இட்டெர்பியம்(III) சல்பைடு
இட்டெர்பியம்(III) சல்பைடு (Ytterbium(III) sulfide) Yb2S3 என்ற என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இட்டெர்பியமும் கந்தகமும் சேர்ந்து இந்த இருமச்சேர்மம் உருவாகிறது.[1] தயாரிப்புமந்த வாயுச் சூழலில் தூயநிலை இட்டெர்பியமும் கந்தகமும் 450 முதல் 800 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரிவதால் இட்டெர்பியம்(III) சல்பைடு உருவாகிறது
ஐதரசன் சல்பைடு வாயுவை சூடான இட்டெர்பியம்(III) ஆக்சைடு மீது செலுத்தி வினைபுரியச் செய்தாலும் இட்டெர்பியம்(III) சல்பைடு கிடைக்கிறது.
இயற்பியல் பண்புகள்சாய்சதுரச் சமச்சீரில் a = 0.678 நானோமீட்டர், b = 0.995 நானோமீட்டர், c = 0.361 நானோமீட்டர் என்ற செல் அளவுருக்களுடன் மஞ்சள் நிறத்தில் இட்டெர்பியம்(III) சல்பைடு படிகமாகிறது.[2] பயன்கள்இட்டெர்பியம்(III) சல்பைடு மட்பாண்டங்கள் உற்பத்தியிலும் ஒரு வினையூக்கியாகவும் பயன்படுத்தப்படுகிறது.[3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia