இசுட்ரோன்சியம் கார்பனேட்டு
இசுட்ரோன்சியம் கார்பனேட்டு (Strontium carbonate) என்பது SrCO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இசுட்ரோன்சியத்தின் கார்பனேட்டு உப்பு இசுட்ரோன்சியம் கார்பனேட்டு எனப்படுகிறது. வெண்மை அல்லது சாம்பல் நிறத்தில் இவ்வுப்பு தூளாகக் காணப்படுகிறது. இயற்கையில் இசுட்ரோன்சியம் கார்பனேட்டு இசுட்ரோசியனைட்டு என்ற கனிமமாகத் தோன்றுகிறது. வேதிப்பண்புகள்இசுட்ரோன்சியம் கார்பனேட்டு வெண்மை நிறத்தில் நெடியற்றும் சுவையற்றும் தூளாகக் காணப்படுகிறது. ஒரு கார்பனேட்டு உப்பாக இதுவொரு வலிமையற்ற காரமாதலால் அமிலங்களுடன் வினைபுரிகிறது. நிலைப்புத்தன்மையும் பாதுகாப்பாக பணிபுரியவும் ஏற்றதொரு சேர்மமாகவும் கருதப்படுகிறது. நீரில் இசுட்ரோன்சியம் கார்பனேட்டு கரையாது. மிகச் சிறிதளவாக இலட்சத்தில் ஒரு பங்கு இது நீரில் கரையும். கார்பன் டை ஆக்சைடு கரைந்து தண்ணீர் நிறைவுற்ற நீர்மமாக மாற்றினால் கரைதிறன் சற்று அதிகரித்து ஆயிரத்தில் ஒரு பங்காக கரையும். நீர்த்த அமிலங்களில் இச்சேர்மம் கரைகிறது. தயாரிப்புஒரு கனிமமாக இயற்கையில் தோன்றுவதை தவிர்த்து இசுட்ரோன்சியம் கார்பனேட்டை செயற்கை முறையிலும் தயாரிக்க இயலும். இதற்காக இரண்டு தயாரிப்பு முறைகள் பின்பற்றப்படுகின்றன. இம்முறைகள் இரண்டிலும் இசுட்ரோன்சியம் சல்பேட்டு (SrSO4) கனிமம் செலிசுட்டின் மூலப்பொருளாகப் பயன்படுகிறது. அதில் ஒன்றான கருப்புச் சாம்பல் செயல்முறையில் செலிசைட்டுடன் கற்கரி சேர்த்து கலவையை 110 முதல் 1300 பாகை செல்சியசு வெப்பநிலையில் வறுக்கவேண்டும்[1].இசுட்ரோன்சியம் சல்பைடு விளைபொருளாக உருவாகும். இவ்வினையில் சல்பேட்டானது ஒடுக்கப்பட்டு சல்பைடாகிறது.
இசுட்ரோன்சியம் சல்பைடுடன் கார்பன் டை ஆக்சைடு அல்லது சோடியம் கார்பனேட்டைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் இசுட்ரோன்சியம் கார்பனேட்டு வீழ்படிவாகிறது[1][2]
நேரடி மாற்றம் அல்லது இரட்டைச் சிதைவு முறை என்பது மற்றொரு செயற்கை தயாரிப்பு முறையாகும். இம்முறையில் செலிசைட்டும் சோடியம் கார்பனேட்டும் சேர்க்கப்பட்ட கலவை நீராவியால் சூடுபடுத்தப்பட்டு இசுட்ரோன்சியம் கார்பனேட்டு உருவாக்கப்படுகிறது. கணிசமான அளவுக்கு கரையாத திண்மங்கள் இதில் கலந்திருக்கும்[1]. எனவே இவ்விளைபொருளுடன் ஐதரோகுளோரிக் அமிலத்தைச் சேர்த்து இசுட்ரோன்சியம் குளோரைடு கரைசல் உருவாக்கப்படுகிறது. பின்னர் கருப்பு சாம்பல் செயல்முறையைப் போலவே கார்பன் டை ஆக்சைடு அல்லது சோடியம் கார்பனேட்டைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் இசுட்ரோன்சியம் கார்பனேட்டு மீண்டும் வீழ்படிவாகிறது. பயன்கள்![]() வானவேடிக்கை பட்டாசுகளில் நிறம் சேர்க்க விலை குறைவான ஒரு வேதிப்பொருளாக பயன்படுவது இதன் பொதுவான பயன்பாடு ஆகும். இசுட்ரோன்சியமும் அதன் உப்புகளும் தீச்சுடரில் அற்புதமான சிவப்பு நிறத்தை வெளியிடுகின்றன. மற்ற இசுட்ரோன்சியம் உப்புகளைப் போலன்றி, இசுட்ரோன்சியம் கார்பனேட் உப்பு பொதுவாக விரும்பப்படுகிறது, ஏனெனில் இது விலையும் குறைவு நீரையும் உறிஞ்சுவதில்லை. அமிலத்தை நடுநிலையாக்குவதற்கான இதன் திறனும் வானவேடிக்கைகளில் மிகவும் உதவியாக இருக்கும். சாலையோர சமிக்ஞைகளிலும் இதேபோன்ற மற்றொரு பயன்பாடு இசுட்ரோன்சியம் கார்பனேட்டுக்கு உள்ளது. மின்னணுவியல் பயன்பாடுகளுக்கும் இசுட்ரோன்சியம் கார்பனேட்டு பயன்படுத்தப்படுகிறது. நேர்மின் முனையிலிருந்து வரும் எலக்ட்ரான்களை உறிஞ்சும் வண்ணத் தொலைக்காட்சி எலக்ட்ரான் ஏற்பிகளை உற்பத்தி செய்ய இது பயன்படுத்தப்படுகிறது[3]. ஒளிரும் கண்ணாடி, ஒளிரும் சாயம் , இசுட்ரோன்சியம் ஆக்சைடு மற்றும் இசுட்ரோன்சியம் உப்புகள் தயாரிப்பதிலும் சர்க்கரை மற்றும் சிலவகை மருந்துகளை சுத்திகரிப்பதிலும் பயன்படுத்தப்படுகிறது. இது மட்பாண்டத் தொழிலில் மெருகுகூட்ட ஒரு மூலப்பொருளாக பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ஓர் இளக்கியாகவும் செயல்படுகிறது மற்றும் சில உலோக ஆக்சைடுகளின் நிறத்தையும் மாற்றியமைக்கிறது. இது பேரியம் கார்பனேட்டை ஒத்த சில பண்புகளைக் கொண்டுள்ளது. ஒலிபெருக்கிகள் மற்றும் கதவு காந்தங்களில் பயன்படுத்தப்படும் நிரந்தர காந்தங்களுக்கான இசுட்ரோன்சியம் பெர்ரைட்டு உற்பத்தியிலும் இது பயன்படுத்தப்படுகிறது. சயனோபாக்டீரியா கலோத்ரிக்சு, சினெகோகோகசு மற்றும் குளியோகாப்சா ஆகிய நுண்ணுயிரிகள் நிலத்தடி நீரில் இசுட்ரோன்சியம் கால்சைட்டை வீழ்படிவாக்குகின்றன. திண்மக் கரைசலில் இசுட்ரோன்சியம் ஒரு சதவீதம் அளவுக்கு இசுட்ரோன்சியனேட்டாக உள்ளது[4]. மேற்கோள்கள்
புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia