அசுமதுல்லா சகிதிஅசுமதுல்லா சகிதி (Hashmatullah Shahidi ( பஷ்தூ: حشمت الله شاهدي ; பிறப்பு 4 நவம்பர் 1994) ஒரு ஆப்கான் துடுப்பாட்ட வீரர் . அக்டோபர் 2013 இல் கென்யத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தானுக்காக தனது ஒருநாள் சர்வதேச போட்டியில் இவர் அறிமுகமானார்.[1] 2018 ஜூன் மாதம் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடிய பதினொரு துடுப்பாட்ட வீரர்களில் இவரும் ஒருவர். இவர் ஆப்கன் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய போட்டிகளில் விளையாடி வருகிறார், மேலும் இவர் பட்டியல் அ துடுப்பாட்ட ம், முதல் தரத் துடுப்பாட்ட ம் மற்றும் இருபது20 ஆகிய உள்ளூர்ப் போட்டிகளிலும் விளையாடி வருகிறார். இவர் ஆப்கான் தேசிய அணி தவிர ஆப்கானித்தான் அ அனி, 19 வயதிற்கு உட்பட்ட ஆப்கானித்தான் அணி, அமோ ரீஜியன் அணி, இசுப்பீன் கர் அணி ஆகிய அணிகள் சார்பாகவும் இவர் துடுப்பாட்டப் போட்டிகளில் விளாஇயாடி வருகிறார். துடுப்பாட்ட வாழ்க்கைஸ்பீன் கர் பிராந்தியத்திற்கு சார்பாக பேண்ட்-இ-அமீர் பிராந்தியத்திற்கு எதிரான போட்டியில் இவர் 2017–18 அஹ்மத் ஷா அப்தாலி 4 நாள் போட்டித் தொடரில் விளையாடினார். அந்தத் தொடரின் இறுதிப் போட்டியில், முதல் ஆட்டப் பகுதியில் இவர் 163 ஓட்டங்கள் எடுத்தார்.[2] . மே 21, 2019 அன்று அயர்லாந்தில் நடைபெற்ற அயர்லாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தனது முதல் சர்வதேச ஆறு ஓட்டங்களை அடித்தார். அது வரையில் இவர் ஒருநாள் போட்டியில் ஒரு ஆறு ஓட்டங்கள் கூட இல்லாமல் இல்லாமல் 865 * ஓட்டங்களை எடுத்திருந்தார். தேர்வுத் துடுப்பாட்டம்2018 ஜூன் மாதம் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடிய பதினொரு துடுப்பாட்ட வீரர்களில் இவரும் ஒருவர்.[3][4] அவர் 14 ஜூன் 2018 அன்று இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இவர் அறிமுகமானார்.[5] ஆட்டத்தின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 36 ஓட்டங்கள் எடுத்தார். பிப்ரவரி 2019 இல், இந்தியாவில் நடைபெற்ற அயர்லாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டித் தொடருக்கான ஆப்கானிஸ்தானின் தேர்வுத் துடுப்பாட்ட அணியில் இவர் இடம் பெற்றார்.[6][7] ஒருநாள்2019 ஆம் ஆண்டில் ஐசிசி துடுப்பாட்ட உலகக் கோப்பை போட்டித் தொடரில் இவர் விளையாடினார். சூன் 29, லீட்ஸ் துடுப்பாட்ட மைதானத்தில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பட்டியல் அ போட்டியில் இவர் விளையாடினார். அந்தப் போட்டியில் இவர் பந்துவீச வாய்ப்பு கிடைக்கவில்லை. பின் மட்டையாட்டத்தில் தான் சந்தித்த முதல் பந்தில் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் சகீன் ஷா அப்ரிதி பந்துவீச்சில் இவர் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் பக்கித்தான் துடுப்பாட்ட அணி 3 இலக்குகளில் வெற்றி பெற்றது.[8] 2019 துடுப்பாட்ட உலகக் கோப்பைஏப்ரல் 2019 இல், 2019 துடுப்பாட்ட உலகக் கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணியில் அவர் இடம் பெற்றார்.[9][10] 18 ஜூன் 2019 அன்று, இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில், ஹஷ்மதுல்லா ஒருநாள் போட்டிகளில் தனது 1,000 வது ஓட்டத்தினை எடுத்தார்.[11] குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia