அலஸ்டைர் குக்
அலஸ்டைர் நாதன் குக் (Alastair Nathan Cook, பிறப்பு: டிசம்பர் 25, 1984) என்பவர் இங்கிலாந்து அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரும் முன்னாள் அணித் தலைவரும் ஆவார். இவர் 65 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 26 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 142 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 75 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2006 - 2011 ஆண்டுகளில் இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். நவீன கால துடுப்பாட்டக்காரர்களில் குறிப்பிடத் தகுந்தவர்களில் ஒருவராகவும், அனைத்துக் காலத்திற்குமான சிறந்த துடுப்பாளர்களில் ஒருவராகவும் அறியப்படுகிறார். இவர் இங்கிலாந்து அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் , ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடியுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப்போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர்கள் பட்டியலில் 6 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இவர் 59 தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் 69 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இங்கிலாந்து துடுப்பாட்டத் தலைவராக இருந்துள்ளார். இதன்மூலம் அதிக போட்டிகளுக்கு இங்கிலாந்து அணித் தலைவராக இருந்தவர் எனும் சாதனையைப் படைத்துள்ளார்.[1] மேலும் தேர்வுத் துடுப்பாட்டங்களில் 12,000 ஒட்டங்களைக் கடந்த முதல் இங்கிலாந்து வீரர் மற்றும் ஆறாவது சர்வதேச வீரர் எனும் சாதனையையும் மிக இளம்வயதில் இந்தச் சாதனையைப் புரிந்தவர் எனும் சாதனையையும் படைத்துள்ளார். 32 தேர்வுத் துடுப்பாட்ட நூறுகள் அடித்துள்ளார். இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற 50 துடுப்பாட்டங்களில் விளையடிய பெருமையைப் பெற்றவர். இடதுகை மட்டையாளரான இவர் துவக்கவீரராக களமிறங்குகிறார். குக் எஸ்ஸெக்ஸ் அகாதமி சார்பாக 2003 ஆம் ஆண்டில் விளையாடத் துவங்கினார். 2006 ஆம் ஆண்டில் இவர் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்குத் தேர்வானார். அதற்கு முன்பாக இவர் இங்கிலாந்தில் உள்ள பல இளையோர் அணிக்காக விளையாடியுள்ளார். இவர் மேற்கிந்தியத் தீவுகள் நாட்டிற்கு ஈ சி பி தேசிய அகாதமி சார்பாக விளையாடிக் கொண்டிருந்தார். அதேசமயத்தில் இங்கிலாந்து தேசிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிக் கொண்டிருந்தது. அந்த அணியில் இருந்த மார்கஸ் ட்ரஸ்கொதிக்கிற்கு காயம் ஏற்படவே இவருக்கு அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. தனது 21 ஆம் வயதில் தனது முதல்போட்டியில் விளையாடிய இவர் நூறு அடித்தார். தனது முதல் ஆண்டிலேயே 1,000 ஓட்டங்களைக் கடந்தார். மேலும் இந்தியத் துடுப்பாட்ட அணி, பாக்கித்தான் துடுப்பாட்ட அணி, மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி மற்றும் வங்காளதேசத் துடுப்பாட்ட அணிகளுக்கு எதிராக இவர் பங்கேற்ற முதல் போட்டியில் நூறு அடித்துள்ளார். 2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆஷஸ் தொடரைக் கைப்பற்ற முக்கியக் காரணமாக இருந்தார்.[2] ஆகத்து 29, 2012 இல் ஆன்ட்ரூ ஸ்ட்ராவுஸ் தேர்வுத் துடுப்பாட்டங்களில் இருந்து ஓய்வுபெற்றதை அடுத்து தலைவர் பொறுப்புக்கு இவர் நியமிக்கப்பட்டார். குக் தலைமையிலான அணி இந்திய அணிக்கு எதிரான போட்டித் தொடரை வென்றது. இதன்மூலம் 1984-1985 ஆம் ஆண்டிற்கு அடுத்ததாக பெற்ற முதல் வெற்றி எனும் சாதனையை இவரின் அணி படைத்தது.[3] இவர் தலைவராக இருந்த முதல் ஐந்து போட்டிகளிலும் நூறு ஓட்டங்களை அடித்த தலைவர் எனும் சாதனையைப் படைத்தார்.[4] மே 30, 2015 இல் இங்கிலாந்து தேர்வுத் துடுப்பாட்டங்களில் அதிக ஓட்டங்கள் அடித்த கிரகாம் கூச் சாதனையை முறியடித்தார்.[5] இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிகளுக்கு இவரின் சாதனைகளைப் பாராட்டி இங்கிலாந்து அரசு இவருக்கு 2011 ஆம் ஆண்டில் எம்பீஇ எனும் பட்டமும் 2016 இல் சிபிஇ ஆகிய கௌரவ பட்டங்களையும் பெற்றார்.[6] 2012 ஆம் ஆண்டின் சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக இவரை விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு அறிவித்தது. . 2006 ஆம் ஆண்டில் இந்திய அணிக்கு எதிராக விதர்பா துடுப்பாட்ட வாரிய அரங்கத்தில் நடைபெற்ற போட்டியில் குக் சதமடித்ததன் மூலம் அறிமுகப் போட்டியில் சதமடித்த 16ஆவது இங்கிலாந்து வீரர் ஆனார். 2011 இல் பெர்மின்ஹாமில் உள்ள துடுப்பாட்ட மைதானத்தில் 294 ஓட்டங்கள் எடுத்தார்.மே 24, 2018இல் ஹெடிங்லேவில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரண்டாவது தேர்வுத் துடுப்பாட்டத்தில் விளையாடியதன் மூலம் அலன் போடரின் சாதனையைத் தகர்த்தார். அதர்கு முன்னதாக 153 தேர்வுப் போட்டிகளில் விளையாடியதே சாதனையாக இருந்தது.[7] செப்டம்பர் 12, 2018 இல் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரின் போது சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அலஸ்டைர் குக் (இங்) தனது 161 ஆவது மற்றும் இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக விளையாடினார்.[8][9] ஆரம்பகால வாழ்க்கைகிளோசெஸ்டரில் பிறந்த அலஸ்டைர் குக், இங்கிலாந்துக்காக விளையாடும் ஆங்கிலோ-வெல்ஷ் பாரம்பரியத்தின் பல வீரர்களில் ஒருவர் ஆவார். இவரது தாயார் ஸ்டீபனி ஸ்வான்சீயினைச் சேர்ந்த ஓர் ஆசிரியர் ஆவார்.[10] இவரது தந்தை கிரஹாம் தொலைத்தொடர்பு பொறியாளராக பணியாற்றினார். மேலும் கிராம துடுப்பாட்டப் போட்டியின் ரசிகராகவும் இருந்தார்.[11] குக் ஒரு தீவிர இசைக்கலைஞராக இருந்தார். எட்டு வயதிற்குள் அவர் கிளாரினெட்டைக் கற்றுக் கொண்டிருந்தார், லண்டனில் உள்ள செயின்ட் பால்ஸ் கதீட்ரல் பள்ளியில் இவர் பயின்றார். இவர் சிறுவனாக இருந்தபோது இவரது குடும்பம் எசெக்ஸில் உள்ள விக்காம் பிஷப்ஸில் வசித்து வந்தது.[12] தனது கோடை விடுமுறை நாட்களில், குக் அருகிலுள்ள மால்டன் துடுப்பாட்ட சங்கத்தில் துடுப்பாட்டம் விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். மேலும் 11 வயதிலேயே இவர் மூன்றாம் லெவன் அணிக்காக விளையாடிக் கொண்டிருந்தார். அவர் ஏழு ஆண்டுகளில் மால்டன் துடுப்பாட்ட அணிக்காக அவ்வப்போது விளையாடினார், அவரது இறுதி ஆண்டில் இவரின் சராசரி 168 ஆகும்.பின்னாளில் இந்தச் சங்கத்தின் கவுரவ உறுப்பினராக உள்ளார் [11] அவர் "ஒரு தேவதை போல பாடி, கிளாரினெட்டை வாசித்தார்".[13] பெட்ஃபோர்டில் கல்வி கற்றபோது, பியானோ மற்றும் சாக்ஸபோன் இசைக்கக் கற்றுக்கொண்டார்.[14] பெட்ஃபோர்டு பள்ளி லெவன் அணிக்கு சார்பாக மேரிலேபோன் துடுப்பாட்ட சங்கத்திற்கு எதிரான போட்டியில் இவர் நூறு ஓட்டங்களை எடுத்தார்.[11][15] அடுத்த நான்கு ஆண்டுகளில், அவர் 17 நூறுகளையும், இரண்டு இரட்டை நூறுகளையும் 87.90 எனும் சராசரியோடு மொத்தம் 4,396 ஓட்டங்கள் எடுத்தார், அப்போது இவரின் பயிற்சியாளராக ஜெர்மி 'போரிஸ்' ஃபாரலின் இருந்தார். தனது இறுதி ஆண்டில் துடுப்பாட்ட அணியின் தலைவராக இருந்தார். அதே போல் இசை சமூகத்தின் தலைவராகவும் இருந்தார். 2003 ஆம் ஆண்டில் பெட்ஃபோர்டில் நடைபெற்ற போட்டியில் தனது பள்ளி சார்பாக விளையாடிய இவர் 1,287 ரன்கள் எடுத்தார். இதில் இரு இரட்டை நூறுகள் எடுத்தார். அந்த இரு போட்டிகளிலும் இவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரின் சராசரி 160.87 யாக இருந்தது. அந்தப் போட்டியில் வெற்றி பெற்று அவரின் பள்ளி சாதனை படைத்தது.[16] சர்வதேச வெற்றிக்குப் பிறகு, குக் 2008 இல் பெட்ஃபோர்டில் நடந்த ஓல்ட் பாய்ஸ் போட்டிக்காகத் திரும்பினார். பின் ஹெட் மாஸ்டரின் அல்டிமேட் லெவன் அணிக்காக விளையாடினார்.[17] சர்வதேச போட்டிகள்2005-06 குளிர்காலத்தில் ஈ.சி.பி தேசிய அகாதமியில் குக் சேர்க்கப்பட்டார்.தனது 21 ஆம் வயதில் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். தனது முதல் போட்டியில் சிறப்பான ஆட்டத் திறனை வெளிப்படுத்தினார். ஆண்ட்ரூ ஸ்ட்ராஸுடன் துவக்க வீரராகக் களம் இறங்கிய இவர் முதல் ஆட்டப் பகுதியில் அரைநூறு ஓட்டங்களை எடுத்தார். முதல் நாளில் உணவு இடைவேளைக்கு முன்பாக 160 பந்துகளில் 60 ஓட்டங்கள் எடுத்தார்.[16] இரண்டாவது ஆட்டப் பகுதியில் இவர் தனது முதல் நூறு ஓட்டங்களை எடுத்தார்.[18] இதன்மூலம் தனது முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் நூறு ஓட்டங்களை எடுத்த 16 ஆவது இங்கிலாந்துத் துடுப்பாட்ட வீரர் எனும் சாதனை படைத்தார்.[16]
முக்கியமான விடயங்கள்![]() .
ஒரு நாள் சர்வதேச சதங்கள்
அணிகளுக்கு எதிராக
தொடர்நாயகன்
குறிப்புகள்பொதுவானவை
சான்றுகள்
புற இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia