தமிழ் விக்கி ஊடகப் போட்டி (TamilWiki Media Contest)
நோக்கங்கள்
1) தமிழ்-தமிழர் பற்றிய உயர்தர ஊடகக் கோப்புகள் எண்ணிக்கையைக் கூட்டுதல்
2) கட்டுரை/எழுத்துப் பணியன்றி பிற வழிகளில் விக்கிக்கு பங்களிக்கக்கூடியவர்களை - புகைப்படக் கலைஞர்கள், ஓவியர்கள், அசைப்பட ஆர்வலர்கள், நிலப்பட ஆர்வலர்கள் - தமிழ் விக்கித் திட்டங்களுக்கு அழைத்து வருதல்.
3)விக்கிமீடியா அறக்கட்டளையுடன் இணைந்து செயல்பட ஒரு முன்மாதிரியை உருவாக்குதல்
4) போட்டியின் இலக்கு : 3000 கோப்புகள்; 100 புதிய பங்களிப்பாளர்கள்
விதிகள்
1) பதிவேற்றப்படும் கோப்புகள் பதிவேற்றுபவரது சொந்த ஆக்கங்களாக இருக்க வேண்டும். பதிப்புரிமை மீறப்பட்டவை exif + tineye கொண்டு இனங்காணப்பட்டு நீக்கபடும்.
2) ஒருவர் எவ்வளவு கோப்புகளை வேண்டுமேனாலும் பதிவேற்றலாம். கோப்புகளின் எண்ணிக்கைக்கு உச்சவரம்பு கிடையாது
3) பரிசுக்குத் தகுதியுடைய ஆக்கங்கள்:
தமிழ்-தமிழர் தொடர்புடைய கட்டுரைகளில் பயன்படுத்தத் தக்கவை;
தமிழர் வாழிடங்களின் படங்கள், தமிழர், தமிழியல் தொடர்புடையோர் படங்கள்
தமிழர் மரபுச் சின்னங்கள், தமிழ் நிறுவனங்கள், தமிழர் நிலச்சூழல் உயிரினங்கள் போன்றவற்றின் படங்கள்
தமிழர் பாரம்பரிய களங்கள், கோவில்கள், வழிபாட்டுத் தலங்கள், கட்டிடங்கள் போன்றவற்றின் படங்கள்
தமிழில் கல்விவளங்கள்; தமிழ்வழிக் கல்விக்கு பயன்படக்கூடிய ஊடகங்கள் அனைத்தும் - தமிழில் விளக்கம் உள்ள வரைபடங்கள், நிலப்படங்கள், கணித, அறிவியல் படங்கள், அட்டவணைகள், விளக்கப்படங்கள், ஒலிக்கோப்புகள், நிகழ்படக் கோப்புகள்
தமிழ்ச் சொற்களின் ஒலிப்பு/உச்சரிப்புக் கோப்புகள், தமிழ் இலக்கியப் பாடல்களின் ஒலிக் கோப்புகள்.
தமிழர் பண்பாட்டு ஊடகப் பதிவுகள் (தமிழ் நாட்டார் பாடல்கள், ஆடல், பாடல் கலைகள், விளையாட்டுகள் போன்றவற்றின் ஒலி/ஒளிக் கோப்புகள்)
4) ஆக்கங்கள் மட்டுமே தமிழ்-தமிழர் தொடர்புடையதாக இருக்க வேண்டுமென்பது விதி. ஆக்குனர் தமிழராக இருக்கத் தேவையில்லை. தமிழரல்லாதோரும் பங்கேற்கலாம்.
5) புகைப்படம், (jpg, png, svg, xcf, TIFF) நிகழ்படம் (.ogg theora), அசைப்படம் (gif), ஒலிக்கோப்புகள்(.ogg vorbis, .midi),
6) கோப்புகள் நேரடியாக காமன்சில் பதிவெற்றப்பட வேண்டும். போட்டி வார்ப்புரு இணைக்க வேண்டும்
7) ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அவர்களது நெருங்கிய உறவினர்கள் பங்கேற்கலாம், ஆனால் அவர்களது ஆக்கங்கள் பரிசுகளுக்கு தகுதியுடவையாகக் கருதப்படா. (ஒப்புச்சப்பாணியாகப் பங்குகொள்ளலாம்)
8) தேர்வு வரையறை எடை - 50 % ஆக்கத்தின் நயம் (ரெசலூசன், தெளிவு, அழகு), 50 % பயன்பாடு (தமிழ் விக்கித் திட்டங்களுக்குப் பயனுள்ளவையா, தற்போதுள்ள தமிழ் விக்கிக் கட்டுரைகளுக்கு பயன்படும் படங்கள்)
9) பரிசுகள்:
சான்றிதழ், பங்களித்த ஆக்கங்கள் விக்கித் திட்டங்களின் முதற்பக்கங்களில் காட்சிபடுத்தப்படும்.
10) ஒருவர் ஒன்று/இரண்டு/மூன்று/ஆறுதல் ஆகியவற்றில் ஒன்றை மட்டுமே பெறலாம். இவற்றில் ஒன்றைப் பெற்ற ஒருவர் தொடர் பங்களிப்புகள்/ பிற சிறப்புப்பிரிவுகளிலும் பரிசு பெறலாம். ஆனால் ஒரு ஆக்கத்துக்கு ஒரு பரிசு மட்டுமே. பொதுப்பிரிவுகளில் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆக்கம், சிறப்புப் பிரிவிலும் பரிசுக்கு கணக்கிலிடெடுத்துக்கொள்ளப்படாது
11)நடுவர்கள் - ஒருங்கிணைப்பாளர்களே. வெளிப்படையான மதிப்பீடு (விக்கியிலேயே)
நல்கை/வரவு செலவுத் திட்டம்
வரவு
விக்கியூடக அறக்கட்டளை நல்கை - 800 அ$
தமிழ் விக்கிப்பீடியர் நன்கொடை - 150 அ$
செலவு
1) 950 அமெரிக்க டாலர்கள்
2) பரிசுகள் : 850 US$
சான்றிதழ்/தபால் செலவு : 50 US$
பரப்புரை : 50 US$
ஒரு படத்தை எப்படி, எங்கு என்ன அனுமதியுடன் ஏற்றுவது என்பதற்கு ஒரு செய்முறை எழுத்து / நிகழ்பட / ஒளிப்பட வழிகாட்டி உருவாக்கப் பட்டு போட்டிப் பக்கத்தில் இணைக்கப்படும்.
காமன்சின் தரவேற்ற வழிகாட்டி இப்போட்டிக்காக மாற்றியமைக்கப்படும். தரவேற்றம், படிப்புரிமைத் தெரிவு போன்றவை எளிமையாக்கப்படும். தரவேற்றப்படும் படங்களில் போட்டி வார்ப்புருவும் அதனுடன் சேர்ந்த பகுப்பு தன்னியக்கமாக இணைக்கப்படும். இதன் மூலம் போட்டியில் தரவேற்றப்படும் படங்களை இனங்காண இயலும்.
காமன்சின் தரவேற்ற வழிகாட்டியில் பல படிமங்களை ஒரே சமயத்தில் தரவேற்ற வசதியுள்ளது.
1) பிளிக்கர் குழுமங்கள்
2) தமிழ் வலையுலகு, தமிழ்மணம் போன்ற திரட்டிகள், தனிப்பட்ட பதிவுகள்
3) தமிழ் மின் குழுமங்கள்
4) கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள்
5) சமூக வலை - ஃபேஸ்புக், டிவிட்டர், கூகுள் பஸ்
4) பத்திரிகைகள், இதழ்கள் (விளம்பரங்கள் மற்றும் ஊடக நண்பர்கள் உதவி கொண்டு செய்திக்குறிப்புகள் வெளியிடல்)
5) வானொலிகள்
உள்ளே
1) தமிழ் விக்கித் திட்டங்களில் தள அறிவிப்புகள், ஆலமரத்தடி அறிவிப்புகள் Yஆயிற்று
2) ஆங்கில விக்கி தமிழ் பயனர்களிடம் வேண்டுகோள், ஆங்கில விக்கி அறிவிப்புப் பலகையில் வேண்டுகோள்
3) தமிழறியாப் பயனர்களுக்காக ஆங்கிலத்தில் போட்டிப் பக்கம், வழிகாட்டல்கள், கையேடுகள் உருவாக்கப்படும்.
ஆதரவு கோரப்பட்ட/கோரப்படவேண்டிய அமைப்புகள்
பரப்புரை ஆதரவு, அவர்களது தளங்களில்/உறுப்பினர்களுக்கு அறிவிப்புகள், இலவச/தள்ளுபடி விளம்பரங்கள் (கட்டண சேவைகளில்).
அச்சு ஊடகங்கள்
இலங்கை அச்சு ஊடகங்கள் Yஆயிற்றுபுன்னியாமீன் உதவியுடன். நவமணி, தினக்குரல் ஆகியவற்றில் வாரம் ஒன்றாகப் பெட்டி செய்தி வெளியாகும்
போட்டியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தல் + வழிகாட்டுதல் (மின்னஞ்சல் + சமூக வலை)
போட்டிப் பக்கம் பராமரிப்பு
நடுவர் பணி (மதிப்பீடு மற்றும் பதிப்புரிமை மீறல்களை கண்டுபிடித்தல்)
தலைமை ஒருங்கிணைப்பாளரின் கூடுதல் பணிகள்
நல்கைப் பணம் கையாளும் பொருளாளர்
ஒருங்கிணைப்பளர்களிடையே கருத்து வேற்றுமை ஏற்படும் போது இறுதி முடிவு எடுக்கும் உரிமை (casting vote)
ஒருங்கிணைப்பாளர்க்குள்ள நடத்தை விதிகள்
போட்டியில் ஒருங்கிணைப்பாளர்களும் அவர்களது நெருங்கிய உறவினர்களும் கலந்து கொள்ளலாம். ஆனால் அவர்களது ஆக்கங்கள் பரிசுகள் தேர்வுக்காக பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படாது.