அந்தராக்னி (Antaragni)(பொருள்:"நெருப்பு உன்னுள்") என்பது கான்பூரில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் நடைபெறும் வருடாந்திர கலாச்சார விழாவாகும். இந்த விழா வழக்கமாக அக்டோபர் மாதத்தில் நடைபெறும்.[1] 1965ஆம் ஆண்டு முதல் நான்கு நடக்கும் விழாவாக இது நடைபெறுகிறது. இத்திருவிழாவின் போது இந்தியாவிலுள்ள 350 கல்லூரி மாணவர்கள் பங்கேற்கின்றன. அண்மைக்காலத்தில் பார்வையாளர்களையும் பல ஆண்டுகளாக ஊடக கவனத்தையும் ஈர்த்துள்ளது.[2] இது தொழில்முறை நிகழ்ச்சிகள், போட்டிகள், இசை நிகழ்ச்சிகள், டிஸ்கோ ஜாக்கி, அழகு நயப்புக் காட்சி, இந்திய நாட்டுப்புற நடனங்கள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளைக் கொண்டுள்ளது.
வரலாறு
2006ஆம் ஆண்டு அந்தராக்னியில் விசுவ மோகன் பட் நிகழ்ச்சி நடத்தினார்
அந்தராக்னி 1965-ல் கல்லூரிகளுக்கிடையேயான கலாச்சார நிகழ்வாகத் தொடங்கியது. திருவிழா தொடங்கப்பட்ட 27 ஆண்டுகளுக்குப் பிறகு, 1993ஆம் ஆண்டில் கல்பெசுட் என்பதிலிருந்து அந்தராக்னி எனப் பெயர் மாற்றப்பட்டது. திருவிழா முழுக்க முழுக்க இதொக கான்பூர் மாணவர்களால் ஏற்பாடு செய்யப்படுகிறது.[3] அந்தராக்னி குழுவின் தலைவராக ஆசிரியர் ஒருவர் செயல்படுவார். 350க்கும் மேற்பட்ட இந்தியக் கல்லூரிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளன.
இந்தியா ஊக்கமூட்டுகிறது- அரசியல்வாதிகள், தலைவர்கள் மற்றும் ஊடகப் பிரமுகர்களை உள்ளடக்கிய அரசியல் மன்றம்.[6] இளைஞர்களின் கலாச்சாரத்திற்கு முக்கியத்துவம் அளித்து சமூக தொடர்புடைய பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன. கடந்த ஆண்டுகளில், மாணவர் சமூகத்தின் பங்கேற்பைக் கண்டது. இந்த நிகழ்வின் பேச்சாளர்களில் தெலுங்குத் திரைப்பட இயக்குநர் சேகர் கம்முலா, மத்திய இடைநிலை கல்வி நிறுவனத் தலைவர் வினீத் ஜோஷி மற்றும் நடிகை, பாடகி மற்றும் சமூக ஆர்வலர் வசுந்தரா தாஸ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
கவி சம்மேளனம் - கவிதைப் போட்டி. இதில் ஓவியர், பேராசிரியர், கவிஞர் மற்றும் திரைப்பட பாடலாசிரியர் ரஹத் இந்தோரி மற்றும் கவிஞர் கிர்த்தி காலே உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
திரைப்பட தயாரிப்பு போட்டிகள் - நடுவர்களாக அப்பாஸ் டைரேவாலா மற்றும் லவ் ரஞ்சன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்தி இலக்கிய நிகழ்வுகள் - நடுவர்களில் இந்தி எழுத்தாளர்கள் நசிரா ஷர்மா, லீலாதர் ஜகுடி மற்றும் ரவீந்திர பிரபாத் ஆகியோர் அடங்குவர்.
↑HT Correspondent (27 October 2006). "Antaragni-06 from Nov 2". Hindustantimes.com. Archived from the original on 25 January 2013. Retrieved 14 September 2010. {{cite web}}: |last= has generic name (help)