அருணாசலப் பிரதேச சட்டப் பேரவை
அருணாசலப் பிரதேச சட்டப் பேரவை என்பது வடகிழக்கு இந்தியாவில் உள்ள அருணாசலப் பிரதேச மாநிலத்தின் ஒருமித்த ஓரவை சட்டமன்றமாகும். மாநிலத்தின் தலைநகரான இட்டாநகரில் சட்டப்பேரவையின் அமர்வு உள்ளது. சட்டப் பேரவையானது 60 சட்டப் பேரவை உறுப்பினர்களை உள்ளடக்கியது,[1] ஒரு உறுப்பினர் தொகுதிகளில் இருந்து நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். வரலாறு29 திசெம்பர் 1969 அன்று, அசாம் ஆளுநரை தலைவராகக் கொண்டு, வடகிழக்கு எல்லைப்புற முகமையின் (இன்றைய அருணாச்சலப் பிரதேசம்) ஆளுகைக்கான உச்ச ஆலோசனைக் குழுவான முகமை சபை நடைமுறைக்கு வந்தது. முகமை சபை 1972 அக்டோபர் 2 இல் பிரதேச சபையால் மாற்றப்பட்டது. 15 ஆகத்து 1975 இல் பிரதேச சபை தற்காலிக சட்டப் பேரவையாக மாற்றப்பட்டது. ஆரம்பத்தில், சட்டப் பேரவை 33 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது, அதில் 30 உறுப்பினர்கள் நேரடியாக ஒற்றை உறுப்பினர் தொகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர் மற்றும் 3 உறுப்பினர்கள் மத்திய அரசால் நியமனம் செய்யப்பட்டனர்.[2] பதவிகள் மற்றும் தற்போதைய உறுப்பினர்கள்தற்போதைய பேரவை அருணாசலப் பிரதேசத்தின் பத்தாவது சட்டப் பேரவையாகும்.
இவற்றையும் காண்க
குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia