இட்டெர்பியம்(II) புரோமைடு
இட்டெர்பியம்(II) புரோமைடு (Ytterbium(II) bromide) என்பது YbBr2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தயாரிப்புஇட்டெர்பியம்(III) புரோமைடை ஐதரசனுடன் சேர்த்து 500-600 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தினால் ஒடுக்க வினை நிகழ்ந்து இட்டெர்பியம்(II) புரோமைடு உருவாகும்.:[1]
இட்டெர்பியம் உலோகத்துடன் நீர்ம அம்மோனியாவில் கரைக்கப்பட்ட அம்மோனியம் புரோமைடைச் சேர்த்து -78 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்தாலும் இட்டெர்பியம்(II) புரோமைடை உருவாக்க முடியும். இவ்வினையில் முதலில் உருவாகும் அம்மோனியா சேர்மத்தை வெற்றிடத்தில் 200 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தினால் விளைபொருளாக இட்டெர்பியம்(II) புரோமைடு கிடைக்கும்.
இட்டெர்பியம்(III) புரோமைடை உலோக இட்டெர்பியத்துடன் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்தினாலும் இட்டெர்பியம்(II) புரோமைடை தயாரிக்கலாம்:[2]
பண்புகள்இட்டெர்பியம்(II) புரோமைடு அதிக நீருறிஞ்சும் தன்மையுடன் வெளிர் மஞ்சள் நிறத்தில் ஒரு திண்மமாகக் காணப்படுகிறது. ஒரு மந்த வளிமண்டல சூழலில் அதிக வெற்றிடத்தில் மட்டுமே இதை சேமிக்க இயலும். காற்று அல்லது ஈரப்பதத்தில் நிலையற்றதாக உள்ள இச்சேர்மம் விரைவாக ஆக்சிபுரோமைடாக மாறி ஐதரசன் வாயுவை வெளியிடுகிறது. Pbca என்ற இடக்குழுவுடன்[3] செஞ்சாய்சதுரபொ படிகமாக இசுட்ரோன்சியம் அயோடைடு கட்டமைப்பை ஒத்த கட்டமைப்பை இது ஏற்றுக் கொள்கிறது. அல்லது Pnnm என்ற இடக்குழுவுடன் a=6.63 Å, b=6.93 Å, c=4.47Å என்ற அணிக்கோவை அளவுருக்களுடன் கால்சியம் குளோரைடு கட்டமைப்பை ஏற்றுக் கொள்கிறது.[1][3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia