இடைக்காட்டூர்
![]() ![]() இடைக்காட்டூர், தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டத்தைச் சேர்ந்த கிராமமாகும்[1]. இவ்வூர் சிவகங்கையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் வைகை ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது. மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்தில், மதுரை-இராமேஸ்வரம் நெடுஞ்சாலையில், முத்தனேந்தல் எனும் கிராமப் பேருந்து நிறுத்தத்திலிருந்து வைகை ஆற்றின் வடகரையில் அரை கிலோ மீட்டர் தொலைவில் இடைக்காட்டூர் கிராமம் உள்ளது. இடைக்காட்டூரில் தொன்மைமிக்க கி.பி.7ஆம் நூற்றாண்டில் பாண்டியமன்னர்களால் ஆரம்பிக்கப்பட்ட ஆழிமணிகண்டேஸ்வரர் சிவாலயம் மற்றும் 780 வருடம் பழமைவாய்ந்த நவக்கிரக கோயில் உள்ளது.[2] இடைக்காட்டூரில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தந்தை பெர்டினாந்து செல்லே (Ferdinandus Celle) என்பவர் 1864ஆம் ஆண்டில், பிரான்சு நாட்டுக் கோதிக் கட்டிடக் கலையில், சிலுவை வடிவத்தில் புனித நெஞ்சக் கிறித்தவ ஆலயத்தை கட்டினார்.[3][4][5][6] அருகில் உள்ள ஊர்கள் திருப்பாச்சேத்தி தெக்கூர் பெரிய கோட்டை பாப்பாங்குளம் பதினெட்டாங்கோட்டை முத்தனேந்தல் சிறுகுடி வரலாறுஇக்கிராமத்தில் இடைக்காடர் எனும் சித்தர் நவக்கிரகங்களை மாற்றி வைத்த நவகிரக கோயில் உள்ளது.[7] ஆழிமணிகண்டேஸ்வரர் கோயிலின் சிறப்புகள் இக்கோவிலானது கி.பி.7ஆம் நூற்றாண்டில் பாண்டியமன்னர்களால் ஆரம்பிக்கப்பட்டு பின்பு பல தடைகளை தாண்டி 2013ஆம் ஆண்டு ஊர்மக்களின் உதவியுடன் கட்டிமுடிக்கப்பட்டு குடமுழுக்கானது விமர்சையாக நடைபெற்றது.இக்கோவில் சிவனை மையமாக வைத்து கட்டப்பட்டிருந்தாலும் முருகனே இங்கு முக்கியத்துவம் பெற்றிருக்கிறார்.முருகனுக்கு பங்குனி மாதம் நடைபெறும் பங்குனி உத்திரம் இக்கோவிலின் சிறப்பாகும்.இக்கோவிலில் முருகப்பெருமான் பாலமசுப்ரமணியனாக காட்சியளிக்கின்றார். மக்கள் தொகை2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இடைக்காட்டூர் கிராமத்தில் 18,658 மக்கள் உள்ளனர். அவர்களில் ஆண்கள் 45 விழுக்காடும், பெண்கள் 45 விழுக்காடும், ஆறு வயதிற்குட்பட்டவர்கள் 10 விழுக்காடும் உள்ளனர். [8] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia