டென் (இந்தியா)
டென் நெட்வொர்க்சு லிமிடெட் (DEN Networks Limited) இந்தியாவின் முதன்மை கம்பிவடத் தொலைக்காட்சி சேவை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாகும். 'பல மாநிலங்களிலும் நகரங்களிலும் சேவை வழங்கும் இதன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 11 மில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது.[3] புது தில்லியைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனத்தின் இருப்பு பெரும்பாலும் தில்லி, உத்தரப் பிரதேசம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களிலும் மகாராட்டிரம், குசராத், இராசத்தான்,அரியானா மற்றும் கேரளாவில் குறிப்பிடத்தக்க அளவிலும் உள்ளது. இது நியூசு கார்போரேசன் குழுமத்தின் ஸ்டார் டென் நிறுவனத்துடனான 50-50 கூட்டு முயற்சியாக விளங்குகிறது.[4] டென் கம்பிவடத் தொலைக்காட்சி பல சிறப்பியல்புகளைக் கொண்ட பயனர் இடைமுகம், நவீன மதிப்புக்கூட்டுச் சேவைகளோடு 180க்கும் மேலான அலைவரிசைகளை வழங்குகிறது. பல்தரப்பட்ட இசைச் சேவை, தொலைகாட்சியில் குறு வலைப்பதிவுத்தளம் (பிளாக்.டெல்லி) மற்றும் செய்வினையாற்றக்கூடிய விளையாட்டுகளை தனது சேவைகளில் வழங்குகிறது.[5] மேலும் சில இந்திய நகரங்களில் இணைய அணுக்கமும் வழங்கி வருகிறது.[6] சான்றுகோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia