ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி என்பது 2018 முதல் 2021 வரை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு குண்டான பெண்ணின் குடும்ப பின்னணியைக் கொண்ட தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த பருவத்தின் கதை இந்தி மொழி தொடரான 'போதோ பகி' என்ற தொடரின் கதையை தழுவி எடுக்கப்பட்டது.[1]
இந்த தொடர் ஆர். தேவேந்திரன் மற்றும் ஆர்.டி.நாரயணமூர்த்தி இயக்கத்தில் அஷ்வினி, வசந்குமார் மற்றும் புவியரசு போன்ற பலர் நடித்துள்ளார்கள்.[2]இது பல பிரச்சனைகளை மற்றும் கஷ்டங்கள்களை கடந்து வரும் ராசாத்தி என்ற குண்டுப் பெண்ணின் திருமண வாழ்க்கையை பற்றிய கதை ஆகும்.[3][4] இந்த தொடர் 23 ஏப்ரல் 2018 முதல் திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாகி, 24 அக்டோபர் 2021 அன்று 1016 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.
இந்த தொடரின் இரண்டாம் பருவம் ஒரு ஊருல இரண்டு ராஜகுமாரி என்ற பெயரில் அக்டோபர் 25, 2021 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனி வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்த தொடர் முதல் பருவத்தின் தொடர்ச்சியாகவும் ராசாத்தி, இனியன் மற்றும் அவர்களது மகளான பூமிகாவை சுற்றி நகர்கிறது.
ராசாத்தி என்ற பெண், குண்டாக இருப்பதால் விமர்சனங்களைச் சந்திக்கிறார். பிறகு அவர் இனியன் என்ற கபடி போட்டியாளரை மணந்து கொள்கிறார். இவர்கள் இருவரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது இத்தொடர் ஆகும்.