அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்
சுருக்கக்குறிஅமமுக
தலைவர்சி. கோபால்
நிறுவனர்டி. டி. வி. தினகரன்
பொதுச் செயலாளர்டி. டி. வி. தினகரன்
தொடக்கம்15 மார்ச்சு 2018; 7 ஆண்டுகள் முன்னர் (2018-03-15)
பிரிவுஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
தலைமையகம்21/11, மெயின் ரோடு, கற்பகம் கார்டன்ஸ், அடையாறு, சென்னை, தமிழ்நாடு – 600020, இந்தியா
மாணவர் அமைப்புஅமமுக மாணவர் அணி
இளைஞர் அமைப்புபுரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி
பெண்கள் அமைப்புஅமமுக பெண்கள் அணி
தொழிலாளர் அமைப்புஇதயதெய்வம் அம்மா தொழிற்சங்க கூட்டமைப்பு
விவசாயிகள் அமைப்புஅமமுக விவசாயிகள் பிரிவு
நிறங்கள்     பச்சை
இ.தே.ஆ நிலைஅங்கீகரிக்கப்படாத பதிவு செய்த கட்சி[1]
கூட்டணிதே. ச. கூ
மக்களவை உறுப்பினர்கள் எண்.,
0 / 543
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்.,
0 / 245
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
(தமிழ்நாடு சட்டப் பேரவை)
0 / 234
கட்சிக்கொடி
இணையதளம்
www.ammk.com
இந்தியா அரசியல்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (Amma Makkal Munnettra Kazagam, அமமுக) என்பது தமிழ்நாட்டில் செயல்படும் ஓர் அரசியல் கட்சியாகும். இது வி. கே. சசிகலா மற்றும் டி. டி. வி. தினகரனால், 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.[2] நவம்பர் 23, 2017 ஆம் ஆண்டு வி. கே. சசிகலா மற்றும் தினகரனிடம் இருந்து அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலைச் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் பறித்துக்கொண்டது.[3] இதனால் கட்சி மற்றும் சின்னம் இல்லாமல் ஆர். கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டார்.

அமைப்பின் பெயர்

மதுரை, மேலூரில் நடைபெற்றப் பொதுக் கூட்டத்தில் தனது புதிய அமைப்பின் பெயா் மற்றும் அமைப்பின் கொடியை மார்ச்சு 15, 2018 அன்று அறிவித்தார். அந்தக் கூட்டத்தில் தன் அமைப்பின் பெயர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்று அறிவித்தார்.[4]

கொடி

கறுப்பு, வெள்ளை, சிவப்பு நிற கொடியில் ஜெயலலிதாவின் படம் இடம் பெற்றுள்ளது. இரட்டை இலையையும், அதிமுகவையும் மீட்கும் வரை இந்த பெயரில் செயல்படுவோம் என்று டி. டி. தினகரன் தெரிவித்தார்.

2019 பாராளுமன்றத் தேர்தல்

2019 பாராளுமன்றத் தேர்தல் மற்றும் 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின் போது உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, தேர்தல் ஆணையம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு பரிசுப்பெட்டி சின்னத்தைப் பொதுச்சின்னமாக வழங்கியது. இந்தக் கட்சியானது தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படாததால் இந்த அணிக்குப் பொதுவான சின்னம் வழங்கியபோதும், அவர்கள் சுயேச்சைகளாகவே கருதப்படுவர் எனவும் உச்சநீதிமன்றம் அறிவித்தது.[5]

போட்டியிட்ட தேர்தல்கள்

இந்தியப் பொதுத் தேர்தல்கள்

புதுச்சேரியில், இந்தியப் பொதுத் தேர்தல்கள்
ஆண்டு தேர்தல் கட்சித் தலைவர் வென்ற தொகுதிகள் போட்டியிட்ட தொகுதிகள் வாக்கு (%) மாற்றம் முடிவு மொத்த வாக்குகள்
2019 பொதுத் தேர்தல் 2019 டி. டி. வி. தினகரன் 1 0.49 தோல்வி 4,791[6]
தமிழ்நாட்டில், இந்தியப் பொதுத் தேர்தல்கள்
ஆண்டு தேர்தல் கட்சித் தலைவர் வென்ற தொகுதிகள் போட்டியிட்ட தொகுதிகள் வாக்கு (%) மாற்றம் முடிவு மொத்த வாக்குகள்
2019 பொதுத் தேர்தல், 2019 டி. டி. வி. தினகரன் 38 5.38 தோல்வி 2,206,108[6]
2024 பொதுத் தேர்தல், 2024 டி. டி. வி. தினகரன் 2 0.91 தோல்வி 393,415[7][8]

மாநில சட்டமன்றத் தேர்தல்கள்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்[9]
ஆண்டு சட்டமன்றம் கட்சித் தலைவர் போட்டியிட்ட தொகுதிகள் வென்ற தொகுதிகள் மாற்றம் வாக்கு (%) வாக்கு மாற்றம் மொத்த வாக்குகள் முடிவு
2021 16வது டி. டி. வி. தினகரன் 165 2.35% 1,085,985 தோல்வி
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்[10]
ஆண்டு சட்டமன்றம் கட்சித் தலைவர் போட்டியிட்ட தொகுதிகள் வென்ற தொகுதிகள் மாற்றம் வாக்கு (%) வாக்கு மாற்றம் மொத்த வாக்குகள் முடிவு
2021 15வது டி. டி. வி. தினகரன் 25 0.55% 4,637 தோல்வி

கட்சித் தலைவர்கள் பட்டியல்

பொதுச் செயலாளர்கள்

வ எண் புகைப்படம் பெயர்
(பிறப்பு – இறப்பு)
பதவிக் காலம்
பதவி ஆரம்பம் பதவி முடிவு பதவியில் இருந்த நாட்கள்
1 டி. டி. வி. தினகரன்
(பி. 1963)
19 ஏப்ரல் 2019 தற்போது பதவியில் 6 ஆண்டுகள், 39 நாட்கள்

தலைவர்கள்

வ. எண் புகைப்படம் பெயர்
(பிறப்பு – இறப்பு)
பதவிக் காலம்
பதவி ஆரம்பம் பதவி முடிவு பதவியில் இருந்த நாட்கள்
1 சி. கோபால்
(பி. 1946)
6 ஆகத்து 2023 தற்போது பதவியில் 1 ஆண்டு, 295 நாட்கள்

மேற்கோள்கள்

  1. "List of Political Parties & Symbol MAIN Notification dated 23.09.2021". India: Election Commission of India. 23 September 2021. Retrieved 15 April 2022.
  2. "புதிய அமைப்பைத் தொடங்கினார் தினகரன்".
  3. "இரட்டை இலைச் சின்னம் எதன் அடிப்படையில் ஒதுக்கப்பட்டது? தேர்தல் ஆணையம் சொல்லும் விளக்கம்".
  4. "TTV Dinakaran Launches His Party 'Amma Makkal Munnetra Kazhagam'; Unveils Flag With Jayalalithaa's Photo".
  5. "டிடிவி தினகரன் அணிக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு: 59 தொகுதிகளில் ஒரே சின்னம் வழங்கியது தேர்தல் ஆணையம்". இந்து தமிழ் திசை. 29 மார்ச் 2019. Retrieved 9 ஏப்ரல் 2019.
  6. 6.0 6.1 "33. Constituency wise detailed result". Election Commission of India. 18 June 2021. https://old.eci.gov.in/files/file/13539-33-constituency-wise-detailed-result/. 
  7. "DMK wrests Theni from AIADMK; AMMK leader TTV Dhinakaran loses". The Hindu. 4 June 2024. Retrieved 7 June 2024.
  8. "Tiruchirappalli Lok Sabha Election Result 2024 Live". Oneindia. 4 June 2024. Retrieved 7 June 2024.
  9. "Tamil Nadu Assembly Election Results". Election Commission of India. Archived from the original on 6 April 2021. Retrieved 5 April 2021.
  10. "Puducherry Assembly Election Results". Election Commission of India. Archived from the original on 13 May 2021. Retrieved 5 April 2021.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya