ஆர். என். ஆர். மனோகர்
ஆர். என். ஆர். மனோகர் (R. N. R. Manohar, இறப்பு: 17 நவம்பர் 2021) என்பவர் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர் மற்றும் இயக்குநர் ஆவார். இவர் மாசிலாமணி (2009), வேலூர் மாவட்டம் (2011) போன்ற படங்களை இயக்கியுள்ளார்.[1] தொழில்பேண்ட் மாஸ்டர், சூரியன் சந்திரன் போன்ற படங்களில் கே. எஸ். ரவிக்குமாருக்கு உதவியாளராக ஆனதன் மூலம் ஆர். என். ஆர் மனோகர் தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார்.[2] இவர் கோலங்கள் திரைப்படத்திற்கு உரையாடல்களை எழுதினார். மேலும் இயக்குநருக்கு உதவியாளராகவும் பணியாற்றினார். மேலும் அந்த படத்தில் நிருபராக ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்தார். தென்னவன், புன்னகை பூவே போன்ற படங்களுக்கு உரையாடல்களை எழுதினார். விவேக்கைக் கொல்ல முயற்சிக்கும் ஒரு குண்டராக தென்னவன் படத்தில் மனோகர் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்தார். ஒரு நடிகராக இவர் தில், சுட்ட பழம் போன்ற படங்களில் சிறிய எதிர்மறை வேடங்களில் நடித்தார். மேலும் இவர் வீரம் படத்தில் நாசரின் மைத்துனராக நடித்தார். 2002 ஆம் ஆண்டில், மனோகர், பிரசாந்த், சிம்ரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வேலு என்ற படத்தை இயக்குவதாக அறிவித்தார், ஆனால் அந்த படம் பின்னர் தயாரிக்கப்படவில்லை.[3] இவர் பின்னர் மாசிலாமணி மூலம் இயக்குநராக அறிமுகமானார்.[4][5] இவரது இரண்டாவதாக வேலூர் மாவட்டம் என்ற காவல் துறை குறித்த நாடகத் திரைப்படத்தை இயக்கினார்.[6] திரைப்படவியல்இயக்குனராகவும் எழுத்தாளராகவும்
நடிகராக
மறைவுமாரடைப்பு காரணமாக, நவம்பர் 17, 2021 அன்று தனது 61 வயதில் காலமானார்.[7] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia