அண்ணன் (திரைப்படம்)
அண்ணன் (Annan) 1999 ஆம் ஆண்டு ராமராஜன் மற்றும் சுவாதி நடிப்பில், இளையராஜா இசையில், அனு மோகன் இயக்கத்தில், டி. சீனிவாசன் தயாரிப்பில் வெளியான தமிழ்த் திரைப்படம்.[1][2][3][4] கதைச்சுருக்கம்வேலன் (ராமராஜன்) கிராமத்திலுள்ள சந்தையை நிர்வகிப்பவன். அவனது தங்கை லட்சுமியின் (அபூர்வா) மீது மிகுந்த பாசம் உடையவன். லட்சுமி பள்ளியில் ஆசிரியையாக பணிசெய்கிறாள். சுந்தரி (சுவாதி) அவள் தந்தையோடு (ஆர். சுந்தர்ராஜன்) அந்தக் கிராமத்திற்கு வருகிறாள். வேலனும் சுந்தரியும் காதலர்கள். லட்சுமியும் அந்த கிராமத்தில் பணியாற்றும் கிராம வளர்ச்சி அலுவலரான செல்வமும் (வாசன்) காதலர்கள். வேலன் தன் தங்கைக்கும் கிராமத்தின் தலைவர் ராசப்பன் (மணிவண்ணன்) மகன் மாணிக்கத்திற்கும் (பொன்வண்ணன்) திருமணம் செய்ய முடிவுசெய்கிறான். மாணிக்கம் மோசமான நடத்தையுள்ளவன். கிராமத்து வழக்கத்தை மீறி செல்வம் நடந்துகொண்டதால் அவன் பஞ்சாயத்தில் தண்டிக்கப்படுகிறான். தான் செல்வம் மீது வைத்துள்ள காதலை அனைவர் முன்னிலையிலும் வெளிப்படுத்தி அவனைத் திருமணம் செய்கிறாள் லட்சுமி. அதற்கு பிறகு செல்வத்தைப் பற்றிய உண்மை தெரியவருகிறது. செல்வம் கிராம வளர்ச்சி அலுவலர் இல்லை. அவன் ஒரு காவல் அதிகாரி. அவன் வேலனைக் கைதுசெய்யும் திட்டத்தோடு அந்தக் கிராமத்திற்கு வந்துள்ளான். ஏனென்றால் செல்வத்தின் தந்தைக்கும் வேலனுக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் அவரைக் கொலை செய்த குற்றத்திற்காக வேலனைக் கைது செய்கிறான். வேலன் சிறைக்குச் சென்றதும் கிராமத்தின் சந்தையை நிர்வகிக்கும் பொறுப்பு மாணிக்கத்திடம் வருகிறது. போதுமான ஆதாரங்கள் இல்லாததால் நீதிமன்றம் வேலனை வழக்கிலிருந்து விடுதலை செய்கிறது. வேலன் தன் கிராமத்திற்கு வருகிறான். அவனது தங்கை வாழ்வு என்னவானது? அவனுக்கும் சுந்தரிக்கும் திருமணம் நடந்ததா என்பது மீதிக்கதை. நடிகர்கள்
இசைபடத்தின் இசையமைப்பாளர் இளையராஜா. பாடலாசிரியர்கள் கங்கை அமரன், முகமது மேத்தா, காமகோடியன் மற்றும் அறிவுமதி.[5]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia