இட்டெர்பியம்(III) அயோடைடு
இட்டெர்பியம்(III) அயோடைடு (Ytterbium(III) iodide) YbI3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தயாரிப்பு30 வளிமண்டல அழுத்தத்தில் 500 பாகை செல்சியசு வெப்பநிலையில் உலோக இட்டெர்பியத்தை அயோடினுடன் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் இட்டெர்பியம்(III) அயோடைடு தயாரிக்கலாம்:[3]
இட்டெர்பியம்(III) ஆக்சைடு, இட்டெர்பியம்(III) ஐதராக்சைடு அல்லது இட்டெர்பியம்(III) கார்பனேட்டு ஆகிய சேர்மங்களூம் ஐதரயோடிக் அமிலத்துடன் வினைபுரிந்து நீரிய கரைசலாக இட்டெர்பியம்(III) அயோடைடு உருவாகிறது:
கரைசலில் இருந்து படிகப்படுத்தப்பட்ட இட்டெர்பியம்(III) அயோடைடு நீரேற்றை அமோனியம் அயோடைடுடன் சேர்த்து சூடுபடுத்தி இதன் நீரற்ற வடிவத்தைப் பெறலாம்:[4] வினைகள்இட்டெர்பியம்(III) அயோடைடு சூடுபடுத்தப்பட்டால் சிதைவடைந்து இட்டெர்பியம்(II) அயோடைடு கிடைக்கும்.:[5]
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia