இட்டெர்பியம்(III) நைட்ரைடு

இட்டெர்பியம்(III) நைட்ரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
இட்டெர்பியம் மோனோநைட்ரைடு, அசானிலிடைனிட்டர்பியம், நைட்ரிடோயிட்டெர்பியம்[1]
இனங்காட்டிகள்
24600-77-9 Y
ChemSpider 81760
EC number 246-345-2
InChI
  • InChI=1S/N.Yb
    Key: XLWMYKCPNRBIDK-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 90553
  • N#[Yb]
பண்புகள்
NYb
வாய்ப்பாட்டு எடை 187.06 g·mol−1
தோற்றம் கருப்பு தூள்
அடர்த்தி 6.57 கி/செ.மீ3
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

இட்டெர்பியம்(III) நைட்ரைடு (Ytterbium(III) nitride) என்பது YbN என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இட்டெர்பியமும் நைட்ரசனும் சேற்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[2][3]

தயாரிப்பு

இட்டெர்பியம் ஐதரைடு மற்றும் அமோனியா சேர்மங்கள் 800°பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரிந்து இட்டெர்பியம்(III) நைட்ரைடு உருவாகும்:[4]

2YbH2 + 2NH3 -> 2YbN + 5H2

500-600° செல்சியசு வெப்பநிலையில் அழுத்தத்தின் கீழ் ஐதரசன் வாயுவை கலந்து வினைபுரியச் செய்தாலும் இட்டெர்பியம்(III) நைட்ரைடு உருவாகும். ::2Yb + N2 -> 2YbN

இயற்பியல் பண்புகள்

YbN கருப்பு நிறத் தூளாக உருவாகும். இச்சேர்மம் அதன் உயர் உருகுநிலைக்கு குறிப்பிடத்தக்கதாகும்.[5]

பயன்கள்

YbN மின்னணுவியல் மற்றும் ஒளியியல் துறைகளில் சாத்தியமான பயன்பாடுகளைக் கொண்டுள்ளது.[5]

சிறப்பு உலோகக்கலவைகள், பீங்கான் பொருட்கள், குறைக்கடத்திகள் ஆகியவற்றிற்கான சேர்க்கைப் பொருளாகவும் இது பயன்படுத்தப்படுகிறது.[6]

மேற்கோள்கள்

  1. "ytterbium nitride" (in ஆங்கிலம்). chemsrc.com. Retrieved 31 January 2024.
  2. "Ytterbium Nitride" (in ஆங்கிலம்). American Elements. Retrieved 31 January 2024.
  3. O'Bannon, Loran (6 December 2012). Dictionary of Ceramic Science and Engineering (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 280. ISBN 978-1-4613-2655-7. Retrieved 31 January 2024.
  4. Samsonov, Grigoriĭ Valentinovich (1965). High-temperature Compounds of Rare Earth Metals with Nonmetals (in ஆங்கிலம்). Consultants Bureau. p. 169. Retrieved 31 January 2024.
  5. 5.0 5.1 "Ytterbium Nitride Powder, YbN, CAS 24600-77-9 - Heeger Materials" (in அமெரிக்க ஆங்கிலம்). Heeger Materials Inc. Retrieved 31 January 2024.
  6. "Ytterbium Nitride (YbN) Powder (CAS No. 24600-77-9)" (in ஆங்கிலம்). samaterials.com. Retrieved 31 January 2024.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya