ஆயுஷ் மகாத்ரே 16 சூலை 2007 இல் இந்தியாவின் மகாராட்டிராவில் உள்ள விராரில் பிறந்தார். மகாராஷ்டிராவின் விரார் நகரத்திலுள்ள நல்லசோபரா என்ற பகுதியைச் சேர்ந்தவர்.
உள்ளூர்ப் போட்டிகள்
2024-25 இரானிக் கோப்பையில் மும்பை அணிக்காக தனது 17 ஆவது வயதில் முதல் தரப் போட்டியில் அறிமுகமானார். [3] சில வாரங்களுக்குப் பிறகு, 2024–25 ரஞ்சிக் கோப்பையில் மகாராட்டிராவுக்கு எதிராக மும்பை அணிக்காக 176 ஓட்டங்கள் எடுத்து, தனது முதல் முதல் நூறு ஓட்டங்களை அடித்தார். [4]
பட்டியல் அ போட்டிகளில் இளம் வயதில் 150+ ஓட்டங்களை எடுத்த வீரர் எனும் சாதனையினைப் படைத்தார். யசஸ்வி ஜெய்ஸ்வாலின் முந்தைய சாதனையை முறியடித்தார். [5][6]
ஏப்ரல் 20, 2025 இல், மகாத்ரே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல்லில் அறிமுகமானார். 3வது வீரராகக் களமிறங்கியவர், 15 பந்துகளில் 32 ஓட்டங்கள் எடுத்தார். 17 ஆண்டுகள் மற்றும் 278 நாட்களில், ஐபிஎல் போட்டியில் விளையாடிய 7வது இளைய வீரர் இவராவார். [7][8]