அரசு மருத்துவக் கல்லூரி, திண்டுக்கல்அரசு மருத்துவக் கல்லூரி, திண்டுக்கல் (Government Medical College, Dindigul) என்பது தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் புதிதாக 2021-2022 கல்வி ஆண்டு முதல் செயல்படும் அரசு மருத்துவக் கல்லூரி ஆகும். திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைத்திட, திண்டுக்கல் அருகே உள்ள ஒடுக்கத்தில் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டு,[1] ரூபாய் 327 கோடி செலவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன.[2] இதன் பணிகள் முடிவடைந்தை அடுத்து இக்கல்லூரிக்கு தேசிய மருத்துவ ஆணையம் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கியது. இந்நிலையில் சனவரி 12, 2022 அன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி காணொலி காட்சிமூலம் இக்கல்லூரியினைத் திறந்து வைத்தார்.[3][4][5][6] நடப்பு கல்வியாண்டு முதல் இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெறுகிறது. ஆண்டு ஒன்றிற்கு 150 மாணவர் வீதம் சேர்த்துக்கொள்ளப்படுவர். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia