துளசிதாஸ் மேத்தா
துளசிதாஸ் மேத்தா (Tulsidas Mehta) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பீகார் சட்டப் பேரவையில் ஜந்தாஹா சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக பணியாற்றினார். 1990 பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜனதா தளம் வேட்பாளராக வெற்றி பெற்றார். மேத்தா ஒரு சோசலிச அரசியல்வாதி ஆவார். இவர் பீகார் அரசாங்கத்தில் அமைச்சராகவும் பணியாற்றினார். இவர் மற்றொரு பீகார் அரசியல்வாதியும் இராச்டிரிய ஜனதா தளம் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளருமான அலோக் குமார் மேத்தாவின் தந்தையாவார்.[2] இராச்டிரிய ஜனதா தளத்தின் நிறுவனர்களில் ஒருவராக இருந்தார். [3] மேத்தா ஜந்தாஹா சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி, 1962,1969,1985,1990 மற்றும் 1995 ஆகிய சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்றார். அரசியல் வாழ்க்கைதுளசிதாஸ் மேத்தா ஒரு சமூகவுடைமை அரசியல்வாதி. இவர் ஆரம்பத்தில் சோசலிச கட்சியுடன் இணைந்தார். கட்சி சார்பில் இவர் 1962 இல் தனது முதல் மாநில சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார். 1969 ஆம் ஆண்டில், மாநில சட்டமன்றத் தேர்தலில் இரண்டாவது தேர்தல் வெற்றிக்குப் பிறகு, இவர் பீகார் அரசில் மாநில அமைச்சரானார். [4] 1969, 1985, 1990 மற்றும் 1995 ஆம் ஆண்டு பீகார் சட்டமன்றத் தேர்தல்களில் மேத்தா வெற்றி பெற்றார்; 1970 ஆம் ஆண்டு கர்ப்பூரி தாக்கூரின் அமைச்சரவையில் முதன்முறையாக பீகார் அரசாங்கத்தில் மாநில அமைச்சராக நியமிக்கப்பட்டார். லாலு பிரசாத் யாதவ் அமைச்சரவையில் இரண்டு முறை மாநில அமைச்சராகவும் மேத்தா பணியாற்றினார்.[5] மேத்தா சோசலிச தலைவர் அக்சயவத் ராயின் கூட்டாளி ஆவார். அவர் 1962 பீகார் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட மேத்தாவைத் தூண்டினார். தேர்தல் செலவுகள் செய்யத் தயங்கியபோது இந்திய தேசிய காங்கிரசு தலைவர் தீப் நாராயண் சிங்கால் ஆதரிக்கப்பட்டு பீகார் கூட்டுறவு கூட்டமைப்பின் தலைவராக இருந்த அவரது அரசியல் எதிரியான ராஜ்வன்ஷி சிங்கை மேத்தா தோற்கடிக்க முடிந்தது.[6] இவரது மகன், அலோக் குமார் மேத்தா இராச்டிரிய ஜனதா தளத்தின் மூத்த அரசியல்வாதியாகவும் கருதப்படுகிறார். கட்சியில் பல குறிப்பிடத்தக்க பதவிகளை வகித்துள்ளார். மேத்தா குடும்பம் சமஸ்திபூர் மாவட்டம் மற்றும் அதை ஒட்டிய பகுதி அரசியலில் கணிசமான செல்வாக்கு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. [7] பிற பங்களிப்புகள்மேத்தா கூட்டுறவுத் துறையில் பணிபுரிந்ததற்காகவும் அறியப்பட்டவர். பீகார் மாநிலத்தில் வைசாலி கூட்டுறவு வங்கி மற்றும் கூட்டுறவு குளிர்பதனக் கிடங்கின் நிறுவனரும் ஆவார். [8] இறப்புதுளசிதாஸ் மேத்தா 2019 இல் தனது 93 வயதில் இறந்தார்.[9] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia