ஓம் பிரகாஷ் ராவத்ஓம் பிரகாஷ் ராவத் (பிறப்பு திசம்பர் 2, 1953) முன்னாள் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஆவார். இவர் மத்தியப் பிரதேச பிரிவைச் சேர்ந்த, 1977 ஆம் ஆண்டு குழுவில் வந்த ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அலுவலராவார். மத்திய சட்ட அமைச்சகம் இவரைத் தலைமைத் தேர்தல் ஆணையராக சனவரி 20 அன்று நியமித்தது. தலைமைத் தேர்தல் ஆணையராகப் பதவி வகித்து வந்த ஏ.கே. ஜோதியின் பதவிக்காலம் சனவரி 22 ஆம் தேதி நிறைவடைந்தது. புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் சனவரி 23 அன்று பதவியேற்றார்.[1][2] இவர் முன்னதாக இந்திய பொதுத்துறை தொழில் அமைச்சக செயலராகவும் பணியாற்றியுள்ளார். கல்விஇவர் முதுகலை இயற்பியல் பட்டத்தை வாரனாசி, பனாரசு இந்துப் பல்கலைக்கழகத்திலும் முடித்துள்ளார்.[3][4][5] இவர் 1989-90 ஆண்டுகளில், ஐக்கிய இராச்சியத்தில், சமூக வளர்ச்சித் திட்டமிடல் பாடத்தில் முதுகலைப் பட்டத்தைப் பெற்றுள்ளார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia