முந்தானை முடிச்சு
முந்தானை முடிச்சு 1983 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே.பாக்கியராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாக்யராஜ், ஊர்வசி, தவக்களை மற்றும் பலரும் நடித்திருந்தனர். இது நடிகை ஊர்வசி அறிமுகமான திரைப்படம். ஊர்வசிக்கு முதல் திரைப்படம். இத்திரைப்படம் 22 ஜூலை 1983 இல் வெளியிடப்பட்டு ஒரு பெரிய வெற்றித் திரைப்படமானது. 3 மில்லியன் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு 40 மில்லியனை ஈட்டியது. திரையரங்குகளில் 25 வாரங்களுக்கு மேலாக திரையிடப்பட்டு வெள்ளி விழா படமானது. பாக்கியராஜ் அவரது நடிப்பிற்காக, சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை வென்றார். இந்த படம் தெலுங்கில் மூடு முல்லு (1983), இந்தியில் மாஸ்டர்ஜி (1985), கன்னடத்தில் ஹல்லி மேஷ்ட்ரு (1992) என மறுஆக்கம் செய்யப்பட்டது. பாடல்கள்இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[1][2] "அந்தி வரும் நேரம்" என்ற பாடல் மாயாமாளவகௌளை என்ற கருநாடக இராகத்திலும்,[3] "சின்னஞ்சிறு கிளியே" என்ற பாடல் சாருகேசி இராகத்திலும் அமைக்கப்பட்டது.[4] ஒலிச்சுவடில் ஆறு பாடல்கள் இருந்தன. அதில் ஐந்து பாடல்கள் மட்டும் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டது.[5]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia