டாட்டா டெலிசர்விசசு
டாட்டா டெலிசர்விசசு லிமிடெட் (Tata Teleservices Limited, TTSL) (முபச: 532371 ) மகாராட்டிர மாநிலத்தின் மும்பை நகரைத் தலைமையகமாகக் கொண்டு தொலைத்தொடர்பு சேவைகளையும் அகலப்பட்டை இணைய அணுக்கச் சேவைகளையும் வழங்கும் ஓர் இந்திய தொலைதொடர்பு சேவையாளராவர். டாட்டா குழுமத்தின் ஓர் துணை நிறுவனமாக விளங்குகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் டாட்டா டொகோமோ என்ற வணிகப்பெயரில் நகர்பேசி சேவைகளையும் டாட்டா இண்டிகாம் என்ற பெயரில் நிலையிட தொலைபேசிச் சேவைகளையும் சிடிஎம்ஏ நகர்பேசிச் சேவைகளையும் வழங்கி வருகிறது. நவம்பர் 2008இல் சப்பானிய தொலைத்தொடர்பு நிறுவனம் என்டிடி டொகோமோ இநிறுவனத்தின் 26 விழுக்காடு பங்குகளைஏறத்தாழ ரூ.13,070 கோடிகளுக்கு ($2.7 பில்லியன்) வாங்கியது.[2] பெப்ரவரி 2008இல் ஐக்கிய இராச்சியத்தின் வெர்ஜின் குழுமத்துடன் இணைந்து வெர்ஜின் மொபைல் என்ற மெய்நிகர் நகர்பேசிச் சேவைகளை வழங்கி வருகிறது. சான்றுகோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia