அசீம் ஆம்லா
அசீம் மகமது ஆம்லா (Hashim Mahomed Amla, ஹசீம் மகமது ஆம்லா, பிறப்பு: 31 மார்ச், 1983) தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். தென்னாபிரிக்கா டர்பன் இல் பிறந்த இவர் வலதுகை மட்டையாளரும், வலதுகை மிதவேக பந்து வீச்சாளருமாவார்.[2] இவர் தென்னாபிரிக்கா தேசிய அணி, ஆபிரிக்கா டோல்பின்ஸ், எசக்ஸ் ஆகிய அணிகளில் விளையாடி வருகிறார். இவர் தென்னாப்பிரிக்க அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20 ஆகிய மூன்று வடிவங்களிலும் விளையாடி வருகிறார். சூலை 2014 இல் ஓவல் மைதானத்தில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத்க்தில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 311* ஓட்டங்கள் எடுத்ததன் மூலம் அதிக ஓட்டங்கள் எடுத்த தென்னாப்பிரிக்க வீரர் எனும் சாதனையைப் ப்டைத்தார். இவர் சூன் 2014, முதல் சனவரி 2016 வரை தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளுக்கு தலைவராக இருந்தார். இந்தியன் பிரீமியர் லீக்2016 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் கிங்சு இலெவன் பஞ்சாபு அணிக்காக விளையாடினார். இந்த அணிக்குத் தேர்வான சோன் மார்சு காயம் அடைந்ததினால் இவருக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது. அந்தத் தொடரில் 16 போட்டிகளில் விளையாடிய இவர் 577 ஒட்டங்கள் எடுத்தார். இதில் இரண்டு நூறுகளும் , மூன்று அரைநூறுகளும் அடங்கும். இவரின் சராசரி 44.38 ஆகும். 2018 இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் இவரை எந்த அணியினரும் வாங்குவதற்கு முன்வரவில்லை.[3] சர்வதேச போட்டிகள்டால்பின்ஸ் அணிக்காக உள்ளூர்ப் போட்டிகளில் சிறப்பான பங்களிப்பை கொடுத்ததன் மூலம் தனது 21 ஆம் வயதில் தென்னாப்பிரிக்க அ அணியில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார்.[4] இந்திய மரபைச் சேர்ந்த ஒருவர் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்காக விளையாடும் வாய்ப்பினைப் பெறுவது இதுவே முதல்முறையாகும்.[5][6] சாதனைகள்இவர் பல சாதனைகளைப் படைத்துள்ளார். ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விரைவாக 2000 முதல் 7000 ஓட்டங்கள் எடுத்தவர் எனும் சாதனையைப் படைத்தார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் மூன்று சதம் அடித்த முதல் தென்னாப்பிரிக்க வீரர் எனும் சாதனையைப் படைத்தார். இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணிலேயே நூறு அடித்த முதல் தென்னாப்பிரிக்க வீரர் எனும் சாதனையைப் படைத்தார். 2010 ஆம் ஆண்டில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் தேர்வுத் துடுப்பாட்டம் ஆகிய இரு வடிவங்களிலும் ஒரே ஆண்டில் 1000 ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்தார்.[7] இவரும் பிரான்சுவா டு பிளெசீயும் இணைந்து 2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் மார்ச் 24 இல் அயர்லாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராக மனுகா ஓவலில் நடைபெற்ற போட்டியில் 247 ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்தனர். இந்தப் போட்டியில் அசீம் அம்லா 159 ஓட்டங்கள் எடுத்தார். இதுதான் இவரின் அதிகபட்ச ஒட்டமாகும். இந்த அணியின் மொத்த ஒட்டம் 411 ஆகும். ஒரு அணி தொடர்ச்சியாக 400 ஓட்டங்களுக்கு மேல் எடுப்பது இதுவே முதல்முறையாகும்.[8] ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 8 வது நூறு முதல் 26 ஆவது நூறுகள் வரை விரைவாக எடுத்து சாதனை படைத்தார்.[9] பன்னாட்டு இருபது20 போட்டிகளில் டுவைன் பிராவோவுடன் இணைந்து 5 ஆவது இணைக்கு 150 ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்தார்.[10][11] அதிவேகமாக சர்வதேச போட்டிகளில் 50 நூறுகள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலியின் சாதனையை சமன் செய்தார்.[12][13] ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 25 நூறுகள் அடித்த முதல் தென்னாப்பிரிக்க வீரர் எனும் சாதனையைப் படைத்தார்.[14] தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 25 நூறுகள் அடித்த நான்காவடு வீரரானார். இதற்குமுன் இந்தச் சாதனையை சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் இந்தச் சாதனையைப் படைத்தனர்.[15] மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்அசீம் ஆம்லா பரணிடப்பட்டது 2018-04-16 at the வந்தவழி இயந்திரம்'விசுடன் |
Portal di Ensiklopedia Dunia