இந்திய தேசிய சின்னங்கள்இந்திய தேசிய சின்னங்கள் (National symbols of India) என்பது இந்தியாவின் அதிகாரபூர்வ சின்னங்களை குறிப்பதாகும். இந்திய குடியரசு, வரலாற்று ஆவணம், கொடி, சின்னம், தேசிய கீதம், நினைவு கோபுரம் மற்றும் பல தேசிய கதாநாயகர்கள் உட்பட பல அதிகாரப்பூர்வ தேசிய சின்னங்களைக் கொண்டுள்ளது. தேசியக் கொடியின் வடிவமைப்பு 1947ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் சற்று முன்பு அரசியலமைப்பு சபையால் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.[1] தேசிய விலங்கு, பறவை, பழம் மற்றும் மரம் ஆகியவை பல்வேறு சந்தர்ப்பங்களில் நியமிக்கப்பட்ட பிற சின்னங்கள் ஆகும்.[2] தேசியச் சின்னம்இந்தியாவின் தேசியச் சின்னம், சாரநாத்தில் உள்ள அசோகத் தூணிலிருந்து எடுக்கப்பட்டது. இதில் நான்முகச் சிங்கமும் வலப்பக்கம் காளையும் இடப்பக்கம் குதிரையும் இருக்கும். மேலும் காளை, நாட்டின் கடின உழைப்பு மற்றும் உறுதியையும் குதிரை, ஆற்றல் மற்றும் வேகத்தையும் குறிக்கின்றன. இதன் பீடத்தின் கீழே வாய்மையே வெல்லும் என்னும் பொருள் கொண்ட ”சத்ய மேவ ஜயதே” என்ற வார்த்தைகள் கொண்ட தேவநாகரி எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. இஃது இந்திய தேசியச் சின்னமாக 1950-ஆம் ஆண்டு சனவரி 26-இல் இந்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.[3] |- பயன்பாடுதேசியச் சின்னம் அமைச்சர்கள் பயன்படுத்தும் எழுதுதாள்களில் நீல வண்ணத்திலும், அதிகாரிகள் பயன்படுத்தும் எழுதுதாள்களில் சிவப்பு வண்ணத்திலும் அச்சிடப்பட வேண்டும். மக்களவை உறுப்பினர்கள் பச்சை வண்ணத்திலும், மாநிலங்களவை உறுப்பினர்கள் சிவப்பு வண்ணத்திலும் தேசியச் சின்னத்தைப் பயன்படுத்த வேண்டும். தேசியச் சின்னங்களுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும். இந்திய தேசிய சின்னங்களை அவமதிப்பவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள். தேசியக் கொடி![]() கடும் காவி, கடும் பச்சை, மத்தியில் தூய வெண்மை ஆகிய மூன்று நிறங்களும் அடங்கிய மூவனணக் கொடியே இந்தியாவின் தேசியக் கொடி. வெண்பட்டையின் நடுவே கடல் நீல வண்ணம் கொண்ட 24 அரும்புக் கால்களை உடைய அசோக சக்கரம் ஒன்று உள்ளது.காவி நிறம் தைரியம் மற்றும் தியாகத்தையும்,வெண்மை நிறம் உண்மை மற்றும் அமைதியையும், பச்சை நிறம் நம்பிக்கை மற்றும் வீரத்தையும் குறிப்பதாக கற்பிக்கப்பட்டது. மூவர்ண கொடியை அரசியல் நிர்ணய சபை 1947 ஜூலை 22 ல் ஒருமித்த கருத்துடன் அங்கீகரித்தது.[4] ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பிங்களி வெங்கைய்யா என்பவர் தேசிய கொடியை வடிவமைத்தார். தேசிய கீதம்இந்திய அரசியமைப்பு குழு 1950 ஜனவரி 24 ல் ”ஜன கண மன ” பாடலை நாட்டின் தேசிய கீதமாக அங்கிகரித்தது.[5] 1911 டிசம்பர் 27ல் கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் முதன் முதலாகப் பாடப்பட்டது. 1912ல் தாகூரின் ”தத்துவ போதினி” பத்திரிக்கையில் பாரத விதாதா என்னும் தலைப்பின் கீழ் வெளியிடப்பட்டது. இந்த பாடலை ஏறக்குறைய 52 விநாடிகளில் பாடிமுடிக்க வேண்டும். தேசியப் பாடல்தேசிய கீதத்தை விட வந்தே மாதரம் எனத் தொடங்கும் தேசியப்பாடல் பழமையானது. 1882 ல் பங்கிம் சந்திரனின் ”ஆனந்த மட்” நூல் வெளியானது. எனவே இதற்கு முன்பே இது எழுதப்பட்டிருக்க வேண்டும்.1896 ல் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் இது முதன்முதலாகப் பாடப்பட்டது. இதற்கு இசையமைத்தவர் இரவீந்திர நாத் தாகூர்.[6] |- தேசியப் பாடலின் ஸ்ரீஅரவிந்தரின் ஆங்கில மொழிப்பெயர்ப்பின் தமிழ் பொருள்.
தேசிய நாட்காட்டிசக வருட நாட்காட்டி 1957 ஆண்டு மார்ச் 22 முதல் தேசிய நாட்காட்டியாக அங்கீகரிக்கப்பட்டது. சக ஆண்டு 365 நாள்களை கொண்டது. சாதாரண ஆண்டில் சைத்ரா முதல் தேதி மார்ச் 22 ஆகும். லீப் வருடத்தில் முதல் தேதி மார்ச் 21 ஆகும். தேசிய நாள்காட்டி சக ஆண்டு 1879 ல் சைத்ரா முதல் நாளில் தொடங்கியது.[7] தேசிய விலங்குஊன் உண்ணும் விலங்குகளில் கவர்ச்சியும், கம்பீரமும் மிகுந்த புலி இந்தியாவின் தேசிய விலங்கு ஆகும். 1972 ல் புலி இந்தியாவின் தேசிய விலங்காக தேர்ந்தெடுக்கப்பட்டது. தேசிய விலங்கை கொல்வது சட்டப்படி குற்றம் ஆகும். எனவே அவற்றை பாதுகாக்க வேண்டும். 2001 ல் புலிகளின் எண்ணிக்கை 3642 ஆக இருந்தது.ஆனால் இப்போது 1411 ஆக குறைந்துள்ளது. 1973ல் தொடங்கப்பட்ட புலிகள் பாதுகாப்புத் திட்டம் ஒரு முழுமையான சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டமாகும்.[8] தேசியப் பறவை
இந்தியாவில் உள்ள இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பறவைகளில் மிக கவர்ச்சியான மயிலே இந்தியாவின் தேசிய பறவை ஆகும். 1963 ல் மயில் இந்தியாவின் தேசியப் பறவையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. மயிலைப் பற்றிய குறிப்புகள் ஆதிநூலான ரிக் வேதத்தில் உள்ளன. இது 2500 மீட்டர் உயரமான பகுதிகளிலும் காணப்படும்.[9] தேசிய காய்கறிமஞ்சள் பூசணி தேசிய மொழிஅரசியல் சட்டத்தின் பிரிவு 343 (1) ன் படி இந்தி மொழியே நாட்டின் அதிகார பூர்வ அலுவல் மொழி. இத்துடன் ஆங்கிலத்தையும் அதிகாரபூர்வமாக பயன்படுத்தவும் அரசியலமைப்புச் சட்டம் அனுமதித்துள்ளது. ஆனாலும் அரசியல் சட்டத்தின் எட்டாம் அட்டவணைப் படி தற்போது இந்தி, தமிழ், மலையாளம், வங்காளி, அசாமி, தெலுங்கு,மராத்தி, ஒரியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், சிந்தி, குஜராத்தி, காஷ்மீரி, உருது, கன்னடம், கொங்கணி, மணிப்புரி, நேப்பாளி, தோஹ்ரி, போடோ, சந்தாலி, மைதிலி என்னும் 22 மொழிகள் இடம்பெற்றுள்ளன. பிற சின்னங்கள
மேற்கோள்கள்
உசாத்துணை
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia