அலுமினியம் பாசுபேட்டு
அலுமினியம் பாசுபேட்டு (Aluminium phosphate) என்பது ஒரு வேதிச் சேர்மம் ஆகும். இயற்கையில் இது பெர்லினைட்டு என்ற கனிமமாக காணப்படுகிறது.[2] அலுமினிய பாசுபேட்டின் பல செயற்கை வடிவங்கள் அறியப்படுகின்றன. அவை செயோலைற்றுகளுக்கு ஒத்த கட்டமைப்புகளைக் கொண்டுள்ளன. மேலும் சில வினையூக்கிகளாகவும், அயனி பரிமாற்றிகள் அல்லது மூலக்கூறு சல்லடைகளாவும் பயன்படுத்தப்படுகின்றன.[3] வணிகரீதியாக அலுமினிய பாசுபேட்டு கூழ்மம் கிடைக்கிறது. பெர்லினைட்AlPO4 ஆனது Si2O4 சிலிக்கான் டை ஆக்சைடுடன்ஒத்த எலெக்ட்ரான் எண்ணிக்கையுடையதாகும். பெர்லினைட் குவார்ட்ஸ் போல தோற்றமளிக்கிறது மற்றும் குவார்ட்ஸைப் போன்றதொரு அமைப்பினையும் கொண்டுள்ளது. இது சிலிகானுடன் அலுமினியம் மற்றும் பாசுபரசு கொண்டு மாற்றப்பட்டுள்ளது. AlO4 மற்றும் PO4 ஆகிய இரண்டும் நான்முகி மாற்றுகளாகும். குவார்ட்சு போல், AlPO4 சமச்சீரின்மை [4] மற்றும் அழுத்த மின் விளைவு போன்றவற்றை வெளிப்படுத்துகறிது.[5] படிக AlPO 4 (பெர்லினைட்) ஐ வெப்பப்படுத்துகையில் டிரைடிமைட்டு மற்றும் கிரித்தோபலைட்டு படிவங்களாக மாறுகிறது மற்றும் இது சிலிக்கான் டை ஆக்சைடின் பண்பினை நினைவூட்டுகிறது. பயன்கள்மூலக்கூறு சல்லடைகள்அலுமினிய பாசுபேட்டு மூலக்கூறு சல்லடைகள் பல உள்ளன, அவை பொதுவாக "அல்போக்கள்" என்று அழைக்கப்படுகின்றன. முதலாவது அல்போ 1982 ஆம் ஆண்டில் தெரிவிக்கப்பட்டது. [6] அவை அனைத்தும் AlPO4 இன் ஒரே வேதியியல் இயைபைப் பகிர்ந்து கொள்வதோடு மிகநுண்ணிய துளைக்குழிகள் கொண்ட கட்டமைப்புகளைக் கொண்டுள்ளன. கட்டமைப்புகள் மாற்று AlO4 மற்றும் PO4 நான்முகிகளால் ஆனவை. அடர்த்தியான குழி-குறைவான படிக பெர்லினைட், அதே மாற்று AlO4 மற்றும் PO4 நான்முகி வடிவத்தைப் பகிர்ந்து கொள்கிறது. அலுமினோபாசுபேட்டு கட்டமைப்பின் வடிவமைப்புகள் வெவ்வேறு அளவிலான குழிகளை உருவாக்குவதற்கு AlO4 நான்முகி மற்றும் PO4 நான்முகியின் நோக்குநிலையில் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுகின்றன. மேலும், இந்த விஷயத்தில் அவை அலுமினோசிலிகேட்டு செயோலைட்டுகளுக்கு ஒத்தவை. அவை மின்சுமை ஊட்டப்பட்ட கட்டமைப்பைக் கொண்டிருப்பதில் வேறுபடுகின்றன. அலுமினோபாசுபேட்டின் ஒரு பொதுவான தயாரிப்பானது கரிம அமீன்கள் முன்னிலையில் கட்டுப்படுத்தப்பட்ட pH இன் கீழ் அலுமினிய நைட்ரேட் உப்பு அல்லது அல்காக்ஸைடு, அலுமினியம் ஐதராக்சைடு மற்றும் பாசுபோரிக் அமிலம் ஆகியவற்றின் நீர் வெப்ப வினையை உள்ளடக்கியது ஆகும். இந்த கரிம மூலக்கூறுகள் நுண்ணிய துளைகளைக் கொண்ட வடிவமைப்பின் வளர்ச்சியை வழிநடத்தும் வார்ப்புருக்களாக (இப்போது கட்டமைப்பு இயக்கும் முகவர்கள், எஸ்.டி.ஏக்கள் என அழைக்கப்படுகின்றன) செயல்படுகின்றன. மற்றவைஅலுமினியம் ஐதராக்சைடுடன், தடுப்பூசிகளில் அலுமினிய பாசுபேட்டு மிகவும் பொதுவான நோயெதிர்ப்பு துணை மருந்துகளில் (செயல்திறன் அதிகரிக்கும்) ஒன்றாகும். அலுமினிய எதிர்ப்பாற்றல் தூண்டியின் பரவலான பயன்பாடானது அவற்றின் மலிவான விலை, பயன்பாட்டின் நீண்ட வரலாறு, பெரும்பாலான ஆன்டிஜென்களுடன் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் ஆகியவற்றைப் பின்னணியாகக் கொண்டுள்ளது. இத்தகைய உப்புகள் எவ்வாறு நோயெதிர்ப்பு உதவியாளர்களாக செயல்படுகின்றன என்பது அறியப்படாததாக உள்ளது. [7] அலுமினிய ஐதராக்சைடினைப் போலவே, AlPO4 உம் அமில நீக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது. இது AlCl3 ஐ உருவாக்குவதன் மூலம் வயிற்று அமிலத்தை ( HCl ) நடுநிலையாக்குகிறது. உட்கொண்ட அமில நீக்கி உப்புகளிலிருந்து 20% வரை அலுமினியம் இரைப்பைக் குழாயிலிருந்து உறிஞ்சப்படலாம் (அலுமினியம் நரம்பு மண்டலத்தில் ஏற்படுத்தும் பக்க விளைவுகள் குறித்து சில சரிபார்க்கப்படாத கவலைகள் இருந்தபோதிலும்) அலுமினிய பாசுபேட்டு மற்றும் ஐதராக்சைடு உப்புகள் கர்ப்ப காலம் மற்றும் தாய்ப்பால் புகட்டும் காலங்களின் போது உள்ள சாதாரண பயன்பாட்டில் கூட பாதுகாப்பான அமிலநீக்கிகள் என்று கருதப்படுகின்றன. [8] AlPO4 க்கான கூடுதல் பயன்பாடுகள் மற்ற சேர்மங்களுடன் சேர்ந்தோ அல்லது சேராமலோ நிறமிகள், அரிப்பு தடுப்பான்கள், சிமெண்டுகள் மற்றும் பற்சிகிச்சைக்கான சிமெண்டுகளுக்கான வெள்ளை நிறப் பொருள்களாகும். தொடர்புடைய சேர்மங்களும் இதே போன்ற பயன்பாடுகளைக் கொண்டுள்ளன. எடுத்துக்காட்டாக, அலுமினியம் டைஐதரசன் பாசுபேட்டு பல் சிமெண்டுகள், உலோக பூச்சுகள், மெருகூட்டல் கலவைகள் மற்றும் மீவெப்பம் தாங்கும் இணைப்பிகளிலும் பயன்படுத்தப்படுகிறது; மற்றும் Al (H2PO4) (HPO4) சிமெண்ட் மற்றும் மீவெப்ப உலை பூச்சு இணைப்பிகள் மற்றும் பசைகளில் பயன்படுத்தப்படுகிறது. [9] தொடர்புடைய சேர்மங்கள்AlPO4· 2H2O டைஹைட்ரேட் தாதுக்கள் வெரிசைட் மற்றும் மெட்டா-வெரிசைட்டாகக் காணப்படுகின்றன. [10] அலுமினிய பாசுபேட்டு டைஐதரேட்டு (வெரிசைட் மற்றும் மெட்டா-வெரிசைட்) பாசுபேட்டு எதிரயனிகள், அலுமினியம் நேரயனிகள், நீர் ஆகியவற்றாலான நான்முகி மற்றும் எண்முகி ஆகியவற்றின் கூட்டாகக் கருதப்படும் ஒரு கட்டமைப்பைக் கொண்டிருக்கலாம். Al3+ ஆனது 6-அணைவு எண்ணையும் மற்றும் PO43- ஆனது 4-அணைவு எண்ணையும் கொண்டுள்ளவையாகும். [2] AlPO4·1.5H2O என்ற செயற்கை முறையில் கிடைக்கும் நீரேற்ற வடிவமும் அறியப்படுகிறது. [11] குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia