இணைய நெறிமுறைத் தொலைக்காட்சி![]() நாட்டின் சில பகுதிகளிலாவது ஐபி டிவி ஒளிபரப்பப்படும் நாடுகள் இணைய நெறிமுறைத் தொலைக்காட்சி (Internet Protocol television, IPTV) அல்லது ஐபி டிவி வழமையான புவிப்புற, செய்மதி மற்றும் கம்பி வடத் தொலைக்காட்சி வடிவங்களில் அல்லாது இணையம் போன்ற சிப்ப மாற்றுப் பிணையம் வழியே இணைய நெறிமுறை கட்டமைப்பில் பரப்பப்படும் தொலைக்காட்சி சேவைகளாகும். இணைய நெறிமுறைத் தொலைக்காட்சியை மூன்று முதன்மை வகைகளாகப் பிரிக்கலாம்:
இணைய நெறிமுறைத் தொலைக்காட்சி இணையத் தொலைக்காட்சியிலிருந்து வேறுபட்டது; ஐரோப்பிய தொலைத்தொடர்பு சீர்தர நிறுவனம் போன்றவற்றால் வரையறுக்கப்பட்டு தொலைதொடர்பு பிணையங்களில் அதிவிரைவு அணுக்க அலைவரிசைகள் மூலம் பயனரின் வீட்டிற்கு தொலைக்காட்சி அணுக்கப் பெட்டி அல்லது பிற பயனர் இடத்து கருவிகளுக்கு பரப்பப்படுகிறது. இந்தியாவில் பிஎஸ்என்எல், எம்டிஎன்எல், ஏர்டெல் மற்றும் ரிலையன்சு தொலைதொடர்பு நிறுவனங்கள் நாட்டின் பெருநகரங்களில் இச்சேவையை வழங்கி வருகின்றன. இணைய நெறிமுறைத் தொலைக்காட்சியின் அங்கங்கள்
சேவைப் பொதிவீட்டுப் பயனாளர்களுக்கு ஐபி டிவி கோரிய நேரத்து ஒளிதத்துடன் பெரும்பாலும் பிற இணையச் சேவைகளான இணைய அணுக்கம் மற்றும் இணைய நெறிமுறைவழி ஒலிச் சேவைகளுடன் பொதிந்து வழங்கப்படுகின்றன. ஐபி டிவி, விஓஐபி, இணைய அணுக்கம் மூன்றும் இணைந்த வணிக வழங்கல்கள் மும்மடி இயக்கச் சேவை எனப்படுகிறது. இவை நகர்பேசி சேவையுடன் வழங்கப்படின் நான்முறை இயக்கம் எனப்படுகிறது. வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia