அலோக் குமார் மேத்தா
அலோக் குமார் மேத்தா (Alok Kumar Mehta) (பிறப்பு 3 நவம்பர் 1966 [4] ) பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியாவார். இராச்டிரிய ஜனதா தளத்தின் நிறுவனர் உறுப்பினரான இவர், கட்சியின் முதன்மை பொதுச் செயலாளராகப் பணியாற்றியுள்ளார். மேத்தா தேஜஸ்வி யாதவின் அரசியல் வழிகாட்டி என்று கூறப்படுகிறது. [5] அரசியல் வாழ்க்கைதுளசிதாஸ் மேத்தாவின் மகனான [6] அலோக் குமார் மேத்தா 2015 பீகார் சட்டப் பேரவைத் தேர்தலில் உஜியார்பூர் தொகுதியிலிருந்து சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பீகார் அரசாங்கத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சராகப் பணியாற்றினார். [6] 2017இல் நிதிஷ் குமார் பதவி விலகும்வரை இவர் அமைச்சராக இருந்தார். இவரது சகோதரி சுஹேலி மேத்தா 2017 இல் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்தார்.[7] மேத்தா 2004 இல் உஜியார்பூர் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். பின்னர் இவர் 2009 இல் மூத்த பிரதீப் மஹ்தோவின் விதவையான அசுவமேத தேவியிடம் அந்தத் தொகுதியை இழந்தார் [8] மேத்தா பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் வெவ்வேறு காலங்களில் இராச்ட்ரிய ஜனதா தளத்துடன் தொடர்புடையவர். ஏழு மாநிலங்களுக்கு கட்சியின் பொறுப்பாளராகவும், கட்சியின் இளைஞர் அமைப்பின் தேசிய பொதுச் செயலாளராகவும், மாநில பொதுச் செயலாளராகவும் பணியாற்றினார்.[9] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia