அத்தியாவசிய கொழுப்பு அமிலம்
அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் (essential fatty acids; EFAs) மனிதர்களாலும், விலங்குகளாலும் தொகுக்க முடியாத, உடல் நலத்திற்கு தேவையான, கட்டாயம் உட்கொள்ள வேண்டிய கொழுப்பு அமிலங்களாகும்[1]. எரி பொருளாக மட்டும் பயன்படுபவைகளைப் போலல்லாமல், உயிரியல் பணிகளுக்குத் தேவையான கொழுப்பு அமிலங்களையே இன்றியமையா கொழுப்பு அமிலங்கள் என்கிறோம். மனிதர்களுக்கு தேவையான அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள் இரண்டு மட்டுமே: ஆல்ஃபா-லினோலெனிக் அமிலம் (ஒமேகா-3 கொழுப்பு அமிலம்) மற்றும் லினோலெயிக் அமிலம் (ஒமேகா-6 கொழுப்பு அமிலம்)[2][3][4]. பிற கொழுப்பு அமிலங்களில் நிபந்தனைக்குட்பட்ட அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள் பின்வருமாறு: காமா-லினோலெனிக் அமிலம் (ஒமேகா-6 கொழுப்பு அமிலம்), லாரிக் அமிலம் (நிறைவுற்ற கொழுப்பு அமிலம்) மற்றும் பால்மிட்டோலெயிக் அமிலம் (ஒற்றைநிறைவுறாக் கொழுப்பு அமிலம்)[5]. 1923-ஆம் ஆண்டு முதன்முதலில் இந்த இரண்டு அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள் கண்டறியப்பட்டபோது, இவைகளுக்கு உயிர்ச்சத்து எஃப் என்று பெயரிடப்பட்டது. பின்பு, 1930-ஆம் ஆண்டு எலிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளிலிருந்து அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்களை உயிர்ச்சத்தாக இல்லாமல் கொழுப்புகளாக வகைப்படுத்துதலே சிறந்தது என காண்பிக்கப்பட்டது[6]. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia