இந்திய தொழில்நுட்பக் கழகம் பட்னா
இந்திய தொழில்நுட்பக் கழகம் பட்னா (இ.தொ.க. பட்னா, IIT Patna அல்லது IITP ) இந்தியாவின் பீகார் மாநில தலைநகர் பட்னாவில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியாகும். இந்திய மனிதவள அமைச்சினால் 2008ஆம் ஆண்டு புதிதாக அமைக்கப்பட்ட ஆறு இ.தொ.கழகங்களில் ஒன்றாகும்[1]. 2008-2009 கல்வியாண்டு முதல் பட்னாவின் பாடலிபுத்திரா காலனியில் அமைந்துள்ள நவீன் அரசு பல்தொழில்நுட்பப் பயிலக வளாகத்தில் இ.தொக.குவகாத்தி வழிகாட்டுதலில் இயங்கத் துவங்கியுள்ளது.[2] வளாகம்இ.தொ.க பட்னா ஜூலை 25,2008 அன்று பதிவு செய்யப்பட்டு ஆகஸ்ட் 6, 2008[3] முதல் இ.தொ.க குவகாத்தி வழிகாட்டுதலில் இயங்குகிறது[4]. பட்னாவின் புறநகரில் 600 ஏக்கர் நிலப்பரப்பில் நிரந்தர அமைவிடம் கண்டறியப்பட்டுள்ளது.45000 ச.அடி கட்டிடப் பரப்பு கட்டுமானத்தில் உள்ளது. ஜூலை 2010 முதல் புதிய இடத்திலிருந்து இ.தொ.க இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆடவருக்கும் மகளிருக்கும் இரு விடுதிகளும் தயார்நிலையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கல்வி திட்டங்கள்தனது முதலாண்டில்,2008-2009, மூன்று பட்டப்படிப்பு திட்டங்களை வழங்குகிறது:
வரும் ஆண்டுகளில் மேலும் கூடுதல் கல்வித்திட்டங்களும் ஆய்வு திட்டங்களும் மற்ற இ.தொ.கழகங்களைப் போன்றே வகுக்கப்படும்.
மேலும் பார்க்கமேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia