ஆத்திரேலியத் தமிழர்
ஆஸ்திரேலியத் தமிழர் (அல்லது அவுஸ்திரேலியத் தமிழர், தமிழ் அவுஸ்திரேலியர்கள், Tamil Australian) எனப்படுவோர் தமிழ் பின்புலத்தைக் கொண்டு அவுஸ்திரேலியாவில் வசிப்பவர்கள். 1970 ஆம் ஆண்டில் இருந்தே தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் அவுஸ்திரேலியாவுக்கு புலம் பெயரத் தொடங்கினர். அதற்கு முன்னர் தொழில் அனுமதி பெற்றுச் சிலர் வந்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்ட அரசியல் யுத்த சூழ்நிலை காரணமாகவும் பொருளாதார நோக்கிலும் குடிபெயர்தல் அதிகரித்தமையின் விளைவாகவும் 1983 இலிருந்து பெருமளவில் தமிழர்கள் இங்கு குடியேறத் தொடங்கினர். இலங்கையை விட இந்தியா, தென்னாபிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்தும் வசதி வாய்ப்புகளை எதிர்பார்த்து அவுஸ்திரேலியாவில் குடியேறினர். 2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் முடிவுஇதன்படி ஆஸ்திரேலியாவில் வாழ்பவர்களில் வீட்டில் தமிழ் பேசுவதாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 73,161 என சென்சஸ் திணைக்கள தரவுகள் கூறுகின்றன. 2011ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 50,151ஆக காணப்பட்ட அதேநேரம் 2006ம் ஆண்டு 32,704 ஆக காணப்பட்டது. இது ஒருபுறமிருக்க கடந்த 2011 இலிருந்து சுமார் 1.3 மில்லியன் பேர், புதிதாக ஆஸ்திரேலியாவில் குடியேறியிருக்கின்றனர். முக்கியமாக சீனாவிலிருந்து 191,000 பேரும் இந்தியாவிலிருந்து 163,000 பேரும் இங்கு குடியேறியுள்ளனர். மேலும் கடந்த 5 ஆண்டுகளில் நாட்டிலிருந்து வெளியேறியவர்களைக் கழித்தால், தற்போது ஆஸ்திரேலியாவில் வாழ்பவர்களில் வெளிநாட்டில் பிறந்தவர்களின் எண்ணிக்கை 2011 இலிருந்து 2016 வரையான காலப்பகுதியில் 870,000 ஆக அதிகரித்துள்ளது. அதாவது ஆஸ்திரேலியாவில் வாழ்பவர்களில் நால்வரில் ஒருவர் வெளிநாட்டில் பிறந்தவர் ஆவார். மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடைபெற்ற தினத்தன்று 23.4 மில்லியன் பேர் எண்ணப்பட்டுள்ளநிலையில் இது 2011 ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 8.8 வீத அதிகரிப்பாகும். இவர்களில் 80 வீதமானவர்கள் விக்டோரியா, நியூ சவுத்வேல்ஸ், குயின்ஸ்லாந்து, ACT ஆகிய பகுதிகளிலேயே வசிக்கின்றனர். சென்சஸ் தரவுகளின்படி ஆஸ்திரேலியாவில் வாழ்பவர்களில் தாம் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளப்படுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 440,300 ஆக அதிகரித்துள்ளது. இது மொத்த சனத்தொகையின் 1.9 வீதமாகும். அதேநேரம் தமக்கு மதமில்லை-No Religion என பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் ஒப்பிடும்போது 22 வீதத்திலிருந்து 30 வீதமாக அதிகரித்துள்ளது. தமிழரின் குடித்தொகைஆஸ்திரேலியாவில் வீட்டில் தமிழ் பேசுவதாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட 73,161 பேரில் 28,055 பேர் இந்தியாவில் பிறந்தவர்கள். 27,352 பேர் இலங்கையில் பிறந்தவர்கள். 9,979 பேர் ஆஸ்திரேலியாவில் பிறந்தவர்கள் ஆவர். 2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி ஆஸ்திரேலியாவில் வாழ்பவர்களில் வீட்டில் தமிழ் பேசுவதாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட 73,180 பேரில் அதிகளவானோர் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வாழ்கிறார்கள். இதில் அதிகளவு தமிழ்பேசுவோரைக் கொண்ட suburb-ஆக Westmead காணப்படுகின்றது. இங்கே 1425 பேர் வீட்டில் தமிழ் பேசுகின்றனர். இரண்டாமிடத்தில் 1404 பேருடன் Toongabbie-உம், மூன்றாமிடத்தில் 1307 பேருடன் Wentworthville-உம் காணப்படுகின்றது. அதேநேரம் விக்டோரியா மாநிலத்தில் Dandenong-இல் 1389 பேரும் Glenwaverly-இல் 1127 பேரும் வீட்டில் தமிழ் பேசுகின்றனர். தமிழ் அவுஸ்திரேலியர்களின் எண்ணிக்கை 1971 இல் 202 ஆக இருந்து 1991 இல் 11,376 ஆக அதிகரித்தது. இதில் 60 வீதத்தினர் ஈழத் தமிழர்கள். அரசின் குடிமதிப்பின்படி 1996 இல் தமிழரின் எண்ணிக்கை 18,690 ஆகவும், 2001இல் 24,067 ஆகவும் உயர்ந்தது. அவுஸ்திரேலியாவின் பல்வேறு மாநிலங்களிலும் வாழும் தமிழரின் குடித்தொகை விபரத்தை பின்வரும் அட்டவணையில் காணலாம்:
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் தமிழரின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு இரண்டு முக்கிய காரணங்களை கலாநிதி ஆ. கந்தையா குறிப்பிடுகிறார்:
பிறந்த நாடுகள் அடிப்படையில்அரசின் குடித்தொகை பதிப்புகள், அவுஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்த தமிழர்களின் பிறந்த நாடுகளையும் எண்ணிக்கைகளையும் குறிப்பிட்டுள்ளன:
முதலில் புலம்பெயர்ந்த தமிழர்கள்1971க்கு முன்னர் மொத்தம் 162 தமிழர் அவுஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்தார்கள் என அரசின் மதிப்பீடு தெரிவிக்கிறது. கலாநிதி ஆ. கந்தையா அவர்களின் ஆய்வின் படி, முதன் முதலில் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த தமிழர் கமால் எனப்படும் கே. கமலேஸ்வரன் என்பவர். இவர் இலங்கைப் பின்னணியைக் கொண்ட மலேசியத் தமிழர். 1953இல் தெற்கு அவுஸ்திரேலியாவின் தலைநகர் அடிலெய்டுக்கு உயர்கல்வி பெற வந்தவர். மேற்கத்திய இசையில் உலகப்புகழ் பெற்ற கலைஞர். இப்போது சிட்னியில் வாழ்ந்து வருகிறார். தமிழ் அமைப்புகள்தமிழ் பள்ளிகள்எதிர்ப்புப் போராட்டங்கள்தமிழ் ஊடகங்கள்தொலைக்காட்சி சேவைகள்அவுஸ்திரேலியா, நியூசிலாந்து முழுவதற்குமாக 24 மணி நேர தமிழ்த் தொலைக்காட்சி சேவைகள் இரண்டு சிட்னியிலிருந்து ஒளிபரப்பாகின்றன.
வானொலி சேவைகள்அவுஸ்திரேலியாவில் பல வானொலி நிலையங்களைப் பயன்படுத்தித் தமிழ் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுகின்றன. தமிழ் அமைப்புகளும் தனிப்பட்டவர்களும் ஒலிபரப்புகின்றனர்.
செய்திப் பத்திரிகைகள்உதயம், ஈழமுரசு என்ற இரண்டு செய்திப் பத்திரிகைகள் வெளிவந்தன. இரண்டும் நிறுத்தப்பட்டு விட்டன. சஞ்சிகைகள்
தமிழ் நூலகங்கள்தமிழர் அதிக எண்ணிக்கையில் வாழும் உள்ளூராட்சிப் பகுதிகளிலுள்ள பொது நூலகங்களில் தமிழ் நூல்களை இடம்பெறச் செய்வதற்கு அரசாங்கம் நிதி உதவி செய்கின்றது. அவுஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்த தமிழர்கள், தமது மாநிலங்களில் தமிழ் நூலகங்களை நிறுவுவதற்கும் முயன்று வருகின்றனர்.
உசாத்துணை
அடிக்குறிப்புகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia