இசுபகான் (அல்லது இஸ்பஹான், ஆங்கிலம்: Isfahan, Persian: اصفهان, ஒலிப்புⓘ) என்பது ஈரானின் இசுபகான் மாகாணத்தின் தலைநகர் ஆகும். இது ஆங்கில உச்சரிப்பில் இஸ்பகான், செப்பகான், எஸ்பகான், மற்றும் கிஸ்பகான் (Ispahan, Sepahan, Esfahan or Hispahan) ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இசுபகான் தேகுரானுற்கு 340 கிலோமீட்டர்கள் (211 மைல்கள்) தேற்கில் அமைந்துள்ளது. இது ஈரானின் தெகுரான் மற்றும் மசுகாத்திற்கு அடுத்த மூன்றாவது அதிக மக்கள்தொகையைக் கொண்ட நகரமாகும், மற்றும் இதன் மக்கள் தொகை 1,755,382 குடிகளைக் கொண்டுள்ளது. 2011 இன் மக்கள் தொகை அடிப்படையில் 3,793,101 ஐ மக்கள் தொகையாகக் கொண்ட இந்த கிரேட்டர் இசுபகான் பிரதேசம் ஈரானில் தெகுரான் மற்றும் மசுகாத்திற்கு அடுத்த மிகப் பிரபலமான பெருநகரப் பகுதியாகும்.[3]
இசுபகான் ஈரானில் கடக்கும் முக்கிய வடக்கு-தெற்கு மற்றும் கிழக்கு-மேற்கு பாதைக்களில் அமைந்துள்ளது. இது உலகின் மிகப் பெரிய நகரங்களுள் ஒன்றாக விளங்குகின்றது குறிப்பிடத்தக்கது. இந்த இசுபகான் நகரம் 1050 தொடக்கம் 1722 வரையிலான காலப்பகுதியில் தழைத் தோங்கி விளங்கியது. குறிப்பாக முதலில் 16ம் நூற்றாண்டில் சபவித் வமசத்தினரின் கீழான காலப்பகுதியிலே ஆகும். இரண்டாவதாக இதன் வரலாற்றில் பாரசீகத்தின் தலைநகரமாக விளங்கிய போதே ஆகும். தற்பொழுதும் இந்த நகரம் தனது கடந்த பெருமையை தன்னகத்தே கொண்டுள்ளது. இது பல அழகான அகலமான தெருக்களையும், பாலங்கள், மாளிகைகள், பள்ளிவாசல்கள் மற்றும் பள்ளிவாயிற்களையும் கொண்ட அதன் பாரசீக-இசுலாமிய கட்டடக்கலைக்கு மிகவும் பிரபல்யமாக விளங்குகிறது. இது "Esfahān nesf-e- jahān ast" (இசுபகான் தான் உலகின் அரைவாசி, Isfahan is half of the world) பாரசீக பழமொழிக்கு வழிவகுத்தது.[4]
இசுபகானில் உள்ள மதகுருமார் பயிற்சி மற்றும் மத பள்ளிகள் தவிர்ந்த முக்கிய பல்கலைக்கழகங்கள்:
பல்கலைக்கழகங்கள்
இசுபகான் பல்கலைக்கழகம் (University of Isfahan)
இசுபகான் கலைப்பல்கலைக்கழகம் (Isfahan University of Art)
இசுபகான் மருத்துவ விஞ்ஞான பல்கலைக்கழகம் (Isfahan University of Medical Sciences)
இசுபகான் தொழினுட்ப பல்கலைக்கழகம் (Isfahan University of Technology)
இசுபகான் இசுலாமிய அசாத் பல்கலைக்கழகம் (Islamic Azad University of Isfahan)
நாஜாபாத் இசுலாமிய அசாத் பல்கலைக்கழகம் (Islamic Azad University of Najafabad)
மஜ்லேசி இசுலாமிய அசாத் பல்கலைக்கழகம் (Islamic Azad University of Majlesi)
உயர் பள்ளிகள்
அடாப் உயர் பள்ளி (Adab High School)
சாடி உயர் பள்ளி (Saadi High School)
கராத்தி உயர் பள்ளி (Harati High School)
சர்மய் உயர் பள்ளி (Saremiyh High School)
பூயா உயர் பள்ளி (Pooya High School)
ஷாகித் எஜெய் உயர் பள்ளி (Shahid Ejei High School)
பார்சநேகன் இ அமின் உயர் பள்ளி (Farzanegan e Amin High School)
சாலமட் உயர் பள்ளி (salamat high school)
இசபகான் அணுசக்தி ஆய்வு நிலையங்கள்
இசபகான் நகரத்திற்கு அருகில் அமைந்த சக்ரோசு மலைத்தொடரின் சுரங்கங்களில் அணுசக்தி ஆய்வு நிலையங்கள் அமைந்துள்ளது. இதில் யுரேனியம் செறிவூட்டும் மையங்கள், கனநீர் உற்பத்தி ஆலைகள், அணுசக்தி தொழில்நுட்ப மையம், அணு மின் நிலையங்கள், அணுக்கழிவு கிட்டங்கிகள் அமைந்துள்ளது.[5]
2025 ஈரான்-இசுரேல் போரின் போது இசபகான் நிலத்தடி அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் வான்படை மூலம் குண்டுவீச்சால் இசபகான் அணுசக்தி தொழில் நுட்ப மையம் பலத்த சேதமடைந்தது.[6]
அமெரிக்காவின் குண்டு வீச்சு
ஈரானில் தரைக்கடியில் உள்ள இசுபகான் அணுசக்தி நிலையம் மீது அமெரிக்கா தனது பி2 குண்டு வீச்சு விமானங்கள் மூலம் 21 சூன் 2025 அன்று குண்டு வீசி பெரும் தாக்குதல் நடத்தியது. [7][8][9][10]
அமைவிடம் மற்றும் காலநிலை
இந்நகரம் சயந்தேறுத் ஆற்றின் பசுமையான வெற்றியில் அமைந்துள்ளது. மற்றும் சக்ரோசு மலைத்தொடர்|சக்ரோஸ் மலைத்தொடரின்]] மலையடிவாரத்திலும் அமைந்துள்ளது. இதற்கு மிக அருகில் உள்ள மலைத்தொடர் இசுபகானுக்கு சற்று தெற்கே அமைந்துள்ள மவுண்ட் சபே (Mount Soffeh, Kuh-e Soffeh) ஆகும். இசுபகானின் வடக்கே 90 கிலோமீட்டர்கள் (56 மைல்கள்) எந்தவிதமான புவியியல் தடைகளும் இல்லை. அப்பக்கத்தில் இருந்து குளிர்மையான வடக்கு காற்று வீசுகிறது. இந்நகரம் சக்ரோஸ் மலைத்தொடருக்கு கிழக்காக 1,590 மீட்டர்கள் (5,217 அடி) கடல்மட்டத்திற்கு மேல் அமைந்துள்ளது. கோப்பென் காலநிலை வகைப்பாட்டின்படி இசுபகான் வறண்ட காலநிலையைக் கொண்டுள்ளது. இசுபகான் கோடைகாலத்தில் பொதுவாக 35 °C (95 °F) கொண்டு சூடாக காணப்படும். எனினும், இரவு நேரத்தில் குறைந்த ஈரப்பதம் மற்றும் மிதமான வெப்பநிலையுடனும் காலநிலை மிகவும் இனிமையாகவும் காணப்படும். குளிர்காலத்தில், இரவுகள் மிகவும் குளிராக இருக்கும் போது பகல் மிதமாகவும் காணப்படும். 1986/1987 மற்றும் 1989/1990 தவிர்ந்து ஒவ்வொரு குளிர்காலத்திலும் பனிப்பொழிவு குறைந்தது ஒரு தடவையாவது பொழியும்.[11][12]
தட்பவெப்ப நிலைத் தகவல், இசுபகான் (1961–1990, extremes 1951–2010)