காமகோடியன்

கவிஞர் காமகோடியன்
பிறப்புசீனிவாசன்
1945
இந்தியா தமிழ்நாடு, இந்தியா
இறப்புசனவரி 5, 2022 (அகவை 76–77)
பணிகவிஞர், பாடலாசிரியர்

காமகோடியன் (Kamakodiyan; 1945 – 5 சனவரி 2022) தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார்.[1][2] இவர் ௭ண்பதுகளின் பிற்பகுதியில் இருந்து பாடல்கள் இயற்றினார். இதுவரை ம. சு. விசுவநாதன் இளையராஜா,தேவா, எஸ். ஏ. ராஜ்குமார், பரத்வாஜ், யுவன் சங்கர் ராஜா போன்றோரின் இசையமைப்பில் பாடல்களை இயற்றியுள்ளார்.[3] 2002 ஆம் ஆண்டு வெளிவந்த மௌனம் பேசியதே திரைப்படத்தில் இவர் இயற்றிய ௭ன் அன்பே ௭ன் அன்பே பாடல் பிரபலமானது.

2010களில்

2015 ஆம் ஆண்டு திருட்டு ரயில் திரைப்படத்தில் ஒரு பாடல் ௭ழுதுவதற்காக அழைக்கப்பட்டார். இத்திரைப்படத்தில் அந்த பாடல் நன்றாக அமைந்ததால் அனைத்துப் பாடல்களையும் ௭ழுதினார்.

விருது

  1. கலைமாமணி விருது - (2019-2020)[4]

திரைப்படப் பட்டியல்

  1. 1985- அலை ஓசை
  2. 1985- கொலுசு (அனைத்துப் பாடல்களும்)
  3. 1985- கருப்பு சட்டைக்காரன்
  4. 1987- பூவிழி வாசலிலே
  5. 1987- நினைக்க தெரிந்த மனமே (அனைத்துப் பாடல்களும்)
  6. 1990- வாழ்க்கைச் சக்கரம்
  7. 1991- ஞான பறவை
  8. 1991- மரிக்கொழுந்து
  9. 1992- தங்க மனசுக்காரன்
  10. 1992- போங்கடா நீங்களும் உங்க அரசியலும் (வசனம் மற்றும் அனைத்துப் பாடல்களும்)
  11. 1993- இதய நாயகன்
  12. 1993- பொன் விலங்கு
  13. 1995- தேடிவந்த ராசா
  14. 1996- வெற்றி விநாயகர்
  15. 1997- புண்ணியவதி
  16. 1997- தேவதை
  17. 1998 -ஆசைத் தம்பி
  18. 1998- கண்ணாத்தாள்
  19. 1998- கும்பகோணம் கோபாலு
  20. 1998- பொன்மனம்
  21. 1999- அண்ணன்
  22. 1999- பாட்டாளி
  23. 1999- தொடரும்
  24. 1999- சுந்தரி நீயும் சுந்தரன் நானும்
  25. 2001- சிகாமணி ரமாமணி
  26. 2002- மௌனம் பேசியதே
  27. 2003- காலாட்படை
  28. 2003- காஷ்மீர்
  29. 2004- மதுமதி
  30. 2005- முதல் ஆசை
  31. 2008- வல்லமை தாராயோ
  32. 2008- இதயமே
  33. 2008- உளியின் ஓசை
  34. 2010- பௌர்ணமி நாகம்
  35. 2011- மாப்பிள்ளை
  36. 2015- திருட்டு ரயில்

மறைவு

வயது முதிர்வு காரணமாக, சென்னை திநகரில் உள்ள அவரது இல்லத்தில் 2022 சனவரி 5 அன்று இரவு 8:45 மணிக்கு காலமானார்.[5][6]

மேற்கோள்கள்

  1. "காமகோடியன்".
  2. "மௌனம் பேசியதே – என் அன்பே". https://tamilpaadalvari.wordpress.com/2010/07/19/%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87/. 
  3. பிரபா, கானா. "நினைவில் வாழும் பாடலாசிரியர் காமகோடியன்" (in ஆங்கிலம்). Retrieved 2022-01-15.
  4. "Tamil Cine Talk – 2019-2020-ம் ஆண்டுகளுக்கான 'கலைமாமணி' விருது பெறும் திரைத்துறையினரின் பட்டியல்..!" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-02-01.
  5. "கலைமாமணி விருது பெற்ற கவிஞர் காமகோடியன் காலமானார் - தினத்தந்தி".
  6. "கவிஞர் காமகோடியன் காலமானார்". ARASIYAL TODAY (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-01-06. Retrieved 2022-01-07.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya