அந்த 7 நாட்கள்
அந்த 7 நாட்கள் (Andha 7 Naatkal) 1981 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி தீபாவளி அன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1]கே. பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாக்யராஜ், ராஜேஷ், அம்பிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தில் குறைந்த எண்ணிக்கையில் பாத்திரங்களைக் கொண்டு இயல்பான திரைக்கதை அமைந்துள்ளது. இது இந்தியில் வோ சாத் தின் என்ற பெயரில் படமாக்கப்பட்டது.[2] ஆனந்த விகடன் வாரப் பத்திரிகை இப்படத்திற்கு நூற்றுக்கு 58 மதிப்பெண்கள் வழங்கி பாரட்டியது.[3] கதைச் சுருக்கம்பாலக்காடு மாதவன் ஒரு அப்பாவி, இசையமைப்பாளராக ஆக விரும்பும் நபர். அவனுடைய உதவியாளர் கோபி ஒரு டோலக் வாத்தியக்காரன். மெட்ராசில் இசையமைப்பில் வாய்ப்பு தேடி வருகின்றனர். அவர்கள் வசந்தி என்ற இளம் பெண்ணின் வீட்டின் மாடியில் ஒரு ஓலைக் கூரை அறையை வாடகைக்கு எடுக்கின்றனர். மாதவன் திரைப்படங்களில் வாய்ப்பு தேடுகிறான். ஆனால் வெற்றி கிடைக்கவில்லை. வறுமையில் அவன் தவிக்கிறான். மாதவனின் திறமைகள் வசந்தியை கவர்கின்றன. விரைவில் அவள் அவனை காதலிக்கிறாள். எனினும் மாதவன் தயக்கம் காட்டுகிறான். வாழ்க்கையில் இன்னும் நிலைபெறாததால் அவளை தவிர்க்கிறான். தனது நிலைமை இப்படி இருந்தும் அவள் தன்னை காதலிக்கிறாள் என்பதை உணர்ந்தவுடன் அவனும் பதிலுக்கு காதலிக்கிறான். வசந்தியின் குடும்பம் ஆழ்ந்த நிதி நெருக்கடியில் உள்ளது. கடன்களை அடைக்க ஆனந்த் என்ற பணக்கார விதவையுடன் (அவனுக்கு ஒரு மகள் உள்ளாள்) அவளுக்கு திருமணம் நிர்ணயிக்கின்றனர். வசந்தியின் அவல நிலையைக் கண்ட மாதவன் அவளை கோவிலில் இரகசியமாக திருமணம் செய்ய ஒப்புகிறான். ஆனால் திருமணத்திற்கு சற்று முன்பு வசந்தியின் குடும்ப உறுப்பினர்களும் உறவினர்களும் அந்த இடத்திற்கு வருகின்றனர். அவர்கள் மாதவனை தாக்கி வசந்தியை அழைத்துப் போகின்றனர். வசந்தி பலவந்தமாக ஆனந்துடன் திருமணம் செய்யப்படுகிறாள். முதல் இரவில் வசந்தி விஷம் அருந்துகிறாள். ஆனால் தொழிலில் மருத்துவரான ஆனந்த் சரியான நேரத்தில் அவளை காப்பாற்றுகிறான். வசந்தி ஆனந்திடம் தனது கடந்த காலத்தை பற்றி கூறுகிறாள். அவன் அவளை மாதவனிடம் திருப்பி அனுப்ப வாக்குறுதி அளிக்கிறான். ஆனால் ஒரே ஒரு கோரிக்கை வைக்கிறான். அவனது தாய் மரணத்தின் விளிம்பில் உள்ளாள். தாயின் அழுத்தம் காரணமாக அவன் மறுமணத்திற்கு ஒப்புக்கொண்டான். அவள் ஏழு நாட்களுக்கு மேல் உயிர் வாழ மாட்டாள். இந்த ஏழு நாட்களுக்கு வசந்தி தனது மனைவியாக நடிக்க வேண்டும் என்று கேட்கிறான். அப்போது அவனது தாய் அமைதியாக இறக்க முடியும். அதன்பின் வசந்தி மாதவனிடம் திரும்பிச் செல்லலாம். அவள் ஒப்புக்கொள்கிறாள். ஆனால் அதே நேரத்தில் அவள் மெல்ல மெல்ல அவனது குடும்பத்தை ஏற்றுக்கொள்கிறாள். ஆனந்தின் மகளுடன் நெருக்கமாகிறாள். ஆனந்த் மாதவனை கண்டுபிடிக்கிறான். தன்னை ஒரு திரைப்பட தயாரிப்பாளராக காட்டிக்கொண்டு மாதவனுக்கு அடுத்த படத்தில் இசை அமைக்க வாய்ப்பு வழங்குகிறான். மாதவன் ஒப்புக்கொண்டு இசையமைக்க தொடங்குகிறான். ஆனந்த் மாதவன் மற்றும் வசந்தியின் காதல் கதையையும் வசந்தியின் திருமணத்தையும் படிப்படியாக மாதவனிடம் கூறுகிறான். ஆனால் வேறு பின்னணியில் கூறுகிறான். கூறப்படும் கதை தனது உண்மைக் கதை என்பதை மாதவன் உணரவில்லை. பாடல் அமைப்பில் ஆர்வமாக கவனம் செலுத்துகிறான். ஏழாம் நாள் ஆனந்தின் தாய் இறந்த பின்பு ஆனந்த் மாதவனை தனது வீட்டிற்கு விவாதத்திற்காக அழைக்கிறான். அவன் கதையை அந்த நிலைக்கு தொடர்கிறான் - நோயுற்ற மாமியார் இறந்துவிடுகிறாள், கதாநாயகி தனது கணவன் வீட்டை விட்டு தனது காதலனுடன் வாழ்வதற்காக போகிறாள். பின்னர் அவன் மாதவனிடம் இந்த அசாதாரணமான முடிவைப் பற்றி கருத்து கேட்கிறான். மாதவனுக்கு இது பிடிக்கவில்லை என்றாலும் "தயாரிப்பாளரை" மகிழ்விப்பதற்காக பாராட்டுகிறான். ஆனந்த் மாதவனை தனது அறைக்கு அழைத்துச் செல்கிறான். முன்பணம் கொடுப்பதாக கூறுகிறான். ஆனால் உண்மையில் வசந்தியை அவனிடம் ஒப்படைக்க நினைக்கிறான். மாதவன் முதலில் தயங்குகிறான். ஆனால் விரைவில் ஒரு நிபந்தனையுடன் ஒப்புக்கொள்கிறான். வசந்தி தனது காதலியாக இருந்த அதே விதத்தில் வர வேண்டும், தாலி இல்லாமல் வர வேண்டும் என்பதுதான் நிபந்தனை. எனினும் வசந்தியால் தாலியை கழற்ற முடியவில்லை. ஆனந்த் அதை அகற்ற முயற்சிக்கும்போது அவள் எதிர்க்கிறாள். அப்போது மாதவன் ஆனந்திடம் - "என்ட காதலி உங்களுக்கு மனைவி ஆயிட்டு வரும். ஆனால் உங்கள் மனைவி எனிக்கி காதலி ஆயிட்டு வராது" என்று கூறுகிறான். பாரம்பரிய மதிப்புகளை கடைபிடிப்பதே சரியான முடிவு என்று முடிவு செய்கிறான். அந்த தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு அங்கிருந்து வெளியேறுகிறான். நடிகர்கள்
விமர்சனங்கள்ஆனந்த விகடன் வார இதழில் வந்த விமர்சனத்தில் "பாக்யராஜின் குழப்பமில்லாத திரைக்கதை அமைப்பு, படத்தின் வெற்றிக்குப் பலமான அஸ்திவாரம். டாக்டரின் மனைவி தன் மாஜி காதலனுடன் ஒன்று சேர்ந்திருந்தால்கூட, அதையும் ஒப்புக்கொள்ளும் அளவுக்கு ஆரம்பத்திலிருந்தே கதையைப் பின்னியிருப்பது... கடைசியில், 'எங்கே அந்தத் தாலியைக் கழற்றுங்கள், பார்ப்போம்' என்ற சென்டிமென்ட்டை சாமர்த்தியமாக நுழைத்து இந்தக் கதை இப்படித்தான் முடியவேண்டும் என்பதை ஆணித்தரமாகச் சொல்லியிருப்பது..." என்று எழுதி 58100 மதிப்பெண்களை வழங்கினர்.[3] கல்கி இதழில் வந்த விமர்சனத்தில் "படம் முழுவது ஆசான் பாலக்காட்டு மாதவன் பாக்கியராஜும் சிஷ்யன் காஜாஷெரிப்பும் சிரிக்க வைக்கிறார்கள். கடைசி வரை நகைச்சுவையாய்க் கொண்டு போய்க் கடைசியில் சீரியஸாக்கும் வித்தை பாக்யராஜுக்குக் கைவந்து விட்டது" என்று விமர்சனம் செய்த நளினி சாஸ்திரி எழுதினார்.[6] மேற்கோள்கள்
நூற்பட்டியல்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia