அத்த மக ரத்தினமே
அத்த மக ரத்தினமே (Atha Maga Rathiname) 1994-இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். செல்வா நடித்த இப்படத்தை கங்கை அமரன் இயக்கினார்.[1][2] கதைச்சுருக்கம்முனியாண்டி (செல்வா) பாண்டியம்மா (இரஞ்சிதா) ஆகியோர் பல ஆண்டுகளாகக் காதலித்து வருகின்றனர். முனியாண்டி எப்போதும் மைனர் இராஜபாண்டிக்கு (பாண்டியன்) எதிராகக் கிராமத்தின் காளைப் பந்தயத்தில் வெற்றி பெறுவார். இராஜபாண்டி கிராமத்தின் பணக்காரர் ஆவார். பாண்டியம்மா மீது ஒரு கண் வைத்திருக்கிறார். முனியாண்டியின் தாய் அங்கம்மா தனது மகனுக்கு ஒரு மணப்பெண்ணைத் தேடுகிறார். கடைசியில் விஜயா (விஜி) என்ற பணக்காரனின் மகளைக் காண்கிறார். அங்கம்மா பின்னர் முனியாண்டியையும் பாண்டியம்மாவையும் பிரிக்க முயற்சிக்கிறார். அடுத்தது படத்தின் மீதிக்கதையை உருவாக்குகிறது. நடிகர்கள்
பாடல்கள்இத்திரைப்படத்தில் கங்கை அமரன் ஏழு பாடல்களையும் அவரே எழுதி இசையமைத்திருந்தார். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia