அசகளத்தூர்
அசகளத்தூர் என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[2] விழுப்புரம் மாவட்டத்தின் கள்ளக்குறிச்சி வட்டத்தில் இடம் பெற்றிருந்த அசகளத்தூர் பகுதியானது,[3] கள்ளக்குறிச்சி மாவட்டம் உதயமானது முதல், கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் ஒரு புறநகர்ப் பகுதியாக உருவெடுத்துள்ளது. அமைவிடம்கடல் மட்டத்திலிருந்து சுமார் 102.83 மீட்டர்கள் (337.4 அடி) உயரத்தில், (11°35′15″N 79°03′19″E / 11.5876°N 79.0553°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, அசகளத்தூர் பகுதி அமைந்துள்ளது. மக்கள்தொகை2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், அசகளத்தூர் புறநகர்ப் பகுதியின் மொத்த மக்கள்தொகை 3,458 ஆகும். இதில் 1,685 பேர் ஆண்கள்; 1,773 பேர் பெண்கள் ஆவர்.[4] சமயம்அசகளத்தூர் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள லோகபாலீசுவரர் கோயில்,[5] விநாயகர் கோயில்,[6] அய்யனார் கோயில்[7] மற்றும் வரதராஜ பெருமாள் கோயில்[8] ஆகியவை தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்கி வருகின்றன. உசாத்துணைகள்
|
Portal di Ensiklopedia Dunia