அருணாச்சலப் பிரதேச அரசுஅருணாச்சலப் பிரதேச அரசு (Government of Arunachal Pradesh) என்பது இந்திய மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தின் மாநில அரசாகும். இது அருணாச்சலப் பிரதேச ஆளுநர் தலைமையிலான நிர்வாகக் குழு, நீதித்துறை மற்றும் சட்டமன்றக் கிளை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் போலவே, அருணாச்சலப் பிரதேசத்தின் மாநிலத் தலைவரும் மத்திய அரசின் ஆலோசனையின் பேரில் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் ஆளுநர் ஆவார். முதலமைச்சர் அரசாங்கத்தின் தலைவர் மற்றும் பெரும்பாலான நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்டவர். ஆளுநர் பதவி பெரும்பாலும் சம்பிரதாயமானதாகவே இங்கும் உள்ளது. இட்டாநகர் அருணாச்சல பிரதேசத்தின் தலைநகரமாகவும் மற்றும் அருணாச்சல பிரதேச சட்டமன்றம் மற்றும் தலைமை செயலகத்தை கொண்டுள்ளது.[1] அருணாச்சலப் பிரதேசத்தின் தற்போதைய சட்டப் பேரவையானது 60 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஓரவை ஆகும். ஆட்சி கலைக்கப்படாவிட்டால், இதன் பதவிக் காலம் 5 ஆண்டுகள் ஆகும். அருணாச்சல பிரதேச மாநிலத்தில் எழும் வழக்குகள் தொடர்பான அதிகார வரம்பையும் அதிகாரங்களையும் கௌஹாத்தி உயர்நீதிமன்றம் மற்றும் நாகார்லாகுனில் உள்ள இட்டாநகர் நிரந்தர இருக்கைப் பயன்படுத்துகிறது. மேற்கோள்கள்
அதிகாரப்பூர்வ இணைய தளம் |
Portal di Ensiklopedia Dunia