ஆர். சுந்தரராஜ்

ஆர்.சுந்தரராஜ் (R. Sundararaj) என்பார் இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் தமிழகச் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 2016ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஓட்டப்பிடாரம் தொகுதியிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினராகத் தமிழகச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு ஆதரவைத் திரும்பப் பெற்றதோடு, கிளர்ச்சித் தலைவர் டி.டி.வி தினகரனுக்கு விசுவாசமாகி, அம்மா மக்கள் முன்னேற்றக் கட்சியில் இணைந்ததால், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 உறுப்பினர்களில் இவரும் ஒருவர். இவரைத் தமிழக சபாநாயகர் ப. தனபால் தகுதி நீக்கம் செய்தார்.[3][4]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya