அரிகர் நாத் சாசுத்திரி
அரிகர் நாத் சாசுத்திரி (Harihar Nath Shastri) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச்[1] சேர்ந்த இவர் கான்பூரின் முதல் நாடாளுமன்ற உறுப்பினர் என்று அறியப்படுகிறார்.[2] தொழிலாளர் தலைவராகவும் இவர் தீவிரமாக பணியாற்றினார். 1920 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில், பொதுவுடமை வாதியாகத் திகழ்ந்தார். ஆனால் 1930 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் மிதவாதியாகக் கருதப்பட்டார். 1948 ஆம் ஆண்டில் இந்திய தேசிய இரயில்வே தொழிலாளர் சம்மேளனத்தின் முதல் தலைவராக இருந்தார்.[3] 1925 ஆம் ஆண்டில் மக்கள் சேவகர்கள் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினராக அதன் நிறுவனர்-இயக்குநர், மறைந்த லாலா லச்சபதி ராயால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடன் ஓராண்டு தனிச் செயலாளராகப் பணிபுரிந்தார். 1947 ஆம் ஆண்டில் இவர் இந்திய அரசியலமைப்புச் சபையில் உறுப்பினரானார், அது கலைக்கப்பட்டவுடன் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரானார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia