நவம்பர் 14, 2010 அன்று பல்வேறு இந்திய விக்கித் திட்டங்களில் இதனைச் சோதித்துப் பார்த்தோம். செப்டம்பர் 30, 2012 அன்று தமிழ் விக்கிப்பீடியா ஒன்பது ஆண்டுகளை நிறைவு செய்வதை ஒட்டி இரண்டாவது விக்கி மாரத்தான் நடைபெறுகிறது. செப்டம்பர் 30, காலை UTC நேரம் 00:01 தொடங்கி 23:59 வரை கணக்கில் கொள்ளலாம். அன்றைய நாளின் பங்களிப்புகளைப் பகிர்ந்து கொள்ளவும் பொதுவாக உரையாடவும் அன்று UTC நேரம் 14.30 முதல் 16.30 வரை கூகுள் hangout மூலம் இணையக் கூடல் ஒன்றும் நடைபெறும். இரண்டாவது தமிழ் விக்கி மாரத்தான் நாள்: ஞாயிறு, செப்டம்பர் 30, 2012 24 மணி நேரமும் (UTC) (குறிப்பிட்ட நாள் அன்று பங்களிக்க இயலாதவர்கள் அதற்கு முன்போ பின்போ ஓரிரு நாட்களில் பங்களிக்க முடிந்தாலும் நன்றே ) இடம்: உங்கள் கணினி இருக்கும் இடம் :) அல்லது அன்று விக்கி சந்திப்புகள் நடக்கக்கூடிய இடங்களில் இருந்து. என்ன வகையான பங்களிப்புகளைத் தரலாம்?
கலந்துரையாட#wikipedia-taconnect - இங்கு connect என்று உள்ள பச்சை இணைப்பை அழுத்தி பெயரையும், captchaவையும் அளியுங்கள். அடுத்து வரும் அரட்டைப் பக்கத்தில் தமிழில் உரையாடலாம். தட்டச்சுவதில் பிரச்சினை இருந்தால் Firefox https://addons.mozilla.org/en-US/firefox/addon/tamilvisai-tamilkey/ நீட்சியை முயன்று பாருங்கள்.
பங்கு கொள்வதற்காகப் பெயர் பதிந்தோர்
இலக்குகள் / தலைப்புகள்
பரப்புரைஃபேஸ்புக்கில் முடிந்த அளவு பகிரல்களை (shares)மேற்கொள்ளவும். நான் தமிழ் விக்கிப்பீடியாவின் பக்கத்திலும் எனது பக்கத்திலும் தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான குழுவிலும் செய்தியைப் பகிர்ந்துள்ளேன். நீங்கள் ஏதேனும் ஒன்றை உங்கள் பக்கத்திலும் உங்கள் குழுவிலு பகிர்ந்து இந்த நாளில் பல பயனர்களை ஈர்க்க உதவுங்கள்.. நன்றி. -- சூர்யபிரகாஷ் உரையாடுக 06:46, 30 செப்டெம்பர் 2012 (UTC) விளைவுமாரத்தான் நடந்த அன்று 1030 தொகுப்புகளும் 43 கட்டுரைகளும் 97 புதிய பக்கங்களும் உருவாகியுள்ளன. இந்த எண்ணிக்கை செப்டம்பர் 2012 முழுமைக்கும் சேர்த்து ஆகக் கூடியதாகும். எனவே, பெருமளவில் பங்களிப்புகள் வராத போதும் வழக்கத்தை விடக் கூடுதலான பங்கேற்புக்கு உதவியது எனலாம். ஒன்பதாம் ஆண்டு நிறைவை வெறுமனே கடந்து செல்லாமல் அதனை நினைவூட்டிப் பரப்புரை மேற்கொள்ளவும் உதவியது. |
Portal di Ensiklopedia Dunia