அரிசங்கர் பிரம்மா

ஹரிசங்கர் பிரம்மா
19வது இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்
பதவியில்
16 ஜனவரி 2015 [1] – 19 ஏப்ரல் 2015 [1]
குடியரசுத் தலைவர்பிரணாப் முகர்ஜி
பிரதமர்நரேந்திர மோதி
முன்னையவர்வீ. சு. சம்பத்
பின்னவர்சையத் நசிம் அஹ்மத் ஜெய்தி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு19 ஏப்ரல் 1950 (1950-04-19) (அகவை 75)[1]
கோசைகான், அசாம்[2]
முன்னாள் மாணவர்தூய எட்மண்டு கல்லூரி, சில்லாங் (பி. ஏ.)
குவகாத்தி பல்கலைக்கழகம் (எம். ஏ)
தொழில்குடிமைப் பணி அதிகாரி

அரிசங்கர் பிரம்மா அல்லது ஹரிசங்கர் பிரம்மா (Harishankar Brahma) (பிறப்பு:19 ஏப்பிரல் 1950[1])) இந்தியாவின் 19-வது புதிய தலைமை தேர்தல் ஆணையராக 16 சனவரி 2015 அன்று பதவியேற்றார். ஜே.எம்.லிங்டோவுக்குப் பிறகு வடகிழக்கு மாநிலத்திலிருந்து இந்தப் பதவிக்கு தேந்தெடுக்கப்பட்டுள்ள இரண்டாவது நபராவார்.

அரிசங்கர் பிரம்மா அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர். ஆந்திரப்பிரதேச 1975-ம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணி தொகுப்பைச் சேர்ந்தவர். அரிசங்கர் பிரம்மாவுக்கு வரும் ஏப்ரல் 19-ம் தேதி 65 வயது நிரம்புவதால் 19 ஏப்பிரல் 2015இல் ஓய்வு பெற்றார்.[3]

முந்தைய பதவிகள்

30 ஏப்பிரல் 2010 (ஓய்வு பெறும் வரை) மத்திய அரசின் எரிசக்தித் துறை செயலாளர்.
25 ஆகஸ்ட் 2010 முதல் 15 சனவரி 2015 முடிய இந்தியத் தேர்தல் ஆணையர்.

கல்வி

19 ஏப்பிரல் 1950இல் பிறந்த அரிசங்கர்பிரம்மா, அசாம், கௌகாத்தி பல்கலைகழகத்தில், அரசியல் அறிவியலில் பட்டமேற்படிப்பு முடித்தார்.[4]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 "Shri H.S.Brahma - Profile". Election Commission of India. Archived from the original on 6 November 2014. Retrieved 6 March 2019.
  2. Jyoti Mukul (21 January 2013). "BS People: Hari Shankar Brahma, election commissioner". பிசினஸ் ஸ்டாண்டர்ட். https://www.business-standard.com/article/economy-policy/bs-people-hari-shankar-brahma-election-commissioner-110100100012_1.html. 
  3. http://tamil.thehindu.com/india/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE/article6796651.ece
  4. http://eci.nic.in/eci_main1/ecb.aspx
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya