செல்வா (நடிகர்)
செல்வா (Selva (actor)) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ் படங்களில் முன்னணி மற்றும் துணை வேடங்களில் நடித்துள்ளார்.[1] 1990 களில் முன்னணி நடிகராக பல திரைப்படங்களில் நடித்த பிறகு, 2010 களின் மிஷ்கின் இயக்கிய இரண்டு படங்களில் மறுபிரவேசம் செய்தார்.[2][3] குடும்பம் மற்றும் ஆரம்ப வாழ்க்கைசெல்வா தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தின் லட்சுமிபுரத்தில் தமிழ் குடும்பத்தில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியான டி. சி. வரதராஜன் மற்றும் ஆண்டாள் ஆகியோருக்கு பிறந்தார்.[4] இவரது சகோதரர் ராஜசேகர், தெலுங்கு படங்களில் முன்னணி நடிகராக உள்ளார். செல்வா சென்னை அண்ணாநகரில் வளர்ந்தார். சேத்துப்பட்டு மெட்ராஸ் கிரிஸ்துவர் கல்லூரியில் பயின்றார். தொழில்1991 ஆம் ஆண்டு கஸ்தூரி ராஜா இயக்கிய ஆத்தா உன் கோயிலிலே என்ற கிராம நாடக பட்த்தில் செல்வா நடிகை கஸ்தூரியுடன் அறிமுகமானார் இந்த படம் திரையரங்குகளில் 100 நாட்ட்களைக் கடந்து ஓடி வெற்றிபெற்றது பின்னர் ஆர். உமாசங்கரின் தம்பி ஊருக்கு புதுசு படத்தில் நடித்தார் . 1992 ஆம் ஆண்டில், இவர் மனோபாலாவின் செண்பகத் தோட்டம் மற்றும் கிழக்கு வீதி ஆகிய படங்களில் நடித்தார். 1993 ஆம் ஆண்டில், மாமியார் வீடு படத்தில் சரவணனுடன் இணைந்து இரட்டை நாயகனர்களில் ஒருவராக நடித்தார். பின்னர் ராக்காயிகோயில் படத்திலும், நகரத்தை அடிப்படையாகக் கொண்ட முதல் படமாக மதுரை மீனாட்சி ஆகிய படங்களில் தோன்றினார். 1994 தொடக்கத்தில், இவர் கிராம நாடகப் படமான சக்திவேல் படத்தில் கனகாவுடன் இணைந்து நடித்தார். அப்படம் கே. எஸ். ரவிக்குமார் இயக்க ஏ.வி.எம் புரொடக்சன்ஸ் தயாரித்தது. 1994 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், தெலுங்குத் திரைப்படமான கேங்மாஸ்டரில் மாணவராக இவர் நடித்தார், அப்படத்தில் இவரது அண்ணன் ராஜசேகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் மைந்தன் என்ற கிராம நாடகப் படத்தில் கோபக்கார இளைஞன் பாத்திரத்தில் நடித்தார்; தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் விமர்சகர் மாலினி மன்னாத் கூறுகையில்: "செல்வா தன்னை நன்றாக வெளிப்படுத்தியுள்ளார்" என்றார்.[5] 1994 இன் பிற்பகுதியில், கங்கை அமரனின் அத்த மக ரத்தினமே படத்தில் நடித்தார். 1995 ஆம் ஆண்டில், மண்ணைத் தொட்டு கும்பிடணும் படத்தில் இயக்குநர் ஆர். உமாசங்கருடன் இரண்டாவது முறையாக இணைந்தார். 1996 ஆம் ஆண்டில், கஸ்தூரி ராஜா இயக்கிய வெற்றிப்படமான நாட்டுப்புறப் பாட்டு படத்தில் நாட்டுப்புற நடனக் கலைஞராக நடித்தார். பின்னர் சுகன்யா மற்றும் நெப்போலியன் இணைந்து நடித்த புதிய பராசக்தியில் தோன்றினார். 1997 ஆம் ஆண்டில், ராம நாராயணனின் நாட்டுப்புற நாயகன் படத்தில் நடித்தார். 1998 ஆம் ஆண்டில், நகைச்சுவை பொழுதுபோக்கு படமான கோல்மால் படத்தை இயக்கி நடித்தார். இந்த படம் வணிக ரீதியாக சராசரிக்கும் குறைவான வசூலை ஈட்டியதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இது திரையுலகிலிருந்து இவர் ஒதுங்குவதற்கு முந்தைய இவரது இறுதி படமாக மாறியது. பின்னர் பாலாவின் முதல் படமான சேது படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால் பின்னர் இவருக்கு பதிலாக விக்ரம் நடித்தார். 14 ஆண்டுகளாக நடிப்புத் துறையிலிருந்து விலகி இருந்த இவர், தனது சகோதரர் ராஜசேகரின் தெலுங்கு படங்களின் தமிழ் மொழிமாற்றுப் பதிப்புகளுக்கு உரையாடல் எழுத்தாளராக பணியாற்றினார். குற்றவியல் பரபரப்பூட்டும் படமான யுத்தம் செய் (2011) படத்தில் எதிர்மறை பாத்திரத்தில் நடிக்க இயக்குநர் மிஷ்கின் இவரை அழைத்தார், இது இவரது மறுபிரவேசமானது.[6] பின்னர் தனது அடுத்த படமாக, சூப்பர் ஹீரோ திரைப்படமான மிஷ்கினின் முகமூடி (2012) படத்தில் ஒப்பந்தமானார். இதில் ஜீவாவின் குங் ஃபூ மாஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்தார். இப்படத்திற்கு தயாராகும் பொருட்டு மன்சூரியா குங்ஃபூ ஆசிரியரான ஆர். சேகரின்,[7] மேற்பார்வையில் ஆறு மாதங்கள் குங்ஃபூ பயிற்சி பெற்றார். மேலும் தற்காப்புக் கலை குறித்த புத்தகங்களைப் படித்தார். இருப்பினும், இந்த படம் எதிர்மறையான விமர்சனங்களுடன் வெளியாகி வணிக ரீதியாக பெருந்த் தோல்வியைத் தழுவியது.[8] திரைப்படவியல்
குறிப்புகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia